மூவி ட்ராக்கர்ஸ்களை கட்டுப்படுத்த புரொடியூசர்ஸ் நியூ ப்ளான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு திரைப்படம் வெளியானால் அதன் வசூல் நிலவரம் சரியாக தெரிய குறைந்த பட்சம் ஒரு வார காலம் ஆகும்.

ஆனால் ரிலீசான முதல் நாள் இரவு காட்சி தொடங்கிய உடனே ட்ராக்கர்ஸ் என்ற பெயரில் சிலர் முதல் நாள் வசூல் இத்தனை கோடிகள் என டன் கணக்கில் பொய்யை சொல்ல ஆரம்பித்து விடுகின்றனர்.

இவர்கள் திரைத்துறையை சார்ந்து இருக்கிறார்கள் என்பதால் இதை எல்லாம் நிஜம் என்றே நம்பி மற்றவர்களும் அந்த வசூல் தொகையை ட்ரெண்ட் செய்கின்றனர்.

சிலர் கொடுக்கும் கூலிக்காக இதை எல்லாம் செய்கின்றனர் என்பதை அறியாதவர்கள் தான் இதனை ட்ரெண்டாக்குகின்றனர்.

இப்படி அதிகப்படியான பொய்களை முக்கியமாக விஜய், அஜித் படங்களுக்கு சொல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள் இந்த ட்ராக்கர்ஸ்.

சமீபத்தில் இவர்களின் பொய்யான தகவல்களால் மாட்டிக் கொண்டவர் நடிகர் விஜய்.

இதனால் பிகில் பட தயாரிப்பாளர், பைனான்சியர் வீடுகளில் வருமான வரி சோதனைகள் நடைபெற்றது.

இதை தடுக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் விரைவில் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளனர்.

இதுபோல் தெலுங்கு திரையுலகிலும் பிரச்சினைகள் தொடரவே அங்குள்ள திரைப்படத் தயாரிப்பாளர்கள் (கில்டு) புதிய நடவடிக்கையை எடுக்கவுள்ளனர்.

அண்மையில் வெளியான ‘சரிலேரு நீக்கெவரு, அலா வைகுந்தபுரம்லோ’ ஆகிய படங்கள் வசூல் விவரங்களை அங்குள்ள ட்ராக்கர்ஸ்களும் இங்குள்ள ஒரு சிலரும் பொய்த் தகவல்களை போட்டி போட்டுக் கொண்டு அளித்தார்கள்.

வருகிற ஏப்ரல் மாதம் வெளியாக உள்ள படங்களின் வசூல் விவரங்களை தயாரிப்பாளர் கில்டு சங்கமே வெளியிடப் போகிறதாம்.

இதனால் சரியான வசூல் விவரங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

தமிழ் சினிமாவிலும் இது நடைபெற வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஏனென்றால் தங்களுக்கு பிடித்த நடிகர்களையும், லட்சணக்கணக்கில் பணம் கொடுக்கும் தயாரிப்பாளர்களை சந்தோஷப்படுத்த இது போன்ற வேலைகளில் ஈடுபடும் ட்ராக்கர்ஸை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே பலரின் ஆவலாக உள்ளது.

Producers plans to control fake movie trackers

காதலன் ரிட்டன்ஸ்..; பிரபுதேவாவை இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடன இயக்குனராக தன் சினிமா பயணத்தை ஆரம்பித்த பிரபுதேவாவுக்கு நடிகராக ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்த படம் காதலன்.

இதன் பின்னர் பல படங்களில் நாயகனாக நடித்து விஜய், சல்மான் கான் உள்ளிட்ட பல நடிகர்களின் ஆஸ்தான இயக்குனராகிவிட்டார்.

தற்போது காதலன் ரிட்டர்ன்ஸ் ஆகிறார். ஆம். மீண்டும் நடிகராக புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

கேப்டன் விஜயகாந்த் படத்தலைப்பில் பிரபுதேவா நடிக்கும் படம்

பரதன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.

முற்றிலும் புதிய வகையான கதை களத்தில் இந்த திரைப்படம் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Prabhu Deva teams up with Adhik Ravichandran

பெண்கள் பாதுகாப்பு குறித்த போலீஸ் மீம்ஸ்க்கு உதவிய அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரைப்படத்தில் வரும் காட்சிகளை மீம்ஸ்களாக உருவாக்கி வருவதே பலரின் வேலையாக உள்ளது. இதற்காக நிறைய மொபைல் ஆப்கள் வந்துள்ளன.

அதிலும் வடிவேலுவின் மீம்ஸ்களுக்கு தான் தமிழகத்தில் நல்ல மவுசு.

தற்போது தேனி மாவட்ட காவல்துறையும் பொதுமக்களிடம் காவலன் ஆப் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மீம்ஸ்களை உருவாக்கியுள்ளது.

ஏ.எம். ரத்னத்துடன் இணைய மறுத்தாரா நடிகர் அஜித்.?

விஸ்வாசம் படத்தில் வில்லன் ஆட்கள் நயன்தாரா மகளை துரத்துவார்கள்.

அப்போது அவர் தன் அம்மா நயன்தாராவிடம் தெரிவிக்க, அதற்கு நயன்தாரா, ‘நீ கவலைப்படாத அவர் பார்த்துக்குவார்’ என்பது போன்ற வசனம் இருக்கும்.

அப்போது அஜித் வந்து காப்பாற்றுவார்.

அந்த காட்சியை மீம்ஸ் ஆக மாற்றியுள்ளனர்.

Kavalan SOS App பட்டனை அழுத்து என்பதாக அந்த மீம்ஸ் உள்ளது.

Ajith Viswasam movie scenes as memes for Theni Police dept

புது மாப்பிள்ளை யோகி பாபுக்கு தங்க செயின் கொடுத்த ‘கர்ணன்’ தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் நடித்து வரும் ‘கர்ணன்’ படத்தை மாரி செல்வராஜ் இயக்க வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார்.

தனுஷிற்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடிக்க, நட்டி என்கிற நடரஜான், லால் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

Yogi Babu marriage photos

இதில் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு சமீபத்தில் திருமணமான நிலையில் கர்ணன் சூட்டிங்கில் வந்து கலந்துக் கொண்டார்.

அப்போது தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கேக் வெட்டிக்கொண்டாடி யோகி பாபுவிற்கு தங்க செயின் பரிசளித்தார் தனுஷ்.

Dhanush gifted Gold chain to Yogi babu in Karnan spot

பிரபு சாலமன் – ராணா – விஷ்ணு விஷால் இணைந்த ‘காடன்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்ரம் பிரபு மற்றும் லட்சுமி மேனன் ஜோடியாக நடித்த ‘கும்கி’ படத்தை இயக்கினார் பிரபு சாலமன்.

இதில் யானைக்கும், பாகனுக்குமான உறவை மையமாகக் கொண்டு இயக்கியிருந்தார்.

தற்போது அதனை போல் காடன் என்ற பெயரில் புதிய படத்தை இயக்கியுள்ளர்.

இதனை பெரிய பட்ஜெட்டில் ஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளதாம்.

தமிழில் காடன், தெலுங்கில் ஆரண்யா மற்றும் ஹிந்தியில் ஹாதி என்று பெயரிட்டுள்ளனர்.

இதில் ராணா டகுபதி, விஷ்ணு விஷால், புல்கிட் சாம்ராட் ஆகிய மூன்று மொழிகளை சேர்ந்த நடிகர்கள் நடித்துள்ளனர்.

ஸ்ரேயா, சோயா உசேன் நாயகிகளாக நடிக்கிறார்கள்.

லைப் ஆப் பை, தோர் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களுக்கு கிராபிக்ஸ் பணிகளை செய்த பிராணா ஸ்டுடியோ இந்த படத்துக்கு கிராபிக்ஸ் பணிகளை. செய்கிறது.

3 இடியட்ஸ், பிகே , பிங்க் படங்களுக்கு இசையமைத்த சாந்தனு மொய்த்ரா இசையமைக்க ரசூல் பூக்குட்டி ஒலிப்பதிவு செய்கிறார்.

வருகிற ஏப்ரல் 2ஆம் தேதி படத்தை வெளியிடுகின்றனர்.

Prabhu Solomons Kaadan to release on April 2

முதன் முறையாக நடுவானில் பாடலை வெளியிடும் ’சூரரைப் போற்று’ டீம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுதா கொங்காரா இயக்கத்தில் ஜிவி. பிரகாஷ் இசையில் நடிகர் சூர்யா நடித்துள்ள படம் ’சூரரைப்போற்று’.

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

நாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்க, இவர்களுடன் கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்ககளில் நடித்துள்ளனர்.

நெடுமாறன் ராஜாங்கம் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா பைலட் ஆபீஸராக நடித்துள்ளார்.

இந்த படத்தின் போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் ‘சூரரைப் போற்று’ இசை விழா

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் இன்று மட்டும் அடுத்தடுத்து தொடர்ந்து மூன்று அப்டேட்டுகளை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்

‘வெய்யோன் சில்லி’ என்ற இரண்டாம் ரொமான்டிக் சிங்கிள் டிராக் வருகிற பிப்ரவரி 13ம் தேதி spicejet boeing 737 ரக விமானத்தின் மூலம் நடுவானில் வெளியிடவிருப்பதாக அறிவித்திருந்தனர்.

ஹரி இயக்கத்தில் சூர்யாவுடன் மோதும் பிரசன்னா

ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் இந்த படத்திற்கு ஏர்லைன் பிராண்டிங் செய்ய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாம்.

ஸ்பைஷ் ஜெட் நிறுவனத்தின் சேர்மன் மற்றும் மேனேஜிங் டைரக்டரான அஜய் சிங், சூரரைப் போற்று பட புதிய போஸ்டரை வருகிற 13ம் தேதி வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

Soorarai Pottru Veyyon Silli song launch on Spicejet Boeing 737

More Articles
Follows