தொழிலாளர்களுக்காக மட்டுமே சினிமா அல்ல… விஷால் கடிதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு…

பெறுநர்

திரு. செல்வமணி மற்றும் நிர்வாகிகள்,
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம்
சென்னை.

அன்புடையீர் வணக்கம்

தற்போது நிலவி வரும் பிரச்சனைகள குறித்த தங்கள் கடிதம் ஊடகங்கள் மூலம் கிடைத்தது. அதில் உங்களதுபக்க நிலைகளையும் நியாயங்களையும் விளக்கியிருந்தீர்கள்.

மேலும் தயாரிப்பாளர் சங்கத்துடன் மீண்டும் இணைந்து செயல்படுவது குறித்து விருப்பம் தெரிவித்து எழுதியதும் மகிழ்ச்சி. எனினும் ஆகஸ்ட் 1 முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடபோவதாக அறிவித்திருப்பது வருத்தத்திற்குரியது.

இந்நிலையில் நாங்கள் வழக்கம்போல தயாரிப்பு பணிகளில் ஈடுபட உள்ளோம். ஆகவே எங்கள் உறுப்பினர்களின் படப்பிடிப்பிற்கு எந்தவொரு தடங்கலும் ஏற்படுத்த வேண்டாம் என உங்கள் உறுப்பினர்களை கேட்டுக்கொள்கிறோம்.

அவ்வாறு நிகலும் பட்சத்தில் நாங்கள் சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் இந்த நேரத்தில் தங்களுக்கு ஒரு விஷயத்தினை தெளிவுபடுத்த விரும்புகிறோம். தொழிலாளர்கள் என்றைக்கும் எங்களுக்கு எதிரிகள் கிடையாது. ஏனெனில், தொழிலாளர்கள் மூலமே பல திரைப்படங்கள் நல்ல முறையில் உருவாகி திரைதுறைக்கு பல நற்பலன்கள் கிடைத்துள்ளது. அவ்வகையில் நாங்கள் எந்த ஒரு நிலையிலும் பெப்சியுடன் இணைந்து செயல்பட மாட்டோம் என்று கூறவில்லை.

ஆனால் பெப்சியுடன் மட்டும் தான் வேலை செய்யவேண்டும் என்பதை மட்டுமே மறுக்கிறோம். முந்தைய காலகட்ட சினிமாவில், தயாரிப்பு தொழில் நன்றாக இருந்தது, ஆனால் இன்றைய சூழலில் தயாரிப்பு தொழில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

அதே வேலையில் தயாரிப்பு தொழில் சார்ந்த மற்ற அனைத்து தொழில்களும் நன்றாக உள்ளதும் தாங்கள் நன்கு அறிந்ததே. இங்கு காலங்காலமாக முறையற்று வாங்கிவரும் பொது விதிகள் சார்ந்த சம்பளங்கள் சிலவற்றை தான் தற்போது முறைப்படுத்துகிறோம்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை நடக்கும் பொழுது ஒரு குறிப்பிட்ட சங்கம் பிரச்சனை எற்படுத்துவதும், அதில் தயாரிப்பாளர்கள் ஒரு விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டு, அதன் மூலம் பெப்சியே வேண்டாம் என்று முடிவு எடுப்பதும், பின்பு சமாதான உடன்படிக்கை ஏற்பட்டு மீண்டும் உறவை தொடர்வது என்பதும் வாடிக்கையாக உள்ளது, ஆனால் இதே விசயம் ஆண்டாண்டு காலமாக திரும்ப திரும்ப நடப்பது வேடிக்கையாகவும் உள்ளது.

இதில் தயாரிப்பாளர்கள் பக்க நியாயங்களை யாரும் இன்றுவரை சிந்தித்ததே இல்லை என்பது வருத்தத்திற்குரியது. ஆகவே நமக்கு இடையிலான உறவுக்கு என்றுமே அந்நிய சக்திகள் பங்கம் விளைவித்தது இல்லை என்பதையும், உங்களில் ஒரு அங்கமாக விளங்கும் டெக்னீஷியன் யூனியன் மட்டுமே என்பதை இங்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டு உள்ளோம்.

மேலும் இந்த சங்கத்தின் தவறுகளுக்கு சாதகமாகவே சம்மேளனம் என்றும் இருப்பதை பார்க்கையில் ஒரு 40 ஆண்டுகால அமைப்பு சினிமா தொழிலுக்காகத் தான் தொழிலாளர்களே தவிர்த்து தொழிலாளர்களுக்காக மட்டுமே சினிமா அல்ல என்பதை மறந்துவிட்டதோ என எண்ணத்தோன்றுகிறது.

25 ஆயிரம் குடும்பங்களை கொண்ட ஒரு அமைப்பை கட்டுக்கோப்புடன் வழிநடத்தி அவர்கள் நலன் காப்பது கடினம் என்பதை அறிந்த தங்களுக்கு 10,00,000 குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கும் தயாரிப்பு தொழிலை செய்துவரும் தயாரிப்பாளர் நலன் காப்பது எவ்வளவு கடினம் என்பதை அதன் நிர்வாகக்குழுவில் அங்கமாகவும் இருந்த தங்களுக்கு நாங்கள் தெளிவுபடுத்துவது தேவையற்றது என கருதுகிறோம்.

தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகியை குறிப்பிட்ட டெக்னீஷியன் யூனியனில் உள்ள திரு.தனபால் கீழ்தரமான வார்த்தைகளால் விமர்சித்தது எங்களை பெரிதளவில் காயப்படுத்தியிருந்தாலும் சினிமா தொழிலின் தாய் ஸ்தானதில் உள்ள அமைப்பாக நாங்கள் இந்த விசயத்தை புறந்தள்ளுகிறோம்.

ஆனால் டெக்னீஷியன் யூனியன் எனும் அமைப்பு எல்லா காலகட்டத்திலும் தயாரிப்பு தொழிலுக்கு எதிராகவே செயல்பட்டு வந்துள்ளது என்கிற அடிப்படையில் அந்த ஒரு அமைப்புடன் மட்டும் எங்களால் என்றைக்கும் தொழில் உறவை தொடர முடியாது.

இது அவர் தனிப்பட்ட முறையில் திட்டியதற்காக எடுத்த முடிவு இல்லை. ஒட்டுமொத்த தயாரிப்பாளர்கள் மற்றும் தயாரிப்பு தொழில் சார்ந்த அனைவரின் நலன் காக்க எடுத்த முடிவு ஆகும்.

இப்பவும் நாங்கள் தொழிலாளர்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. எங்களுக்கு என்றும் தொழிலாளர்கள் வேண்டும். பெப்சியுடன் இணைந்து பணியாற்ற எங்களுக்கு விருப்பம் தான்.

ஆனால் டெக்னீஷியன் யூனியனுடன் முழுவதுமாக இனி இணைந்து செயல்பட முடியாது. மேலும் பில்லா பாண்டி தயாரிப்பாளருக்கு எற்பட்ட இழப்பை ஈடு செய்யும் பட்சத்தில் மற்ற சங்கங்கள் குறித்த சம்பள பேச்சுவார்த்தையை தொடர்ந்து நடத்த எங்களுக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை.

நன்றி

நிர்வாகிகள் தயாரிப்பாளர்கள் சங்கம்
சென்னை

விஜய்-விஜய்சேதுபதி வரிசையில் விஜயகாந்த் மகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடித்த வரும் மெர்சல் மற்றும் விஜய்சேதுபதி நடித்து வரும் கருப்பன் ஆகிய படங்களின் பர்ஸ்ட் லுக் சில தினங்களுக்கு முன் வெளியானது.

இந்த இரு படங்களின் பர்ஸ்ட் லுக் ஜல்லிக்கட்டு காளையை மையப்படுத்தியே வடிவமைக்கப்பட்டு இருந்தது.

இவர்களை தொடர்ந்து விஜயகாந்தின் மகன் ஷண்முக பாண்டியனின் ‘மதுரவீரன்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரும் அதே போல அமைந்துள்ளது.

இந்த ஃபர்ஸ்ட் லுக்கை சமீபத்தில் விஜய்காந்த் வெளியிட்டார்.

இப்படத்தை ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இயக்கி வருகிறார்.

வி.ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்தில் மீனாட்சி, வேல ராமமூர்த்தி, சமுத்திரக்கனி, மைம் கோபி, பி.எல்.தேனப்பன், பாலசரவணன், ‘நான் கடவுள் ராஜேந்திரன்’ உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.

சந்தோஷ் தயாநிதி இசையமைக்கும் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல்வாரம் மதுரையில் நடக்கவிருக்கிறது.

Vijayakanth launched his son Madura Veeran movie first look poster

 

நாளை முதல் பெஃப்சி ஸ்டிரைக்; ஆர்.கே.செல்வமணி கடிதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஃபெஃப்சி அமைப்பை சார்ந்தவர்களால் சினிமா சூட்டிங்குக்கு சில பிரச்சினைகள் வந்ததையடுத்து அந்த அமைப்பை சாராதவர்களை வைத்து படப்பிடிப்பை நடத்திக் கொள்ளலாம் என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அறிவித்தார்.

இப்பிரச்சினைகள் காரணமாக ஃபெஃப்சி அமைப்பு நாளை (1-8-17) முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஃபெஃப்சி அமைப்பின் சார்பில் அதன் தலைவர் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் விவரம் வருமாறு:

‘‘ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருப்பது வருத்தத்திற்குரியது. ஆனால் நாங்கள் வழக்கம்போல் தயாரிப்பு பணிகளில் ஈடுபட உள்ளோம்.

ஆகவே எங்கள் உறுப்பினர்களின் படப்பிடிப்பிற்கு எந்தவொரு தடங்கலும் ஏற்படுத்த வேண்டாம் என உங்கள் (ஃபெஃப்சி) உறுப்பினர்களை கேட்டுக்கொள்கிறோம்.

ஏதாவது தடங்கலை ஏற்படுத்தும் பட்சத்தில் நாங்கள் சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வெண்டியிருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் இந்த நேரத்தில் தங்களுக்கு ஒரு விஷயத்தை தெளிவுப்படுத்த விரும்புகிறோம். தொழிலாளர்கள் என்றைக்கும் எங்களுக்கு எதிரிகள் கிடையாது.

ஏனெனில் தொழிலாளர்கள் மூலமே பல திரைப்படங்கள் நல்ல முறையில் உருவாகி திரைத்துறைக்கு பல நற்பலன்கள் கிடைத்துள்ளது. அவ்வகையில் நாங்கள் எந்த ஒரு நிலையிலும் ஃபெஃப்சியுடன் இணைந்து செயல்பட மாட்டோம் என்று கூறவில்லை.

ஆனால் ஃபெஃப்சியுடன் மட்டும் தான் வேலை செய்ய வேண்டும் என்பதை மட்டும் மறுக்கிறோம். முந்தைய காலகட்ட சினிமாவில் தயாரிப்பு தொழில் நன்றாக இருந்தது. ஆனால் இன்றைய சூழலில் தயாரிப்பு தொழில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

அதே வேளையில் தயாரிப்பு தொழில் சார்ந்த மற்ற அனைத்து தொழில்களும் நன்றாக உள்ளதும் தாங்கள் நன்கு அறிந்ததே!

இங்கு காலங்காலமாக முறையற்று வாங்கி வரும் பொதுவிதிகள் சார்ந்த சம்பளங்கள் சிலவற்றை தான் தற்போது முறைப்படுத்துகிறோம்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை நடக்கும்பொழுது ஒரு குறிப்பிட்ட சங்கம் பிரச்சனை ஏற்படுத்துவதும், அதில் தயாரிப்பாளர்கள் ஒரு விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டு அதன் மூலம் ஃபெஃப்சியே வேண்டாம் என்று முடிவு எடுப்பதும், பின்பு சமாதான உடன்படிக்கை ஏற்பட்டு மீண்டும் உறவை தொடர்வது என்பதும் வாடிக்கையாக உள்ளது.

ஆனால் இதே விஷயம் ஆண்டாண்டு காலமாக திரும்பத் திரும்ப நடப்பது வேடிக்கையாகவும் உள்ளது. இதில் தயாரிப்பாளர்கள் பக்க நியாயங்களை யாரும் இன்றுவரை சிந்தித்ததே இல்லை என்பது வருத்தத்திற்குரியது.

ஆகவே நமக்கு இடையிலான உறவுக்கு என்றுமே அந்நிய சக்திகள் பங்கம் விளைவித்தது இல்லை என்பதையும், ஃபெஃப்சியில் ஒரு அங்கமாக விளங்கும் டெக்னீஷியன் யூனியன் மட்டுமே என்பது இங்கு சுட்டிக்காட கடமைப்பட்டுள்ளோம்.

மேலும் இந்த சங்கத்தின் தவறுகளுக்கு சாதகமாகவே சம்மேளம் என்றும் இருப்பதை பார்க்கையில் 40 ஆண்டுகால அமைப்பு சினிமா தொழிலுக்காகதான் தொழிலாளர்களே தவிர, தொழிலாளர்களுக்காக மட்டுமே சினிமா அல்ல என்பதை மறந்து விட்டதோ என எண்ணத்தோன்றுகிறது.

25 ஆயிரம் குடும்பங்கள் கொண்ட ஒரு அமைப்பை கட்டுகோப்புடன் வழிநடத்தி அவர்கள் நலன் காப்பது கடினம் என்பதை அறிந்த தங்களுக்கு 10,00,000 குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கும் தயாரிப்பு தொழிலை செய்து வரும் தயாரிப்பாளர் நலன் காப்பது எவ்வளவு கடினம் என்பதை அந்த நிர்வாகக் குழுவில் அங்கமாகவும் இருந்த தங்களுக்கு நாங்கள் தெளிவுப்படுத்துவது தேவையற்றது என்று கருதுகிறோம்.

தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகியை குறிப்பிட்ட டெக்னீஷியன் யூனியனில் உள்ள திரு.தனபால் கீழ்தரமான வார்த்தைகளால் விமர்சித்தது எங்களை பெரிதளவில் காயப்படுத்தியிருந்தாலும் சினிமா தொழிலின் தாய் ஸ்தானத்தில் உள்ள அமைப்பாக நாங்கள் இந்த விஷயத்தை புறந்தள்ளுகிறோம்.

ஆனால் டெக்னீஷியன் யூனியன் எனும் அமைப்பு எல்லா காலகட்டத்திலும் தயாரிப்பு தொழிலுக்கு எதிராகவே செயல்பட்டு வந்துள்ளது என்கிற அடிப்படையில் அந்த ஒரு அமைப்புடன் மட்டும் எங்களால் என்றைக்கும் தொழில் உறவை தொடர முடியாது.

இது அவர் தனிப்பட்ட முறையில் திட்டியதற்காக எடுத்த முடிவு இல்லை. ஒட்டுமொத்த தயாரிப்பாளர்கள் மற்றும் தயாரிப்பு தொழில் சார்ந்த அனைவரின் நலன் காக்க எடுத்த முடிவு ஆகும்.” என அறிவித்துள்ளார் ஆர்.கே.செல்வமணி.

Vishal statement and FEFSI Strike RK Selvamani reaction

2.0 தமிழ்ப்படத்திற்காக பேங்காங் செல்லும் சிவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, திஷா பாண்டே உள்ளிட்டோர் நடித்து வெளியான படம் ‘தமிழ்ப் படம்’.

கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் தமிழ் சினிமாவின் அனைத்து நடிகர்கள் மற்றும் சிறந்த காட்சிகள் அனைத்தையும் கிண்டல் செய்திருந்தனர்.

இப்படத்தை திரையுலக பிரபலங்கள் கடுமையாக விமர்சித்தாலும், ரசிகர்கள் ஆதரித்தனர்.

அதன்பின்னர் ‘இரண்டாவது படம்’ என்ற படத்தை இயக்கினார் சி.எஸ்.அமுதன். அப்படம் இதுவரை வெளியாகவில்லை.

தற்போது ‘தமிழ்ப்படம்’ 2-ம் பாகம் தொடங்கப்பட்டுள்ளதாக சி.எஸ்.அமுதன் தெரிவித்துள்ளார்.

இதிலும் மிர்ச்சி சிவா நாயகனாக நடிக்க சஷிகாந்த் தயாரிக்கவுள்ளார்.

இதுகுறித்து இயக்குனர் கூறுகையில்…

ஆமாம். தமிழ்ப்படம் 2.0 ஆரம்பமாக உள்ளது. இப்படத்திலும் லிவிங் லெஜண்ட் சிவா நடிக்கிறார்.

இதன் பயிற்சிக்காக சிவா பேங்காக் செல்கிறார். ஆனால் ஏன்? எதற்கு என்றெல்லாம் கேட்காதீர்கள்.” என்றார்.

இது உலக மகா நடிப்புடா சாமி என சொல்லத்தோன்றுகிறதா? அதேதான்.

Director CS Amudhan clarifies about TamizhPadam2

C.S.Amudhan‏Verified account @csamudhan
And finally… #TP2PointO #TamizhPadam2

இந்திய சுதந்திர தினத்தில் மெர்சல் டீசர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மெர்சல் படத்தின் சூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

தற்போது படமாக்கப்பட்டு வரும் காட்சிகளில் விஜய், சமந்தா உள்ளிட்ட குழுவினர் நடித்து வருகின்றனர்.

இன்னும் ஒரு வாரத்தில் இதன் சூட்டிங்கை முடிக்க திட்டமிட்டு இருக்கிறாராம் அட்லி.

இதன் இசை வெளியீட்டு விழாவை ஆகஸ்ட் 20ஆம் தேதி நடத்த உள்ளனர்.

இதே நாளில் படத்தின் டீசரும் வெளியாகக்கூடும் என தகவல்கள் வெளியானது.

ஆனால் அதற்குமுன்பே சுதந்திர தினத்தை முன்னிட்டு இதன் டீசர் வெளியாகும் என கூறப்படுகிறது.

இது நம் இந்திய தேசத்தின் 70ஆம் ஆண்டு சுதந்திர தினம் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியா பவானிசங்கருக்கு கைகொடுக்கும் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புதிய தலைமுறை டிவியில் செய்தி வாசிப்பாளராக தன் பயணத்தை தொடங்கி பின்னர் சீரியல் நடிகையாகி சின்னத்திரையில் பெரிய ரசிகர் வட்டத்தையே உருவாக்கியவர் பிரியா பவானி சங்கர்.

இவர் தற்போது கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் மேயாத மான் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார்.

வைபவ் நாயகனாக நடிக்கும் இப்படத்தின் டீசரை இன்று மாலை 4 மணிக்கு தனுஷ் வெளியிடுகிறார்.

ரத்னகுமார் இயக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் மற்றும் பிரதீப்குமார் இசையமைத்து வருகின்றனர்.

More Articles
Follows