அஜித் பிறந்தநாளில் ஆர்.கே.சுரேஷ் வைக்கும் அதிரடி விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் அஜித்துக்கு சினிமாவுலகிலும் பல நடிகர்கள் ரசிகர்களாக உள்ளனர்.

நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் அவர்கள் ஒரு படத்தில் அஜித் ரசிகராக நடித்து வருகிறார்.

பில்லா பாண்டி என்று இப்படத்திற்கு பெயரிட்டுள்ளனர்.

இந்லையில் எங்க குல தங்கம், எங்க தல சிங்கம் என்று தொடங்கும் ஒரு பாடலை மட்டும் அஜித் பிறந்தநாளில் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

கல்யாண் மாஸ்டர் நடனம் அமைக்கும் இந்த பாடலுக்காக சுமார் 300 அஜித் பேனர்கள், கட் அவுட்டுக்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

இந்த பாடலின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது

ஆர்.கே.சுரேஷ், இந்துஜா, யோகிபாபு, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தை சரவணஷக்தி இயக்கி வருகிறார்.

இளையவன் இசையில் ஜீவன் ஒளிப்பதிவில் ராஜாமுகமது படத்தொகுப்பில் இந்த படம் வளர்ந்து வருகிறது.

கீர்த்தி சுரேஷ்-சமந்தா உடன் கைகோர்க்கும் அனுஷ்கா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மறைந்த முன்னாள் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு வருகிறது.

இந்தப் படத்திற்கு தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்றும் தெலுங்கில் ‘மகாநதி’ என்றும் தலைப்பிட்டுள்ளனர்.

இதில் சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க சாவித்திரியின் வாழ்க்கையை எடுத்துக்கூறும் பத்திரிகை நிருபராக சமந்தா நடித்து வருகிறார்.

இந்நிலையில் மறைந்த பழம்பெரும் நடிகை பானுமதி கேரக்டரில் நடிகை அனுஷ்காக நடிக்கவுள்ளாராம்.

ஜெமினிகணேசனாக துல்கர் சல்மான் நடிக்கிறார். விஜய் தேவரகொண்டா நாகேஸ்வரராவ் கேரக்டரில் நடிக்கிறார். மோகன்பாபு எஸ்.வி.ரங்காராவ் கேரக்டரில் நடிக்கிறார்.

இந்தப் படத்தை நாக் அஸ்வின் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வேற்று கிரக வாசிகளை தடுக்கும் விஞ்ஞானியாக சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பொன்ராம் இயக்கும் சீமராஜா படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இப்படத்தை 24ஏஎம். ஸ்டூடீயோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இதனையடுத்து இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார் சிவகார்த்திகேயன். இப்படத்தை அதே நிறுவனமே தயாரிக்கவுள்ளது.

இதற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். இதில் ரகுல் பிரித்தி சிங் நாயகியாக நடிக்கலாம் என கிசுகிசுக்கப்படுகிறது.

சயின்ஸ் பிக்சனாக உருவாகவுள்ள இப்படத்தில் வேற்று கிரக வாசிகளிடம் இருந்து மனிதர்களை காப்பாற்றும் விஞ்ஞானியாக சிவகார்த்திகேயன் நடிக்கிறாராம்.

தளபதி 63-64 படங்களின் டைரக்டர்களை முடிவு செய்த விஜய்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மெர்சல் படத்தை தொடர்ந்து ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய்.

இதுவரை பெயரிடப்படாத இப்படத்தை தற்காலிகமாக தளபதி 62 என்று அழைக்கின்றனர்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க ஏஆர் ரஹ்மான் இசையமைக்க கீர்த்திசுரேஷ் நாயகியாக நடித்து வருகிறார்.

இப்படத்தை இந்தாண்டு 2018 தீபாவளிக்கு வெளியிட உள்ளனர்.

இந்நிலையில் தளபதி 63 மற்றும் 64 பட இயக்குனர்களை விஜய் முடிவு செய்துவிட்டதாக தகவல்கள் வந்துள்ளன.

தளபதி 63 படத்தை ஜெயம் மோகன்ராஜா இயக்கவுள்ளதாகவும் தளபதி 64 படத்தை ‘ஜில்லா’ பட இயக்குநர் நெல்சன் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆர்யா-ஷ்யாம்-பிரசன்னா-சிம்ரன் இணைந்து நடித்துள்ள புறா பறக்குது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மறைந்த இயக்குநர் ஜீவாவிடம் இணை இயக்குனராக பணியாற்றிவர் ஆ.இலட்சுமி காந்தன். பசுபதி, அஜ்மல் நடித்த டாக்சி 4777 படத்தை இயக்கிய இவர், அடுத்ததாக தற்போது ‘புறா பறக்குது’ என்ற திரைப்படத்தை இயக்குகிறார்.

இந்தப் படத்தில் புதுமுகங்களான ஆருண், கெளதம் ஆகியோரை அறிமுகப்படுத்துகிறார்.

மற்றும் பப்லு, பிரியா, சுப்புலட்சுமி ஆகியோரும் இதில் நடிக்கின்றனர். இலட்சுமி காந்தன் பிலிம் பேக்டரி தயாரிக்கும் இந்தப்படத்திற்கு ஜெய் கிரிஷ் இசையமைக்க, கார்த்திகேயன் ஒளிப்பதிவு செய்கிறார்.

காதல் என்பது அமுதசுரபி மாதிரி.. அதனால் தான் காதலை மையமாக ஆயிரக்கணக்கில் படங்கள் வெளியாகியுள்ளன.

இன்னும் ஆயிரம் படங்கள் உருவாகவும் இருக்கின்றன.. அந்தவகையில் ஒரு காதல் கதையைத்தான் கையில் எடுத்துள்ளார் இலட்சுமி காந்தன்.

முதல்காட்சியில் ஒரு பேருந்து நிலையத்தில் ஒரு பெண்ணை பார்த்ததுமே இவள் தான் தனக்கானவள் என முடிவு செய்யும் இளைஞன், கடைசி காட்சியில் அவளிடம் ஐ லவ் யூ சொல்கிறான்.

இதுதான் படத்தின் கதை. இந்த காதலை எப்படி சொல்கிறான், காதலியின் மனதை எப்படி வெல்கிறான் என்பதைத்தான் திரைக்கதையில் வித்தியாசப்படுத்தி காட்ட இருக்கிறாராம் இலட்சுமி காந்தன்.

இந்தப்படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் ஆர்யா, ஷ்யாம், பூஜா, பிரசன்னா, பசுபதி, சிம்ரன், அஜ்மல், மீனாட்சி, அசோக், மைக்கேல், VJ முரளி என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்தப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்கள்..

அது எதற்காக என்பது சஸ்பென்ஸ்..

இந்தப்படத்தில் 5 பாடல்கள் இடம்பெறுகின்றன. சென்னை, பாண்டிச்சேரி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம் ;

தயாரிப்பாளர் : இலட்சுமி காந்தன் பிலிம் பேக்டரி

இசை : ஜெய் கிரிஷ்

ஒளிப்பதிவு : கார்த்திகேயன்

எடிட்டிங் : ரமேஷ் மணி

பாடலாசிரியர் : பிரியன்

நடனம் : தினேஷ், சோபி

சண்டை பயிற்சி : T. தியாகராஜன்

கலை : தோட்டாதரணி

ஒலிப்பதிவு : லட்சுமி நாராயணன்

மக்கள் தொடர்பு : செல்வரகு

தயாரிப்பு மேற்பார்வை : முருகபூபதி

அஜித்-நயன்தாராவின் விசுவாசத்தில் தேசிய விருது பெற்ற நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விவேகம் படத்தை தொடர்ந்து விசுவாசம் படத்தல் நடிக்கவிருக்கிறார் அஜித்.

இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்க சிவா இயக்கவிருக்கிறார்.

நயன்தாரா நாயகியாக நடிக்க, முதன்முறையாக அஜித் படத்திற்கு இமான் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் முக்கிய கேரக்டரில் தம்பி ராமையா இணைந்திருக்கிறார்.

இவர் அஜித்துன் வீரம், வேதாளம் படங்களில் நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

மேலும் மைனா படத்தில் நடித்தமைக்காக தேசிய விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows