வேலை நிறுத்தத்தை மீறி விஜய்சேதுபதி சூட்டிங்; ஜுங்காவுக்கு வந்த ஆபத்து.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ மற்றும் காஷ்மோரா படங்களை இயக்கிய கோகுல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஜுங்கா’.

விஜய்சேதுபதி மற்றும் சாயிஷா ஜோடியாக நடித்து வருகின்றனர்.

விஜய்சேதுபதி இதுவரை நடித்ததிலேயே இதுதான் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் என்பதால் அவரே இப்படத்தைத் தயாரித்து வருகிறார்.

‘ஜுங்கா’ படத்தின் பெரும்பாலான காட்சிகள் பாரீஸில் இடம் பெறுவதாக அமைந்துள்ளது.

தற்போது வேலை நிறுத்தம் காரணமாக சூட்டிங் நடத்தக் கூடாது என தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்துள்ள நிலையிலும் ‘ஜுங்கா’ சூட்டிங் பாரீஸ், ஜார்ஜியா உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்று வருகிறது.

இவ்வாறாக தடையை மீறி சூட்டிங் நடைபெற்று வருவதால், அந்த படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்வி கோலிவுட்டில் எழுந்துள்ளது.

இதனால் படக்குழுவினர் சென்னை திரும்பியதும் இது பற்றிய பிரச்சினை எழக்கூடும் எனக் கூறப்படுகிறது.

Producer council decided to take action on Junga team because of Shoot Conducted during Strike

வசனங்களே இல்லாத மெர்குரி படத்தை ஏப்ரலில் திரையிட திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்டோன் பென்ச் நிறுவனம் மற்றும் பென் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் `மெர்குரி’.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் பிரபுதேவா, சனத் ரெட்டி, தீபக் பரமேஷ், ரம்யா நம்பீசன், மேயாத மான் இந்துஜா, அனிஷ் பத்மன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு திரு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வசனங்களே இல்லாத இப்படத்தை சைலண்ட் த்ரில்லராக உருவாகியுள்ளனர்.

இதில் பிரபுதேவா ஆன்ட்டி ஹீரோவாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

அண்மையில் வெளியான இப்பட டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தை தமிழ் புத்தாண்டை லாஸ் ஏஞ்சல்ஸில் வருகிற ஏப்ரல் 12-ஆம் தேதி சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிட திட்டமிட்டுள்ளனர்.

தற்போது சினிமா ஸ்டிரைக் நடைபெற்று வருவதால், மெர்குரி உள்ளிட்ட படங்கள் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்படும் எனத் தெரிகிறது.

Prabudevas Mercury does not any dialogue in this movie

அஜித்-விஜய்-சூர்யாவுடன் நடித்தவருடன் ஜோடி போடும் ஸ்ருதிஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித்தின் ‘பில்லா 2’ மற்றும் விஜய்யின் ‘துப்பாக்கி’ படங்களில் வில்லனாக நடித்தவர் வித்யூத் ஜாம்வால்.

இவர் சூர்யாவுக்கு நண்பனாக ‘அஞ்சான்’ படத்திலும் நடித்திருந்தார்.

கோலிவுட்டில் வில்லனாக இருந்தாலும் பாலிவுட்டில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

தற்போது மகேஷ் மஞ்ரேகர் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் வித்யூத் ஜாம்வாலுக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முக்கிய வேடங்களில் நஸ்ருதின் ஷா, அமோல் பலேகர் ஆகியோர் நடிக்கவிருக்கிறார்களாம்.

இதற்கு முன்பே ‘யாரா’ என்ற படத்தில் வித்யூத் ஜாம்வாலுடன் ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Shrutihaasan to romance again with Vidyut Jamwal

ஸ்டெர்லைட் போராட்டத்தில் மாணவர்களுடன் பங்கேற்ற நடிகர் பிரபா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திருட்டு விசிடி மற்றும் மதுரை மாவட்டம் படங்களில் நடித்து பிரபலமான நடிகர் பிரபா, ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று காலை மாணவர்களுடன் இணைந்து சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்னம் ஸ்டேடியமில் உண்ணாவிரதப் போரட்டத்தில் கலந்துக்கொன்டார்

தமிழ்நாட்டில் ஸ்டெரிலைட் போராட்டம் பெரிய அதிர்வலைகளை கிளப்பியுள்ளது.

தூத்துக்குடி மக்கள் தங்கள் வாழ்வாதரத்திற்கு மட்டுமின்றி வருங்கால சந்ததியினர் வாழ்க்கைக்காக போராடி வருகின்றனர்.

ஸ்டெரிலைட்டால் வருங்கால சந்த்ததியே கேன்சர், மற்றும் பலவிதமான நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். 15 நாட்களுக்கு மேலாக ஸ்டெரிலைட் ஆலையை மூடச்சொல்லி பெருமளவில் மக்கள் பலவிதங்களில் போராடி வருகின்றனர்.

ஆனால் தமிழக அரசும், மத்திய அரசும், மக்களை கண்டுகொள்ளாமல் வஞ்சித்து வருகின்றது

இப்போது போரட்டம் பலவிதங்களில், பல இடங்களில் பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் முதல் ஆளாக இந்தப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மாணவர்க்ளுடன் இணைந்து இன்று காலை உண்ணாவிரதப் போராட்டதில் இறங்கியுள்ளார் நடிகர் பிரபு.

தமிழ் சினிமா உலகில் இருந்து இது வரை எவரும் இந்தப்போரட்டதிற்கு ஆதரவாய் இறங்காத நிலையில் புதுமுக நடிகராக இருந்தாலும் துணிந்து அரசுக்கெதிராக மக்களுக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளார் நடிகர் பிரபா.

தங்களுக்கு ஆதரவாய் களமிறங்கிய பிரபாவிற்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பும் பாராட்டும் கிடைத்துள்ளது.

Actor Prabha supports Tuticorin peoples Sterlite Protest

போராட்டத்தில் ரசிகர்களை கண்டித்த கமல்; அதன்பின்னர் அளித்த விளக்கம் இதோ!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக குமரெட்டியாபுரத்தில் 49வது நாளாக பொது மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் போராட்டத்தில் பங்கேற்று தனது ஆதரவை தெரிவித்தார்.

அப்போது அவர் ஒரு காரில் நின்று கொண்டு மைக்கில் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது சிலர் ரசிகர்கள் கைதட்டியவாறு தலைவா, ஆண்டவரே, இங்கே பாருங்க என கூட்டலிட்டனர்.
இதனால் கடுப்பான கமல், சும்மா இருங்க. சும்மா இரு. இங்க் பேசிட்டு இருக்கே. விஷயம் தெரியாம விளையாட்டு பண்ணீட்டு இருங்கீங்க என்று கண்டிப்புடன் பேசினார்.

இந்த வீடியோ காட்சியை மட்டும் எடிட் செய்து பலர் இணையங்களில் பரப்பி வந்தனர்.

ஆனால் அதன்பின்னர், இது என் குடும்பம். அதனால் உரிமையுடன் கண்டிப்பேன் என்று விளக்கம் அளித்திருந்தார்.

அந்த வீடியோவை யாரும் பதிவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Kamal warning to his fans at Ban Sterlite protest

மக்களை காப்பதை விட காப்பர் அவசியமா..? ஸ்டெர்லைட் போராட்டத்தில் கமல் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.குமரெட்டியாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடர் போராட்டத்தை ஆரம்பித்து நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, தூத்துக்குடி குமரெட்டியாபுரம் கிராமத்தில் நடைபெற்றும் வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று நேரில் சென்று பங்கேற்றார்.

இதுதொடர்பாக, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், மக்களின் உயிரை விட காப்பர் வியாபாரம் முக்கியம் என நினைக்க வேண்டுமா? அப்படி எனில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது தான் நல்லது. குடியிருப்பு, விவசாய பகுதிகளில் ஆலை அமைப்பது தவறு.

மத்திய அரசும், தமிழக அரசும் ஸ்டெர்லைட் விவகாரத்தில் பாராமுகமாக நடந்து கொள்கின்றன. நான் செல்லும் இடமெல்லாம் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக பிரசாரங்கள் மேற்கொள்வேன்.

நான் புதிதாக விளம்பரம் தேட வேண்டிய அவசியம் இல்லை, ஐந்து வயதில் இருந்தே எனக்கு விளம்பரத்திற்கு பஞ்சம் இல்லை” என தெரிவித்துள்ளார்.

Copper is not necessary in Peoples living area says Kamal in Ban Sterlite protest

More Articles
Follows