‘விஜய் ஒரு ஜென்டில்மேன். ஐ லவ் ஹிம்..’ – பிரபுதேவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா படத்திற்கு பிறகு பிரபுதேவா நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் தேவி.

இப்படத்தை தன் நிறுவனம் மூலம் பிரபுதேவாவே தயாரித்திருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் நேரடியாக உருவாக்கப்பட்டுள்ளது.

3 மொழி படத்தையும் ஒரே நாளில் (அக். 7) வெளியிடுகின்றனர். இது இந்திய சினிமாவில் புதிது என தெரிவித்தனர்.

3 படத்தையும் மொத்தம் 60 நாட்களில் முடித்துவிட்டாராம் இயக்குனர் விஜய்.

விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் சோனு சூட், தமன்னா, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

இதன் பத்திரிகையாளர் சந்திப்பில் இப்படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

அப்போது பிரபுதேவா பேசுகையில், “விஜய்யை எனக்கு ரொம்ப நல்லா தெரியாது.

தற்போது சில காலமாக பழக்கம். ஆர்.ஜே. பாலாஜி செட்டில் பேசிக் கொண்டே இருப்பார் என்றால், விஜய் பேசவே மாட்டார்.

அவரிடம் நான் நிறைய கற்றுக்கொண்டேன். அவரால் எப்படி இவ்வளவு பொறுமையாக எல்லாரிடமும் வேலை வாங்க முடிகிறது என்பதே தெரியவில்லை.

விஜய் ஒரு ஜென்டில்மேன். ஐ லவ் யூ விஜய்” என்று பேசினார்.

ரஜினி என்ற சூரிய வெளிச்சத்தில் புகழ் தேடும் நட்சத்திரங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமாவில் ரஜினிக்கு இருக்கும் புகழ் அனைவரும் அறிந்ததே.

எனவே ரஜினியின் பெயரை பாலிவுட் வரை பயன்படுத்தி கொள்கின்றனர்.

சமீபத்தில் கூட எம்.எஸ்.தோனி பட புரோமோஷனுக்கு வந்தவர்கள் மறக்காமல் ரஜினியை சந்தித்து தமிழகத்தின் தலைப்பு செய்தியானர்கள்.

பாலிவுட்டில் இப்படியிருக்க, கோலிவுட்டில் கேட்கவே வேண்டாம்.

ரஜினியின் சூப்பர் ஹிட் படங்களை ரீமேக் செய்வது. இல்லை என்றால் அவரின் படத் தலைப்புகளை பயன்படுத்திக் கொள்வது என ஒவ்வொன்றாய் செய்து வருகின்றனர்.

தற்போது இதில் கொஞ்சம் புது டிரெண்டாக, ரஜினியின் பன்ச் டயலாக்குகளையும் பாடல் வரிகளையும் பயன்படுத்தி கொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது.

இது டைட்டில் தட்டுபாடா? இல்லை இயக்குனர்களிடம் கற்பனை தட்டுபாடா? என தெரியவில்லை.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். ரஜினியின் சூரிய வெளிச்சத்தில் தங்களுக்கு படத்திற்கு புகழ் கிடைக்காதா? என்ற அவர்களின் ஏக்கமே என்பது புரிகிறது.

ரஜினி பட சார்ந்த புதிய படத்தலைப்புகளை இங்கே தொகுத்துள்ளோம்…

  • அஜித் நடித்த பில்லா (ரீமேக்)
  • விஜய் நடித்த மின்சார கண்ணா
  • சூர்யா நடிக்கவுள்ள தானா சேர்ந்த கூட்டம்
  • தனுஷ் நடித்த பொல்லாதவன், மாப்பிள்ளை, படிக்காதவன்
  • ஜிவி பிரகாஷ் நடித்த எனக்கு இன்னொரு பேர் இருக்கு
  • ராகவா லாரன்ஸ் நடித்த ராஜாதி ராஜா
  • சத்யராஜ் நடித்த குரு சிஷ்யன்
  • சுந்தர் சி நடித்த தீ, முரட்டுக்காளை (ரீமேக்)
  • கிருஷ்ணா நடித்த கழுகு
  • உதயநிதி நடித்த மனிதன்
  • உதயநிதி நடிக்கவுள்ள பொதுவாக என் மனசு தங்கம், சரவணன் இருக்க பயமேன்
  • விஷால் நடித்த பாயும் புலி, நான் சிகப்பு மனிதன்
  • கார்த்தி நடித்த அலெக்ஸ் பாண்டியன், நான் மகான் அல்ல
  • ஜீவா நடித்த போக்கிரி ராஜா
  • பிருத்விராஜ் நடித்த நினைத்தாலே இனிக்கும்
  • மிர்ச்சி சிவா நடித்த தில்லு முல்லு (ரீமேக்)
  • ராம்சரண் நடித்த மாவீரன்
  • விஜய்சேதுபதி நடித்த தர்மதுரை
  • சிவகார்த்திகேயன் நடித்த ரஜினிமுருகன் (இதில் இவர் ரஜினி பெயரையே பயன்படுத்திக் கொண்டார்)
  • நட்ராஜ் நடிக்கும் எங்கிட்ட மோதாதே
  • நேற்று வெளியான ஒரு படத்தின் பர்ஸ்ட் லுக்கில் வீரா என்ற ரஜினி படத்தலைப்பை உள்ளது. இதில் கிருஷ்ணா நாயகனாக நடிக்கிறார்.

இன்னும் எவ்வளோ இருக்கலாம்.. தெரிந்தால் நீங்களும் சொல்லுங்களேன்…

சதீஷ் ‘ஹாட்ரிக் ஹிட்’ அடிச்சா 3 ஹீரோக்களுக்கு ‘லக்’குதான்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களை தன் டைமிங் காமெடியால் சிரிக்க வைத்து வருபவர் சதீஷ்.

தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார். ‘

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் ரெமோ, விஜய்சேதுபதியின் றெக்க மற்றும் பிரபுதேவாவின் தேவி ஆகிய மூன்று படங்களும் ஒரே நாளில் (அக்டோபர் 7, 2016) ரிலீஸ் ஆகிறது.

இவை மூன்றிலும் சதீஷ் நடித்துள்ளார்.

இவர் ஒரே நாளில் ஹாட்ரிக் ஹிட் கொடுத்தால் அந்த 3 ஹீரோக்களுக்குமே ஒரு வகையில் லக்குதான்.

இன்னும் 9 நாட்கள்தானே பொறுத்திருந்து பார்ப்போம்.

சிம்பு சொல்லிதான் தனுஷ் அவர் இயக்கத்தில் நடித்தாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விண்னைத் தாண்டி வருவாயா படத்திற்கு மீண்டும் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ளார்.

அச்சம் என்பது மடமையடா என்ற இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்து, தற்போது இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இதே இயக்குனரின் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் என்னை நோக்கி பாயும் தோட்டா என்ற படமும் உருவாகி வருகிறது.

இந்நிலையில் இப்படம் குறித்து தனுஷ் தன் சமீபத்திய பேட்டியில் கூறும்போது…

‘நானும் சிம்புவும் எப்போதுமே நல்ல நண்பர்கள்தான். அவர்தான் என்னை கெளதம் மேனனுடன் படத்தில் நடியுங்கள்.

அது நிச்சயம் எனக்கு ஒரு புது அனுபவமாக இருக்கும்” என்றார்.

றெக்க பட தயாரிப்பாளரை எச்சரித்த விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரத்தினசிவா இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள றெக்க படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சற்றுமுன் நடைபெற்றது.

இதில் விஜய்சேதுபதி பேசும்போது….

இப்படத்தின் தயாரிப்பாளர் கணேஷ் என் கூட படித்தவர். நானும் அவனும் +2வில் ஒன்றாக படித்தோம்.

அவன் என்னை வைத்து படத்தை தயாரிக்க விரும்பினார்.

சினிமா வேண்டாம். தயாரிப்பு வேண்டாம் என எவ்வளவு முறை தடுத்து பார்த்தேன். எச்சரித்தேன்.

எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை.

ஆனால் ஆரஞ்ச் மிட்டாய் படத்தை எடுத்தார். இப்போது றெக்க.

அவன் பிடிவாதமானவர். ஆனால் ஒரு தெளிவான நல்ல முடிவை சிந்தித்து எடுப்பார்.

இப்போது இப்படத்தை நல்ல முறையில் மிகப்பிரம்மாண்டமாக எடுத்துள்ளார்.

இவ்வாறு விஜய்சேதுபதி பேசினார்.

ஹரீஷ் உத்தமன் படத்தை தயாரிக்கும் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆரஞ்ச் மிட்டாய் படத்தை தயாரித்த கணேஷ் தயாரித்துள்ள படம் றெக்க.

இப்படத்தை ரத்தினசிவா இயக்க நாயகனாக விஜய்சேதுபதி நடித்துள்ளார்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சற்றுமுன் சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய்சேதுபதி பேசும்போது…

நான் ஹீரோவாக ஆவதற்கு முன்னே ஹரீஷ் உத்தமனை பார்த்துள்ளேன்.

நான் பயிற்சி பெற்றவன். ஆனால் அவர் எந்த பயிற்சியும் இல்லாமல் மிக அழகாக நடிப்பவர்.

ஹீரோவுக்கு உண்டான எல்லா தகுதியும் உள்ளவர்.

நிச்சயம் ஒரு நாள் ஹீரோவாக நடிப்பார்.

என்னிடம் பணம் இருந்தால், ஒருநாள் முடிந்தால் அவர் நடிக்கவுள்ள படத்தை நிச்சயம் நான் தயாரிப்பேன்” என்றார்

More Articles
Follows