பிரபுதேவாவின் ‘தேவி’க்கும் நயன்தாராவுக்கும் என்ன சம்பந்தம்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் விஜய் இயக்கத்தில் பிரபுதேவா தயாரித்து நடித்துள்ள படம் தேவி.

இப்படம் அக்டோபர் 7ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இதில் தமன்னா சினிமா ஹீரோயினாக நடிக்கிறார்.

எனவே இப்படத்திற்கும் நடிகை நயன்தாராவின் நிஜ வாழ்க்கைக்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா? என பிரபுதேவாவிடம் சமீபத்தில் கேட்கப்பட்டது.

ஆனால் இதற்கும் அவருக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என மறுத்துள்ளார் பிரபுதேவா.

தனுஷின் ஒரிஜினல் பெற்றோர் நாங்கள்தான்; புகார் கொடுத்த தம்பதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கஸ்தூரி ராஜாவின் மகன், செல்வராகவனின் தம்பி, ரஜினியின் மருமகன் என பல அடையாளங்கள் இருந்தாலும் இவற்றையெல்லாம் மீறி தனக்கான அந்தஸ்தை சமூகத்தில் உருவாக்கி வைத்திருப்பவர் நடிகர் தனுஷ்.

மேலும் திரையுலகின் பல துறைகளிலும் சாதித்து வருகிறார்.

இந்நிலையில் தனுஷை தங்களது மகன் என சிவகெங்கை மாவட்டத்தை சேர்ந்த கதிரேசன் – மீனாள் என்ற தம்பதியினர்தான் சொந்தம் கொண்டாடி வருகின்றனர்.

அரசு போக்குவரத்து கழகத்தில் டைம் கீப்பராக பணிபுரிந்து வருகிறார் கதிரேசன்.

இவர் கூறியுள்ளதாவது…

இவருக்கு பிறந்த கலையரசன் என்ற மகன் கடந்த 2002ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படிக்கும்போது தங்களை விட்டு பிரிந்து சென்று விட்டாராம்.

அவர்தான் தற்போது சென்னை சென்று தனுஷ் என்ற பெயரில் நடிகராகி விட்டதாக கூறியுள்ளார்.

அதன்பின்னர் சென்னைக்கு தனுஷை தேடி வந்தபோது கஸ்தூரிராஜா குடும்பத்தினர் தங்களை தடுத்து வருவதாகவும் கூறியுள்ள்ளார்.

மேலும் காவல் நிலையத்திலும் முதலமைச்சரின் தனிப்பிரிவிலும் புகார் கொடுத்துள்ளதாகவும் இந்த தம்பதியினர் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

சூர்யாவுடன் மோதுவாரா அல்லது தனித்து வருவாரா ‘போகன்’.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜெயம் ரவி, அரவிந்த்சாமி, ஹன்சிகா உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ‘போகன்’.

‘ரோமியோ ஜூலியட்’ இயக்குநர் லட்சுமண் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

இமான் இசையமைக்க, பிரபுதேவா இப்படத்தை தயாரித்துள்ளார்.

இதில் விக்ரம் என்ற கேரக்டரில் ஜெயம் ரவியும், விக்ரமாதித்யன் என்ற கேரக்டரில் அரவிந்த்சாமியும் நடித்துள்ளனர்.

‘தனி ஒருவன்’ படத்தை போன்று இப்படம் இவர்களின் கேரியரில் மிக முக்கியமான படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இப்படத்தை டிசம்பரில் திரைக்கு கொண்டு வரவிருக்கிறார்கள்.

டிசம்பர் 16ஆம் தேதி சூர்யாவின் எஸ் 3 படம் ரிலீஸ் ஆகிறது.

அதே தேதியில் போகன் வருவாரா? அல்லது தனித்து வருவாரா? என்பதை இன்னும் சில நாட்களில் தெரிந்து கொள்வோம்.

தனது ரசிகரான ரஜினியை சந்திக்க விரும்பும் பி.வி. சிந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரியோ ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் பிரிவில் வெள்ளிப் பதக்கம் பெற்றார் இந்தியாவைச் சேர்ந்த பி.வி.சிந்து.

இவருக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த், தான் உங்களின் மிகப்பெரிய ரசிகன் ஆகிவிட்டேன் என தெரிவித்திருந்தார்.

ரஜினியின் பாராட்டில் உருகிப்போன சிந்து, தன்னுடைய சமீபத்திய பேட்டியில் ரஜினிகாந்தை நேரில் சந்திக்க ஆசைப்படுகிறேன்.

அவரை சந்திக்கும் நாளுக்காக காத்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயனுடன் இணையும் பாசமான அண்ணன் நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டிவியில் பிரபலமான சிவகார்த்திகேயன் சினிமாவுக்கு வந்தது வென்றது எல்லாம் நாம் அறிந்ததே.

இவரைப் போலவே நிறைய டிவி நடிகர்களும் சினிமாவுக்கு வந்துக் கொண்டே இருக்கின்றனர்.

அதில் முக்கியமானவர் நடிகர் ரோபா சங்கர்.

இவர் சிவகார்த்திகேயனை பாசமுடன் தம்பி என்றே அழைப்பார்.

டிவி நிகழ்ச்சிகளில் இவர்கள் இணைந்து வந்தாலே களை கட்டும்.

இந்நிலையில் தற்போது முதன்முறையாக இருவரும் இணைந்து நடிக்கவிருக்கிறார்களாம்.

மோகன் ராஜா இயக்கவுள்ள படத்தில்தான் இவர்களின் சினிமா கூட்டணி இணைகிறது.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா, சினேகா, ஃபஹத் பாசில், சதீஷ், பிரகாஷ்ராஜ், ஆர்ஜே பாலாஜி ஆகியோரும் நடிக்க இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்-அட்லி படத்தின் நாயகி, இசையமைப்பாளர் இவர்களா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பரதன் இயக்கும் பைரவா படத்தை தொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக வந்த செய்திகளை பார்த்தோம்.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கவிருக்கிறது.

இந்நிலையில் இதில் நாயகியாக காஜல் அகர்வால் நடிப்பார் என்றும், இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைப்பார் என்றும் சொல்லப்படுகிறது.

இது உறுதியானால் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத்தெரிகிறது.

விஜய்யின் உதயா, அழகிய தமிழ் மகன் ஆகிய படங்களுக்கு ஏஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

More Articles
Follows