விரைவில்… சிவகார்த்திகேயனின் அடுத்த அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் நடித்து ரெமோ படத்தில் இடம்பெற்ற செஞ்சிட்டாளே பாடல் பெரும் ஹிட்டடித்துள்ளது.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

இந்நிலையில், இதில் இடம் பெற்றுள்ள மற்றொரு பாடலான சிரிக்காதே என்ற பாடலை விரைவில் வெளியிட இருக்கிறார்களாம்.

படத்தின் மற்ற பாடல்களை இம்மாத இறுதியில் வெளியிடலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் சங்க கட்டிடத்தில் திருமண நாள் குறித்த விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எந்தவொரு சினிமா நட்சத்திரம் என்றாலும் தங்கள் காதலை முதலில் ஓப்பனாக சொல்வதில்லை.

அதுவாக மீடியா வழியாக வந்து, அதிகளவில் பேசப்பட்ட பின்னரே ஆமாம். நாங்கள் காதலிக்கிறோம் என்று தெரிவிப்பார்கள்.

அந்த வரிசையில் இப்போது விஷாலும் இணைந்துவிட்டார்.

வரலெட்சுமியும் நானும் நெருங்கிய நண்பர்கள் என்று கூறிவந்த நிலையில், தற்போது வரலட்சுமியுடன் திருமணம் என தெரிவித்துள்ளார்.

“வரு என் பள்ளித் தோழி. எங்கள் திருமணம் நடிகர் சங்க கட்டிடத்தில் 2018ஆம் ஆண்டு ஜனவரி 14, பொங்கல் சமயத்தில் நடக்கும்.

கார்த்தியிடம் சொல்லி, திருமண நாளும் குறிச்சாச்சு” என்று அறிவித்திருக்கிறார்.

ஆமா இதுக்கு சரத்குமார் ரியாக்‌ஷன்..?

அஜித் இருக்குமிடத்தில் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா, வடிவேலு, சூரி ஆகியோர் நடிக்கும் கத்தி சண்டை படம் தீபாவளி ரிலீஸ் என அறிவித்துவிட்டனர்.

எனவே மீதமுள்ள காட்சிகளை முடிக்கத் திட்டமிட்டுள்ளனர். ஆகஸ்ட் 18ஆம் தேதி ஜார்ஜியா நாட்டிற்கு செல்லவிருக்கின்றனர்.

இங்குதான் பல்கேரியா நாட்டில் படத்தை முடித்துவிட்டு அஜித்தின் தல 57 படக்குவினர் வரவுள்ளனர்.

இங்கு படகாட்சிகளை படமாக்கிவிட்டு கத்தி குழுவினர் தமிழகம் திரும்ப உள்ளனர்.

இதனையடுத்து ப்ளாஷ்பேக் காட்சிகளை மதுரையில் படமாக்கிவிட்டு மொத்த படத்தையும் முடிக்கத் திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

‘ரஜினி அந்த படத்தை பார்க்க வேண்டும்…’ அக்சய்குமார் வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினியை ட்விட்டரில் லட்சக்கணக்கான பேர் பின்தொடர்கிறார்கள்.

ஆனால் இதுவரை அவர் 29 ட்வீட்டுகளே பதிவிட்டு இருந்தார்.

தன்னுடைய 30வது ட்வீட்டாக பஞ்சு அருணாச்சலத்திற்கு இரங்கல் தெரிவித்திருந்தார்.

இவருடைய 31வது ட்வீட்டாக ஷங்கரின் 2..0 படத்தில் நடித்து வரும் அக்சய்குமாருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

அக்சய் நடித்து வெளியாகவுள்ள ரஸ்டம் படத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

அதற்கு பதிலளித்த அக்சய்குமார், நன்றி கூறிவிட்டு அப்படத்தை பார்க்க ரஜினிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தனுஷை முந்தி விக்ரம் வர என்ன காரணம்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விநாயகர் சதுர்த்தி விடுமுறை தினத்தை செப்டம்பர் 2ஆம் தேதி தனுஷ் நடித்த தொடரி படத்தை ரிலீஸ் செய்யவுள்ளனர்..

பெரும்பாலான படங்களை வெள்ளிக்கிழமை வெளியாவது வழக்கம்தான். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என்கிறீர்களா? அது சரிதான்.

ஆனால், விக்ரமின் இருமுகன் படத்தை தொடரிக்கு முன்பாக ஒரு நாள் முன்னே ரிலீஸ் செய்யவுள்ளனர்.

கடந்த முறை தன்னுடைய படம் அதுபோன்ற விசேஷ நாளில் வெளியானதால் வெற்றிப் பெறவில்லை.

எனவே இருமுகன் படத்தை மற்றொரு நாளில் வெளியிட விக்ரம் விரும்பினாராம்.

எனவேதான் தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ், விடுமுறை நாளை கணக்கில் கொண்டும், விக்ரமின் வேண்டுக்கோளை ஏற்றும் செப்டம்பர் 1ஆம் தேதி படத்தை வெளியிடுகிறாராம்

‘கபாலி’யை பார்த்து ரஜினியிடம் என்ன சொன்னார் கேஎஸ்.ரவிக்குமார்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிக்கு அதிரடியான ஹிட்டுக்களை கொடுத்த இயக்குனர்கள் பலர் இருக்கிறார்கள்.

அதில் ரஜினிக்கு ஆஸ்தான இயக்குனர் லிஸ்ட்டில் கே.எஸ்.ரவிக்குமாரும் உண்டு.

இந்நிலையில் கே.எஸ்.ஆரும் கபாலி படத்தை பார்த்துள்ளார்.

இப்படம் குறித்து ரஜினியிடம் இவர் கூறியுள்ளதாவது…

‘இது வழக்கமான ரஜினி படமாவும் இல்லை. ரஞ்சித் படமாவும் இல்லை.

ஒரு டான் படத்துல நீங்க ரொம்ப நல்லா நடிச்சீருக்கீங்க!’ அப்படின்னு சொன்னாராம் கே.எஸ்.ஆர்.

More Articles
Follows