தமிழ் சினிமாவில் சாதித்துக் காட்ட துடிக்கும் ஷாதிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவுக்கு வந்து வெற்றி பெறுபவர்களில் இரு வகையினர் உண்டு. திடுதிப்பென ஒரே படம் மூலம் உயரே செல்பவர்கள் ஒரு ரகம். படிப்படியாக மேலேறி உயரம் செல்பவர்கள் மற்றொரு ரகம். இதில் இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவர் தான் நடிகை ஷாதிகா.

அண்மையில் வெளியாகியுள்ள சுசீந்திரனின் ‘நெஞ்சில் துணி விருந்தால்’ படத்தில் நாயகன் சந்தீப்பின் தங்கையும் விக்ராந்தின் காதலியுமான அனு பாத்திரத்தில் நடித்திருப்பவர் தான் இந்த ஷாதிகா.

படத்தின் கதாநாயகி ஷாதிகா இல்லையென்றாலும் கதையில் கவனம் குவியும் கதாபாத்திரத்தில் வந்திருப்பவர் .

இதற்கு முன் ஷாதிகாவின் கதை என்னவென்று கேட்டால் வழக்கமாக பலருக்கும் உள்ளதைப் போல அது சிறுகதையாக இருக்காது. பெரிய தொடர்கதையே எழுதும் அளவுக்கு வரலாறே வைத்துள்ளார் இந்த ஷாதிகா .

சென்னைப் பெண்ணான இவர், லயோலாவில் பி.டெக் படித்து முடித்தவர்.

இவர் குழந்தையாக இருந்த போது ஏன் பேச்சு வராத போதே கேமரா பார்த்து நடித்தவர்.அரிராஜனின் ‘மங்கை’ தொலைக்காட்சித் தொடரில் நடித்த போது இவருக்கு இரண்டு வயது. சீமானின் ‘வீர நடை’ படம் தான் முதல் சினிமா அனுபவம். அப்போது வயது இரண்டரை தான்.

அதன் பிறகு ஆளும் வளர வாய்ப்புகளும் பெருக ‘ரோஜா வன’த்தில் குட்டி லைலா ,’ குபேரனி’ல் கெளசல்யா வின் மகள் , ‘சமஸ்தான’த்தில் சரத்தின் மகள் , ‘ராமச்சந்திரா’வில் சத்யராஜின் மகள் , ‘ஆனந்தம்’ முரளியின் மகள் , என்று வளர்ந்து ‘குருவி’யில் விஜய்யின் தங்கையாகி ‘மாசிலாமணி’யில் சுனைனாவின் தங்கை என்று கலந்து கட்டி 30 படங்கள் நடித்து விட்டார்.

அது மட்டுமல்ல தொலைக்காட்சியில் ‘சித்தி’ தொடரில் வில்லி யுவராணியின் மகள் .’ கோலங்கள் ‘தொடரில் தொல்காப்பியனின் சிறுவயது தங்கை என்று நடித்தும் உள்ளவர்.

சுட்டி டிவியில் சுட்டி தொகுப்பாளராக மூன்று ஆண்டுகள் அனுபவம். அது மட்டுமல்ல குழந்தை நட்சத்திரங்களுக்கெல்லாம் பின்னணிக் குரலும் கொடுத்திருக்கிறார். சில குறும்படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் நடித்த ‘என் வீட்டு முற்றத்தில் ஒரு மாமரம் ‘பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவுக்குப் போன ஒரே தமிழ்க் குறும்படம் ஆகும்.

நடிகை ரேவதி இயக்கிய குறும் படமாக ‘கயல்விழி’யில் ஷாதிகா தான் கயல்விழி. இப்படி இவரது அனுபவம் நீள்கிறது.

சுசீந்திரன் இயக்கத்தில் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ இவர் நடித்த நான்காவது படம். இப்பட அனுபவம் பற்றிக் கூறும் போது…

” சிறு வயதில் குழந்தையாக பல படங்களில் நடித்திருக்கிறேன். சற்று வளர்ந்த பெண்ணாக’ நான் மகான் அல்ல ‘ படத்தில் நடித்தேன். அந்த வாய்ப்பு எனக்கு பெரிய பிரேக் .பெரிய அடையாளம்.

அப்படிப்பட்ட வாய்ப்பை வழங்கியவர் சுசீந்திரன் சார். என்னை எங்கே பார்த்தாலும் அடையாளம் காண்கிறார்கள் என்றால் ‘நான் மகான் அல்ல’ படமே காரணம்.

சுசீந்திரன் சாரைப் பொறுத்தவரை அவர் என்னைப் போல சிலரைக் கம்பெனி ஆர்ட்டிஸ்ட் மாதிரி வைத்திருப்பார். அவர் எப்போது கூப்பிட்டாலும் படப்பிடிப்புக்குக் கிளம்பி விடுவோம்.

கதை எல்லாம் நாங்கள் கேட்க மாட்டோம். படப்பிடிப்பில் தான் தெரியுமே என்று நம்பி புறப்பட்டு விடுவோம். அதற்காகத் தன் பாத்திரத்துக்கு ஏற்றபடி பயன்படுத்திவிட்டு காரியம் முடிந்தது என்று அவர்களை கறிவேப்பிலையைப் போலத் தூக்கி எறிந்து விட மாட்டார்.

கதாபாத்திரமாக மட்டுமல்லாமல் சிறிது நேரமே வந்தாலும் அந்த நடிகர் அல்லது நடிகைக்கு நடிப்பிலும் பெயர் பெற்றுத் தரும்படி அந்த வாய்ப்பு இருக்கும்படி பார்த்துக் கொள்வார்.

அப்படித்தான் ‘நான் மகான் அல்ல’ படத்தில் கொலை செய்யப்படும் பெண்ணாக நடிக்க வைத்தார். ‘பாயும் புலி ‘படத்தில் விஷாலின் தங்கை, ‘ மாவீரன் கிட்டு’ வில் ஸ்ரீதிவ்யாவின் தோழி என நடிக்க வைத்தார்.

அப்படியே அந்தப் படங்களிலும் வந்தேன். இப்போது ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ வாய்ப்பு கொடுத்திருக்கிறார். குறிப்பாக இது தமிழ் , தெலுங்கில் உருவான படம். ” என்கிறார்.

சினிமாவில் ஓர் அபாயம் உள்ளது தங்கை பாத்திரத்தில் நடிக்கும் நடிகைகளை கதாநாயகியாக நடிக்க அழைக்கத் தயங்குவார்கள் என்று . இது குறித்து ஷாதிகா அஞ்சவில்லையா, ?

” நான் நாயகி , குணச்சித்திரம் எனப் பிரித்துப் பார்ப்பதில்லை. பத்து நிமிடம் வந்தாலும் மனதில் பதிகிற வாய்ப்பில் நடிக்கவே விரும்புவேன். நல்ல பாத்திரம் முக்கியம். அதில் தான் எனக்கு மகிழ்ச்சி. திருப்தி.

ஆனாலும் கதாநாயகியாகவும் நடிப்பேன். ஒரு பக்கம் அதற்குரிய முயற்சியில் தான் இருக்கிறேன். நான் குழந்தையாக நடித்தது முதல் இன்று வரை எனக்கு என்னைத் தேடி வந்து அமைந்த வாய்ப்புகள் தான் என்னை வளர்த்துள்ளன, செதுக்கியுள்ளன.

அதனால் என் தேடலின் போதே எனக்கேற்றபடி கதாநாயகி வாய்ப்பும் வரும் என்று நம்புகிறேன். எனக்கான காலம் வரும் என்று கருதுகிறேன்.”

படிப்பையும் நடிப்பையும் எப்படி ஷாதிகாவால் தொடர முடிகிறது?

“நான் படிப்பிலும் படு சுட்டி. பள்ளி நாட்களில் பாதிக்கும் மேற்பட்ட நாள்களில் படப்பிடிபபில் இருந்தாலும் அது படிப்பைப் பாதிக்காதபடி நன்றாகப் படிப்பேன். ப்ளஸ் டூவில் 90% மார்க் எடுத்தேன். பி.டெக் முடித்தேன். எம்.பி.ஏ. கரஸில் சேர இருக்கிறேன். ” என்கிறார் .

இப்போது ஷாதிகா சுசீந்திரனின் ‘ஏஞ்சலினா ‘ படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

விடைபெறும் முன் ஒன்று சொன்னார் ஷாதிகா.

“தமிழ் தெரிந்த, நடிக்கவும் தெரிந்த, டப்பிங் பேசவும் தெரிந்த ,நல்ல நடிப்பு வாய்ப்பை மட்டும் விரும்புகிற ஒரு நடிகை இருக்கிறார் . தேடிக் கொண்டிருக்கும் தனக்கான வாய்ப்பு கனியும் என்கிற தன்னம்பிக்கையுடன் இருக்கிறார் என்று எழுதுங்கள் .” என்றார்.

குறிப்பாகத் ”தமிழ்ப் பேசத் தெரிந்த ” என்பதை அடிக்கோடிட்டுக் குறிப்பிடுங்கள் என்றார் நம்பிக்கை நனைந்த குரலில் .

ஷாதிகா தனக்கான தகுதியுடன் தான் திரைக்களம் புகுந்துள்ளார்.

நன்னம்பிக்கை நாயகி, தன்னம்பிக்கை தமிழச்சி ஷாதிகா சாதிக்கட்டுமே . வாழ்த்தலாம்.

Nenjil Thunivirundhalfame Shathiga shares her experience

நீலம் பண்பாட்டு மையம் சார்பில் கல்வி முன்னுள்ள சவால்களை எதிர்கொள்ளல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் பா. இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் “கல்வி முன்னுள்ள சவால்களை எதிர்கொள்ளல்” (Challenges In Education – Way Forward) என்ற தேசிய கருத்தரங்கம் இன்று சென்னையில் நடைபெற்றது.

இந்தியா முழுவதிலும் இருந்து பல கல்வியாளர்கள், மருத்துவர்கள், எழுத்தாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், மாணவர் அமைப்பினர் கலந்து கொண்டனர்.

எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, முன்னாள் நீதிபதி திரு. அரி பரந்தாமன், மூத்த கல்வியாளர் முனைவர். எஸ்.எஸ்.ராஜகோபாலன், அகில இந்திய கல்வி உரிமைக்கான கூட்டமைப்பின் தலைமைக்குழு உறுப்பினர்,பேராசிரியர். அனில் சட்கோபால், தமிழ்நாடு திட்டக்குழுவின் முன்னாள் துணைத்தலைவர், பேராசிரியர் எம்.நாகநாதன், SBOA பள்ளிகளின் தாளாளர், தாமஸ் பிராங்கோ, இயக்குநர் பா.இரஞ்சித், தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு இயக்கத்தின் தலைவர் C.S. ரெக்ஸ் சற்குணம், மருத்துவர் ஜே.அமலோற்பவ நாதன், மருத்துவர் அனுரத்னா, குடியாத்தம் அரசு கலைக்கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேராசிரியர் சிவக்குமார், பொறியாளர், எழுத்தாளர் பி.கே.ராஜன், தமிழ்நாடு கல்வி உரிமைக்கான பாதுகாப்பு கூட்டமைப்பினை சார்ந்த பேராசிரியர் என்.மணி, நாடகவியலாளர் பிரளயன், மருத்துவர் எஸ்.காசி, மருத்துவர் எழிலன், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த முனைவர். C. லட்சுமணன், பெங்களுரு இந்திய அறிவியல் நிறுவன ஆய்வு மாணவர் S.ஸ்ரீநாத், தி.மு.க. மாணவர் அணியைச் சேர்ந்த CVMP எழிலரசன், தலித் மாணவர் கூட்டமைப்பினைச் சேர்ந்த A.பிரான்சிஸ், முஸ்லிம் மாணவர் கூட்டமைப்பினைச் சேர்ந்த பழவேற்காடு M.அ,ன்சாரி, முற்போக்கு மாணவர் கழகத்தினைச் சேர்ந்த பாரதி பிரபு, இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த V.மாரியப்பன், அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினை சேர்ந்த S.தினேஷ், திராவிடர் மாணவர் கழகத்தைச் சேர்ந்த பிரின்ஸ் என்னாரஸ் பெரியார், முன்னாள் துணைவேந்தர் V.வசந்திதேவி, அகில இந்திய கல்வி உரிமைக்கான கூட்டமைப்பின் தலைமைக்குழு உறுப்பினர் பேராசிரியர் G.ஹரகோபால், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியைச் சேர்ந்த K. சாமுவேல்ராஜ், தமிழ்நாடு பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் சார்பாக P.B.பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்பட பலர் கலந்துகொண்டு உரையாற்றினார்.

கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் சில…

1. நீட் ரத்து செய்யப்பட வேண்டும்.
2. அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு விகிதாச்சாரத்திற்கு ஏற்ப தனி ஒதுக்கீடு
3. கல்வியை மாநிலப் பட்டியலுக்குள் திரும்பவும் சேர்க்க வேண்டும்.
4. கல்வியை உலக வர்த்தக நிறுவனத்தின் வரம்புக்குள் கொண்டு செல்லக்கூடாது.

உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Challenges In Education Way Forward Ranjith and his Neelam news updates

 

கமல்-ரஜினி அரசியல்வாதிகளாக மாறினால் நாட்டிற்கு பேரழிவு… பிரகாஷ்ராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் கமல் மற்றும் ரஜினி ஆகியோர் விரைவில் அரசியலில் ஈடுப்பட உள்ளதாக தெரிகிறது.

இதில் கமல் தன் அரசியல் பிரவேசத்தை அறிவித்துவிட்டார். அது தொடர்பாக பாஜக. அல்லாத மாநிலங்களில் உள்ள முதல்வர்களை சந்தித்து வருகிறார்.

விரைவில் கட்சி பற்றிய முழு அறிவிப்பை வெளியிட உள்ளேன் என தெரிவித்துள்ளார்.

விரைவில் ரஜினி, தன் அரசியல் பிரவேசத்தை அறிவிப்பார் என நம்பப்படுகிறது.

இந்நிலையில், பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ் இதுகுறித்து பேசும்போது..

ரஜினி கமல் இருவரும் என் நண்பர்கள்தான். ஆனால் அவர்கள் அரசியலுக்கு வருவதை நான் விரும்ப வில்லை.

நான் எந்த கட்சியையும் சார்ந்தவன் அல்ல. நாட்டின் குடிமகனாக கேள்வி எழுப்புவதை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டேன். எந்த விமர்சனத்துக்கும் பயப்பட மாட்டேன்.

அதேபோல், எந்த மிரட்டலுக்கும் பணிய மாட்டேன். என்னிடம் 3 வீடுகள் உள்ளன.
முதலீடுகளும் உள்ளன. நான் ஒருபோதும் அரசியலுக்கு வர மாட்டேன்.

நடிகன் என்ற புகழை மூலதனமாக வைத்து அரசியலுக்கு வருவதை நான் எதிர்க்கிறேன்.

அரசியலுக்கு வரும் நடிகர்கள் சமூக பிரச்னைகளை எந்தளவுக்கு புரிந்து கொள்கிறார்கள், அரசியலுக்கு வந்த பிறகு அவர்கள் அதை தீர்த்து வைப்பார்களா, அதற்கான திட்டங்கள் அவர்களிடம் இருக்கிறதா? என்பதை யோசிக்க வேண்டும்.

ரஜினி, கமல், பவன் கல்யாண் அரசியல் கட்சி தொடங்கினால் அதை ஆதரிக்க மாட்டேன்.

திரைப்பட நடிகர்கள் கட்சித் தலைவர்களாவது நாட்டுக்கு மிகப் பெரிய பேரழிவு ஏற்படும்.

நடிகர்கள் தொடங்கும் அரசியல் கட்சியில் சேருவதையும் நான் விரும்பவில்லை.

இவ்வாறு பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

PrakashRaj opposes Actors Kamal Rajini entry in Politics

டிமான்டிசேஷன் பாடலுக்கு பாஜக. எதிர்ப்பு; சிம்பு ரியாக்‌ஷன் என்ன.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தட்றோம் தூக்றோம் படத்தில் இடம் பெற்றுள்ள டிமான்டிசேஷன் ஆன்தம் என்ற பாடலை சிம்பு பாடியுள்ளார்.

இதில் மோடியை எதிர்க்கும் வரிகள் உள்ளதால் சிம்புக்கு எதிர்ப்பு தெரிவிக்க பாஜக.வினர் முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது.

இதனையடுத்து சிம்பு வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்பதை பார்த்தோம்.

இது குறித்து சிம்பு கூறியுள்ளதாவது…

“கருத்து சுதந்திரம் எல்லோருக்கும் உள்ளது.

அப்பாடலில் உள்ள வரிகள் என்னுடையது அல்ல.

நான் பாடல் மட்டுமே பாடியிருக்கிறேன்.

அந்த பாடல் எந்த சர்ச்சையையும் ஏற்படுத்தவில்லை.

ஆனால் பிரச்சினை வரலாம் என்ற யூகத்தில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கின்றனர்.” என்று தெரிவித்துள்ளார் சிம்பு

ராஜமௌலியை வியக்க வைத்த டைரக்டர்ஸ் கிளப்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டைரக்டர்ஸ் கிளப் இது
உதவி இயக்குனர்களின் வாட்ஸ் ஆப் குழு.
இக்குழுவினை மகிழ்திருமேனியின் துணை இயக்குனர் சக்தி என்பவர் நடத்தி வருகிறார்.

இக்குழுவினை பற்றி சக்தி கூறுகையில் :

இதில் தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களின் உதவி இயக்குனர்கள் சுமார் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் இணைந்துள்ளனர்.
முதலில் நாங்கள் எங்கள் குழுவில் எங்களுக்கு ஏற்பட்ட சினிமா சம்பந்தப்பட்ட சந்தேகங்களை விவாதிக்கவே இக்குழுவினை ஆரம்பித்து விவாதித்தோம்.

பிறகு அந்தந்த துறை சார்ந்த ஜாம்பவான்களை அழைத்து வந்து பேச வைத்தோம் அதற்கு துணையாக இருந்து உதவியவர் உதவி கொண்டிருப்பவர் எனது நண்பரும் எங்கள் குழுவின் PRO ஆனந்த் அவர்கள்.

இக்குழுமூலம் சினிமாவில் உள்ள அனைத்து துறைகளிலும் எங்கள் சந்தேகங்களை தீர்க்க முடிந்தது.ஆரம்பத்தில் சிறிது தயக்கம் காட்டியவர்கள் இக்குழுவினை பற்றி அறிந்து தானே வந்து எங்கள் சந்தேகங்களை தீர்த்தனர் . இந்த குழுவில் இயக்குனர்கள்,
முருகதாஸ், மகிழ்திருமேனி, வெங்கட் பிரபு ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் நடிகர் மாதவன் தொடர்ந்து தங்கள் பங்களிப்பை வழங்கி வருவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன் பாகுபலி படமூலம் உலகையே இந்திய சினிமா பக்கம் திரும்பி பார்க்க வைத்த ராஜமௌலி எங்கள் குழுவில் எங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கும் எங்களை உற்சாகப்படுத்தவும் சுமார் இரண்டரை மணி நேரம் எங்களோடு இருந்தார் என்பது இன்றும் வியப்பாகவே உள்ளது என்றவர்

இந்த குழுவில் அட்மின் யார் யார் என்று கேட்டால் நான் மட்டும் தான் என்கிறார் சக்தி.

காரணம் இதில் ஆண் பெண் என இருபாலரும் உள்ளனர் அதேபோல் தற்போது பெரிய பெரிய பிரபலங்கள் வருகிறார்கள் அவர்களுக்கும் எந்த இடையூறும் ஏற்படக்கூடாது என்பதற்காகவும்
மேலும் இக்குழுவிலிருந்து பல இயக்குனர்கள் உதவி இயக்குனர்களையும் தேர்வு செய்கிறார்கள்
எனவே
நான் அந்த உதவி இயக்குனரை நன்கு விசாரித்து பிறகு தான் குழுவில் இணைப்பேன் என்கிறார்.

சக்தியின் இந்த முயற்சியை குழுவில் வந்த அனைத்து ஜாம்பவான்களும் பாராட்டியதோடு
அனைவரும் வாட்ஸ் ஆப் குருப்பில் செய்திகளை பகிர்ந்து கொள்ள மட்டுமே பயன்படுத்தும் வேளையில் சிறப்பு விருந்தினர்களை அழைத்து உரையாடல் செய்யும் புதிய சிந்தனைக்காக
அவருக்கு நண்பராகவும் மாறி விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தற்போது தமிழ் திரையுலகை தொடர்ந்து இந்தி மற்றும் Hollywood கலைஞர்களையும் விரைவில் இக்குழுவிற்கு கொண்டு வருவேன் என்கிறார் உற்சாகமாக….

அதிகமாக நகை அணியும் பெண்களுக்கு அட்வைஸ் சொல்லும் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எக்ஸட்ரா எண்டர்டெய்ண்மெண்ட் சார்பாக V மதியழகன், R. ரம்யா தயாரித்துள்ள படம் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன”.

இயக்குநர் மோகன்ராஜாவின் உதவியாளர் ராகேஷ் இயக்கியுள்ள இந்தப்படத்தில் ‘திலகர்’ துருவா ஹீரோவாக நடிக்க, ஹீரோயின்களாக ஐஸ்வர்யா தத்தாவும், அஞ்சனாவும் நடிக்கின்றனர்.

இவர்களுடன் J.D.சக்ரவர்த்தி, சரண்யா பொன்வண்ணன், ராதாரவி, நாகிநேடு, மனோபாலா, அருள்தாஸ், ‘மைம்’கோபி, ‘சதுரங்க வேட்டை’ புகழ் வளவன், ’நான் மகான் அல்ல’ ராம்ஸ் மற்றும் நிறைய அறிமுகங்களும் நடிக்கின்றனர்.

இந்த தலைப்பிற்கும், கதைக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. காரணம் இன்று சமூகத்தில் நடக்கும் சிறுசிறு குற்றங்களை மையப்படுத்தி கதை நகர்கிறது.

இன்று பெண்கள் தாங்கள் தங்கள் சுதந்திரத்தோடு இயங்கும்போது, பலவிதமான பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். சமூகத்தில் ஒரு ஆண் எதிர்கொள்ளக்கூடிய சுதந்திரத்தின் எல்லை பெண்களுக்கு உண்டா என்று கேட்டால்… இல்லை. இன்னும் பாரதியின் கனவு முழுமை பெறவில்லை. இன்னும் பயத்தோடவேதான் பெண்கள் தங்கள் வெளியில் நடமாடும் சுதந்திரத்தை அனுபவிக்கிறார்கள் என்பேன் என்கிறார் இயக்குநர் ராகேஷ்.

மேலும் அவர் கூறியதாவது,

காதல், காமம், கற்பழிப்பு, கந்துவட்டி, உரிமை மீறல், வரதட்சணை என பெண்களைச் சுற்றி நிற்கும் சமூகத்தின் வேலிகள் அவ்வளவு சாத்தியமாக்கிவிடவில்லை அவர்களின் சுதந்திரத்தை.

வேலையிடங்களில் நேர்கிற பாலியல் ரீதியான தொந்தரவுகள், அவமானத்தைக் கொண்டுவரும் வீடியோக்கள் என அவர்களின் சுதந்திரமும் உரிமையும் ஒருவித பயத்தோடுதான் அனுபவிக்க முடிகிறது.

அப்படி அவர்கள் வெளியுலகில் சமூகத்தில் சாதாரணமாக இயங்கும்போது நேரக்கூடிய ஒரு மிக மிக முக்கியமான பிரச்சனையை மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன படம் பேசுகிறது.

பெண்களின் அழகு என்பது அவர்களின் நடவடிக்கைகளிலும், ஆளுமையிலும் தான் இருக்கிறது. தவிர, அவர்கள் அணியும் ஆபரணங்களில் அல்ல. அந்த ஆபரணங்களால் பெண்களுக்கு விளைவது தொல்லையே.. பெண்களுக்கு அழகு புன்னகைதானேயொழிய பொன்னகை அல்ல.

சில பெண்கள் விழா நாட்களில் அளவுக்கதிகமாக நகைகள் அணிவதைப் பார்த்திருக்கிறோம். நகை அணிவது ஒரு கூடுதல் அழகுதான். ஆனால் அளவுக்கதிகமான அணிகலன்கள் கண்ணை உறுத்தும். சில பெண்கள் சுயதம்பட்டத்திற்கோ, பெருமைக்காகவோ நகைக்கடை போலவே காட்சியளிப்பார்கள்.

அப்படிப்பட்ட பெண்கள் ஒன்றை மட்டும் கருத்தில் கொள்ள வேண்டும். சமூக விரோதிகள் கடவுளின் கழுத்தில் கூட கை வைக்கத் தயங்குவதில்லை.

அளவான அணிகலன்களோடு வெளியே செல்லும்போது இழப்புகள் இருக்காது. நகை போனாலும் பரவாயில்லை. உயிர் போனால் என்னாவது? கோடிக்கணக்கில் பணம் இருந்தாலும் பாக்கெட்டிலா எடுத்துக்கொண்டா சுற்றுகிறோம்?

அதிக நகை என்பது எதிர்காலத்திற்கான சேமிப்பாக இருக்கட்டும். அளவுக்கதிகமான நகையோடும், ஒரேமாதிரியான நடவடிக்கைகளை தினந்தோறும் செய்வதும் பெண்களுக்கான ஆபத்தை வீடுதேடி அழைத்து வருகிறது.

பெண்களின் பாதுகாப்பை பற்றி வலியுறுத்த எடுக்கப்பட்டுள்ள இந்தப்படத்திற்கு சென்ஸார் வாங்குவதற்குள் நாங்கள் பட்ட பாடு சொல்லி மாளாது என கலங்குகிறார் இயக்குநர் ராகேஷ்.

இன்று படம் இயக்கவே என்ன பாடு என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஆனால் இங்கு இதை எடுக்கலாம். இதை எடுக்கக்கூடாது என்ற முன் அறிவுறுத்தல் இல்லாத அல்லது இதை ஏற்றுக்கொள்வார்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ற எந்தவித வழிகாட்டுதலுமில்லாத ஒரு குருட்டுத்தனமான நம்பிக்கையில்தான் படமெடுக்க வேண்டியுள்ளது.

காட்சிகள் அமைத்து அதை படமாக்கி காட்சிகளைக் கோர்த்து முழுமை பெற்ற ஒரு படமானபின் அதை இருக்கக்கூடாது என்கிறார்கள். அப்போ அந்த காட்சியை உருவாக்க செலவழித்த பணம் எல்லாம் வீண்தானே? ஒரு சென்ஸார் போர்டு உறுப்பினர்க்கு இந்த காட்சி படத்தில் இருக்கக்கூடாது என சொல்லத் தெரிகிறது. அது ஏன் இருக்கக்கூடாது என அவருக்கு சொல்லத் தெரியும்போது… அது ஏன் ஒரு இயக்குநருக்கு தெரியாமல் போகிறது என்ற கேள்வி வருகிறதே? அதற்கான பதில் என்ன?

அப்படி எந்த விதிகளும் வரைமுறைகளும் இந்த சென்ஸாரில் தெளிவாக இல்லை. இந்த சினிமா எடுப்பவர்களுக்கு அந்த வழிகாட்டுதல் ஒரு புத்தகமாகவோ அல்லது வகுப்பாகவோ சொல்லிக்கொடுக்கப்பட்டிருக்கிறதா என்றால், இல்லை என்றே சொல்வேன்.

அப்படியொரு திட்டவட்டமான விதிமுறைகள் ஏன் இல்லை என்பது என் கேள்வி? ஆளுங்கட்சியின்போது படம் எடுத்தால் எதிர்க்கட்சித் தலைவரைப் பற்றி வரும் கமெண்டுகள் அல்லது அவரைப் பற்றிய தவறான காட்சிகள் அனுமதிக்கப்படும்.

ஆளுங்கட்சியில் உள்ளவர் பற்றி அதே வார்த்தையில் அதே வார்த்தையால் காட்சிப்படுத்தப்பட்டால் அந்தக்காட்சி வெட்டப்படும். இதுதான் சென்ஸார்.

இந்தப் படத்தின் துவக்கத்தில் இடம்பெற்றுள்ள ஒருசில ரத்தக் காட்சிகளுக்காக, சில இடங்களில் கட் கொடுக்கப்பட்டது. அப்படியும் சென்ஸார் கிடைக்கவில்லை. ரிவைசிங் கமிட்டிக்கு சென்று படாதபாடு பட்டபின்னரே U/A சான்றிதழ் கிடைத்திருக்கிறது.

இத்தனைக்கும் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் படம். அவர்களுக்கு நேரும் சில பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும் முன் வைத்திருக்கிறது இந்தப்படம்.

அப்படிப்பட்ட படத்தையே பாடாய்ப்படுத்தித்தான் சென்சார் சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்.

சமீபத்தில் வெளியான ஒரு படத்தில் பேச்சுவழக்கில் இருக்கும் ஒரு வார்த்தையை அனுமதித்த சென்சார், அதே வார்த்தையை இந்தப்படத்தில் அனுமதிக்க மறுத்துள்ளது..

அதேபோல ரத்தக்காட்சிகளுடன் சில படங்களுக்கு ‘U’ சான்றிதழ் கொடுத்திருக்கும் அதே சென்சார் தான், இந்தப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியிருக்கிறது என்பதை என்னவென்று சொல்வது..? படம் எடுப்பதைவிடக் கொடூரம் இந்த சென்ஸாரில் சான்றிதழ் வாங்குவதுதான். சான்றிதழ் வாங்குவதற்கு மட்டுமே ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. என்ன பாடாய்ப்படுத்தினாலும் இறுதியில் சமூகத்திற்குத்தேவையான ஒரு கருத்தை முன்வைத்திருக்கிறோம் என்பதுதான் நிறைவு எனக் கலங்குகிறார் இயக்குநர் ராகேஷ்.

இந்தப்படத்தின் ஒளிப்பதிவை P.G.முத்தையா கையாள, கோலிசோடா2 படத்தின் இசையமைப்பாளர் அச்சு இசையமைத்துள்ளார், எடிட்டிங்கை ஷான் லோகேஷும், பாடல் வரிகளை பா.விஜய்யும், மீனாட்சி சுந்தமும் எழுத, கலையை ரெம்போன் பால்ராஜூம் (பாபநாசம், தனி ஒருவன்), சண்டைப் பயிற்சியை விமலும் அளித்துள்ளனர்.

படத்தின் ரிலீஸ் தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

More Articles
Follows