நயன்தாராவின் கல்யாண கணக்கு; கூட்டி கழிச்சி பாருங்க சரியா வரும்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2003ஆம் ஆண்டில் மலையாள படங்களில் அறிமுகமானாலும் அதன்பின்னர் தமிழில் நிலையான மார்கெட்டை பிடித்தார் நயன்தாரா.

இதனையடுத்து தெலுங்கு படங்களிலும் அதிகம் ஆர்வம் காட்டி நடித்து வருகிறார்.

இப்போது தென்னிந்தியாவில் அதிக சம்பளம் நடிகைகளில் முதலிடத்தில் இருக்கிறார் நயன்.

2010ஆம் ஆண்டிற்கு பிறகு அவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலேயே அதிகம் நடித்து வருகிறார்.

இடையில் பாஸ்கர் தி ராஸ்கல் என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மலையாள படங்களில் நடிக்க ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளாராம்.

தமிழ், தெலுங்கு அளவுக்கு மலையாளத்தில் சம்பளம் கிடையாது என்றாலும் கதாநாயகிகள் தங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல கேரக்டர்கள் அங்கு கிடைக்கும்.

தற்போது நிவின் பாலிக்கு ஜோடியாக லவ் ஆக்‌ஷன் டிராமா என்ற படத்தில் நடிக்கிறார்.

அடுத்து ‘கோட்டயம் குர்பானா’ என்ற மலையாள படத்திலும் நடிக்கவுள்ளார்.

அவரின் இந்த திடீர் மலையாள ஆர்வத்திற்கான காரணம் என்ன தெரியுமா..?

திருமணத்திற்கு பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கில் அதிக வாய்ப்புகள் கிடைக்காது.

எனவே மலையாள படங்களில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவிட்டால் அது திருமணத்திற்கு பின்னர் கை கொடுக்கும் என்பதாலேயே இந்த முடிவாம்.

நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருவதால் விரைவில் இவர்களின் திருமணம் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இப்போ கூட்டி கழிச்சி பாருங்க.. நயன்தாரா கணக்கு சரியா வருமே..

Lady SuperStar Nayanthara plan to act after marriage

வெள்ளித்திரையிலும் கலக்க ஆசைப்படும் தெய்வ மகள் காயத்ரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரேகா கிருஷ்ணா தெய்வ மகள் நெடுந்தொடர் மூலம் தமிழ் மக்களுக்கு பரிச்சயமான ஒரு நபர். இவங்க பேரு இப்போ காயத்ரி அப்டின்னு கூப்ட்றவங்க தான் அதிகம்.

ரேகா கிருஷணா பெங்களூரில் பிறந்தவர், கன்னடம், மலையாளம், தமிழ்-னு கிட்டதட்ட 12 வருடமாக 40 தொலைகாட்சி தொடரில் நடித்து கொண்டிருக்கிறார், அவங்க பண்ண எல்லா ரோலும் வில்லதனமானதுன்னு கூட சொல்லலாம் நடிப்பு மட்டும் இல்லாம இவங்க ஒரு நல்ல நடன கலைஞர் மற்றும் புகைப்பட கலைஞர்.

தமிழில் இவர் அறிமுகமான முதல் தொடர் விஜய் டிவி யில் வெளியான பாரிஜாதம்.

என்ன தான் பல தொடர்களில் இவர்கள் நடித்து இருந்தாலும் தெய்வ மகள் புகழின் உச்சம் என்றே சொல்லலாம்.

தனது நடிப்பு சின்ன திரையில் மட்டும் அல்லாது திரைப்படங்களிலும் இருக்க வேண்டும் என்ற ஆசையை அவர் கூறியுள்ளார்.

கன்னடத்தில் சில படங்களில் இவர் நடித்திருந்தாலும் தமிழ் படங்களில் நடிப்பது தான் தன்னுடைய குறிக்கோள் எனவும் கூறியுள்ளார்.

நல்ல கதாபத்திரங்கள் வரும்போது அதனை தேர்வு செய்து நடிப்பதாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Deiva Magal serial fame Rekha krishna wish to act in Tamil movies

புதுப்படங்ளை ரிலீஸ் செய்ய வேண்டாமே..? உதயநிதி கருத்துக்கு எதிராக உயரும் குரல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றதால் அந்த சமயத்தில் ஐபிஎல் போட்டியை சென்னையில் நடத்த கூடாது என சிலர் தெரிவித்தனர்.

அதே சமயம் திரையுலகினரும் தங்கள் துறைக்காக வேலை நிறுத்தம் செய்து, புதுப்படங்களை வெளியிடாமல் க்யூப் டிஜிட்டல் கட்டணத்திற்கு எதிராக போராடி வந்தனர்.

தற்போது திரையுலகம் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது.

ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான விசாரணை வழக்கு மே 3ஆம் தேதி வருகிறது.

இந்நிலையில் காவிரிக்காக தமிழ் திரைப்படங்களின் வெளியீடும் ஒத்திவைக்கப்படுமா..? என உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “ ஐபிஎல் போட்டிகள்போல் தமிழ்நாட்டில் தமிழ் திரைப்படங்கள் வெளியீடுகளும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை ஒத்திவைக்கப்படுமா.. ? செயல்படாத மத்திய மாநில அரசுகளின் கவனத்தை இன்னும் அதிகமாக ஈர்க்க உதவுமே..” என தெரிவித்துள்ளார்.

48 நாட்களாக புதுப்படங்கள் வெளியாகாமலும் பெப்சி தொழிலாளர்கள் வேலையிழந்தும் இருந்து வந்தனர்.

அப்போது தன் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தை ரி-ரிலீஸ் செய்தார். தற்போது ஸ்டிரைக் முடிவுக்கு வந்தபின் அவர் மீண்டும் இந்த பிரச்சினையை திசை திருப்ப பார்க்கிறார் என்ற கண்டனங்கள் எழுந்துள்ளன.

மேலும் ஐபிஎல் அணிகளில் ஒரு அணியை திமுக குடும்பத்தை சேர்ந்தவர்கள் வைத்துள்ளனர்.

அவர்கள் அந்த அணியை விளையாட விடாமல் செய்திருக்கலாம். அல்லது காவிரிக்காக தன் குடும்ப சேனல்களை நிறுத்தி வைத்திருக்கலாம்.

இப்படி எதையுமே செய்யாமல் மற்றவர்கள் குறை சொல்வதில் என்ன நியாயம்? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

New Tamil movies release may postponed Udhayanidhi tweet made issue

தயாரிப்பாளர்கள் சங்க வெற்றியை கொண்டாட Mr சந்திரமெளலி திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மார்ச் 01, 2018 முதல் தமிழ் திரைப்படங்கள் சம்மந்தமான பட ரிலீஸ், சூட்டிங், பத்திரிகையாளர்கள் சந்திப்பு உள்ளிட்ட எதுவும் நடைபெறவில்லை.

கியூப் மற்றும் யூ.எப்.ஓ போன்ற டிஜிட்டல் சர்வீஸ் ப்ரோவைடர்களின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி தயாரிப்பாளர்கள் சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டது.

தற்போது கட்டண குறைப்புக்கு கியூப் நிறுவனம் இறங்கி வந்துள்ளதாலும் மற்ற திரையுலகின் மற்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்துள்ளதாலும் வேலை நிறுத்தம் வாபஸ் வாங்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சுமார் இரண்டு மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சினிமா நிகழ்வுகள் மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது.

இதன் முதல் கட்டமாக, நடிகர்கள் கார்த்திக் மற்றும் அவருடைய மகன் கவுதம் கார்த்திக் மற்றும் ரெஜினா கசண்டரா நடிப்பில் திரு இயக்க ஜி.தனஞ்செயன் தயாரித்துவரும் “Mr.சந்திரமெளலி” திரைப்படத்தின் இசை வெளியீடு, ஸ்ட்ரைக்குப் பின் நடைபெறும் முதல் பெரிய நிகழ்ச்சியாகும்.

சத்யம் சினிமாஸ் திரையரங்கில் ஏப்ரல் 25 புதன்கிழமை அன்று நடைபெறவிருக்கும் “Mr.சந்திரமெளலி” திரைப்படத்தின் இசை இசை வெளியீட்டு விழாவில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் படத்தின் குழுவினர் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

இந்த விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் விஷால் பங்குபெறுகிறார். இது அவருக்கான பாராட்டு விழாவாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

Mr Chandramouli team plan to celebrate TFPC strike success

நடிகர்களின் சம்பளத்தை குறைக்க தயாரிப்பாளர்கள் முடிவு?; விஷால் அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

48 நாட்கள் வேலை நிறுத்தத்திற்கு பிறகு கோலிவுட் ஸ்டிரைக் முடிவுக்கு வந்துள்ளது.

கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் திரைத்துறையினர் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனையடுத்து அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ மற்றும் கே.சி.வீரமணி ஆகியோர் தலைமையில் திரைத்துறை அமைப்பினர் நடத்திய முத்தரப்பு பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது.

இதனையடுத்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விஷால்,

“ஏப்ரல் 20ம் தேதி முதல் புதிய படங்கள் ரிலீஸ் ஆகும். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படப்பிடிப்பு பணிகள் நாளை மறுநாள் தொடங்கும். திரையுலகினரின் வேலை நிறுத்தத்திற்கு பிறகு முதலாவதாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான மெர்க்குரி படம் இந்த வாரம் வெளியாகும்.

தமிழ் திரைத்துறை ஜூன் முதல் முழுமையாக கணினிமயமாக்கப்படும். சினிமா டிக்கெட் விற்பனை இணையதளத்தை தயாரிப்பாளர் சங்கமே தொடங்க உள்ளது.

அரசு நிர்ணயித்துள்ள அதிகபட்ச கட்டணத்தை விட கூடுதலாக எங்கும் டிக்கெட் விற்கப்படாது. முறையாக கண்காணிக்கப்படும்.

சனிக்கிழமை எல்லா நடிகர்களையும் சந்திக்கிறோம். நடிகர்களின் சம்பள விவகாரம் குறித்து பின்னர் தெரிவிக்கப்படும்.

பிரச்னை தீர உதவிய முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர்களுக்கு நன்றி. தயாரிப்பாளர் சங்க வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைப்பு அளித்த பெஃப்சி தொழிலாளர் சங்கத்திற்கு நன்றி” என்றார்.

Vishal going to meet Top actors to reduce their high salary

ரஜினி படத்துக்கு பரதேசி டைட்டில் வெச்சிருக்கலாம்ல; பாரதிராஜாவுக்கு ஆனந்த்ராஜ் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

போயஸ்கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்தை இன்று ஆனந்தராஜ் சந்தித்தார். பின்னர் ஆனந்த்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது…

ரஜினி அவர்களிடம் நிறைய விஷயங்கள் பற்றி பேசினேன்.

இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று அரசியல்வாதிகள் போலத்தான் சொல்ல வேண்டும்.

தமிழக மக்கள் மீது ரஜினிகாந்த் மிகுந்த அக்கறை வைத்துள்ளார். பொது வாழ்க்கைக்கு வந்த பிறகு மக்களுக்காக குரல் கொடுக்கிறார்.

காவிரி ஐபிஎல் பிரச்சினை போராட்டங்களின் போது தாக்கப்பட்ட காவல் துறைக்கு ஆதரவாக ரஜினி சொன்ன கருத்தை ஆதரிக்கிறேன்.

அவர் சினிமாவில் போலீஸை தாக்கவில்லையா? என்று கேட்கிறார்கள். சினிமா வேறு, நிஜவாழ்க்கை வேறு.

சினிமா பிரச்சினையில் ரஜினி தலையிட முடியாது. அதற்குதான் பல்வேறு சங்கங்கள் உள்ளன. ஆனால் ரஜினி ஆலோசனை மட்டுமே வழங்க முடியும்.

அவரை பாரதிராஜா விமர்சனம் சரியல்ல.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் கொடி பறக்குது என பாரதிராஜா தலைப்பு வைத்தார். உனக்கு அந்த தலைப்பு செட்டாகாது.

ஏன் அவர் பரதேசி என்று கூட தலைப்பு வைத்திருக்கலாம்.

அதாவது பிற தேசத்தில் இருந்து வந்தவர் என்ற அர்த்தத்தில் வைத்திருக்கலாம்.

பாரதிராஜா உள்ளிட்டோர் ரஜினியை ஏனோ குறிவைத்து தாக்குகிறார்கள்.“

இவ்வாறு ஆனந்தராஜ் பேசினார்.

Actor Anandraj met Superstar Rajinikanth at his Poes Garden residence

More Articles
Follows