தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
ஆனால் தற்போது உள்ளது போல் ஒரு மாதத்திற்கு புதிய படங்கள் ரிலீஸ் ஆகாமல் இருந்தது இல்லை என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.
ஒரு மாத்த்தை நெருங்கும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் மற்ற மொழி படங்களை தியேட்டரில் திரையிட்டு வருகின்றனர்.
மேலும் பழைய ஹிட்டான படங்களையும் திரையிடுகின்றனர்.
35 வருடங்களுக்கு முன் வெளியாகி சூப்பர் ஹிட்டான கமலின் காக்கி சட்டை படத்தை வருகிற மார்ச் 30ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்கின்றனர்.
இந்நிலையில் மம்மூட்டி-நயன்தாரா நடித்து மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான “புதிய நியமம்” என்ற படத்தையும் அதே நாளில் வெளியிடயிருக்கிறார்களாம்.
இப்படத்திற்கு தமிழில் வாசுகி என பெயரிட்டுள்ளனர்.
தன்னை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரை நயன்தாரா எப்படி பழிக்கு பழி தீர்க்கிறார் என்பதே படத்தின் சிறப்பம்சமாகும்.
சாஜன் என்பவர் இப்படத்தை இயக்கி இருக்கிறார்.
