மெகா ஸ்டாருக்கே சூப்பர் ஸ்டார் சப்போர்ட் தேவைதான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இந்தியளவில் பெரும் செல்வாக்கு உள்ளது.

எனவே பிரபல நடிகர்களும் ரஜினி டயலாக்குகளை அல்லது காட்சிகளை தங்கள் படத்தில் வைத்து விடுகின்றனர்.

இதில் மலையாள திரையுலகின் மெகா ஸ்டாரான மம்மூட்டி அவரது 3 படங்களில் ரஜினி தொடர்பான காட்சிகளை வைத்துள்ளார்.

‘புதிய நியமம்’ என்ற படத்தில் நயன்தாராவை கண்டிக்கும்போது ‘நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி’ என்று பன்ச் பேசுவார்.

அண்மையில் வெளியான ‘கசாபா’ படத்திலும் ரஜினி பட போஸ்டர்களை சில காட்சிகளில் காண்பித்திருப்பார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் வெளியான ‘தோப்பில் ஜோப்பன்’ படத்திலும் ஒரு காட்சி வைத்துள்ளார்.

அதில் ஒரு காட்சியில், போலீஸிடம்… “சாரே.. எல்லாரையும் அடிச்சுட்டு என் பிரண்டை கூட்டிட்டு போறதுக்கு நான் ஒன்னும் ரஜினி இல்லையே… நான் சாதாரண ஆள்தான்” என்று பேசியபடியே செல்வார்.

அட.. மெகா ஸ்டாருக்கே நம்ம சூப்பர் ஸ்டார் சப்போர்ட் வேனும் போலவே…

‘ரெமோ’ பார்முலாவை தலைவர்-தல-தளபதி கடைப்பிடிப்பார்களா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரெமோ படத்தை கோவை உள்ளிட்ட பகுதிகளில் பிரபல விநியோகஸ்தரான திருப்பூர் சுப்ரமணியன் வெளியிட்டார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது…

‘என்னுடைய சக்தி பிலிம்ஸ் சார்பாக 600க்கும் மேற்பட்ட படங்களை வாங்கி ரிலீஸ் செய்து இருக்கிறேன்.

ரஜினி நடித்த ‘சிவாஜி’ படத்துக்கு பிறகு படங்களை வெளியிடவில்லை.

என்னுடைய 35 வருட சினிமா வாழ்க்கையில் ஒரு தயாரிப்பாளர் என்னை போன்ற விநியோகஸ்தர்களை தேடி வந்தது இல்லை.

ஆனால் ‘ரெமோ’ தயாரிப்பாளர் ராஜா தேடிவந்து படத்தை வெளியிட வேண்டிக் கொண்டார்.

அதன்படி ‘ரெமோ’வை வாங்கி ரிலீஸ் செய்தேன்.

இப்படத்தை மினிமம் கியாரன்டிக்கு வாங்கி இருந்தாலும், திரையரங்க விகிதாச்சார அடிப்படையில்தான் ‘ரெமோ’வை வெளியிட்டேன்.

தமிழகம் முழுக்க இப்படத்தை ரூ. 30 கோடி ரூபாய்க்கு ‘ரெமோ’ படத்தை வியாபாரம் செய்து இருக்கிறார்கள்.

இதன் மூலம் நிச்சயமாக விநியோகஸ்தர்களுக்கு 10 கோடி ரூபாய் லாபம் கிடைக்கும் என நம்புகிறேன்.

விடுமுறை நாட்களில் 100 ரூபாய்க்கு டிக்கெட் விற்கப்பட்டது. அதன்பின்னர் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் விற்கப்பட்டு வருகிறது. அதாவது 50, 70 ரூபாய்க்கு விற்றனர்.

இதுபோன்ற வியாபார நடைமுறையை ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் கடைபிடிக்க வேண்டும்.

அப்படியிந்தால் நிச்சயம் அனைத்து படங்களும் வியாபார ரீதியாக வெற்றி கிடைக்கும். தியேட்டர்கள் முதல் எல்லாருக்கும் லாபம் கிடைக்கும்.” என்றார்.

கபாலி, தெறி, வேதாளம் ஆகிய படங்களின் டிக்கெட்டுக்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டதாக பல புகார்கள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

‘ரஜினி-ஷங்கர் இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பார்கள்’ – ரசூல் பூக்குட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்லம்டாக் மில்லியேனர் என்ற படத்திற்காக ஆஸ்கர் விருதை பெற்றவர் சவுண்ட் என்ஜினியர் ரசூல் பூக்குட்டி.

அண்மையில் வெளியான ரெமோ படத்திற்கும் இவர் சவுண்ட் இன்ஜினியராக பணிபுரிந்தார்.

தற்போது ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 2.ஓ படத்திற்கும் பணியாற்றி வருகிறார்.

இதுகுறித்து அவர் வடஇந்திய பத்திரிகை ஒன்றுக்கு அவர் பேட்டியளிக்கையில்…

“2.ஓ படத்தில் ரஜினியுடன் அக்ஷய்குமாரும் இணைந்துள்ளதால் படத்திற்கு இந்தியளவில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இதற்காக ஷங்கர் மேற்கொண்டு வரும் பிரம்மாண்ட அரங்குகளை பார்த்தேன். ஒவ்வொன்றும் பிரமிக்க வைக்கிறது.

இப்படம் வெளியான பிறகு இந்திய கலைஞர்கள் இப்படத்தை முன்னுதாரணமாக வைத்துக் கொள்ளலாம்.

அடுத்தவருடத்தின் பாதி நாட்களை நான் இப்படத்திற்காக செலவழிக்க உள்ளேன்.

நிச்சயம் இந்த கூட்டணி இந்தியாவை பெருமைப்பட வைக்கும்” என்றார்.

விஜய்க்காக காத்திருக்கும் விஜய்சேதுபதி பட இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரத்தின சிவா இயக்கத்தில் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்ற படம் றெக்க.

இதில் விஜய்சேதுபதியுடன் லட்சுமி மேனன், சதீஷ், கேஎஸ். ரவிக்குமார், கிஷோர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இப்படம் வெற்றி பெற்றதை அடுத்து இதுபோன்ற ஒரு கமர்ஷியல் ஆக்ஷன் கதையை ஒன்றை எழுதி வருகிறாராம் ரத்தினசிவா.

ஸ்கிரிப்ட் ஒர்க் நிறைவு பெற்றவுடன் விஜய்யை சந்தித்து கதை கூறவிருக்கிறாராம்.

மேலும் நடிகர் ராகவா லாரன்சுக்காக மற்றொரு கதையை தயார் செய்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

‘சிவகார்த்திகேயன் சிக்கல் எனக்கும் வந்தது…‘ விஷால் விளாசல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தன்னுடைய படங்களுக்கு சிலர் பிரச்சினை செய்வதாக கூறிய சிவகார்த்திகேயன் ரெமோ பட விழாவில் அழுதார்.

எனவே இவருக்கு ஆதரவாக சிம்பு குரல் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் இந்த புகார் குறித்து காஞ்சிபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் கூறியதாவது…

சிவகார்த்திகேயன் போல் நானும் ஒரு காலத்தில் கட்டப்பஞ்சாயத்தால் பாதிக்கப்பட்டேன்.

சிவகார்த்திகேயன் அளித்த புகாரில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும், நடிகர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் மீது இருக்கும் ஊழல் புகார் தொடர்பான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

மீண்டும் மெரினா இயக்குனருடன் இணைவாரா சிவகார்த்திகேயன்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரித்து இயக்கவிருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ்.

இதில் ஜிவி. பிரகாஷ் நடிக்கக்கூடும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இவர் சிவகார்த்திகேயனுக்காக ஒரு கதையை தயாராக வைத்திருக்கிறாராம்.

ஆனால் தற்போது சிவகார்த்திகேயனின் கால்ஷீட் 24ஏஎம் ஸ்டூடியோஸ் கைவசம் உள்ளது.

இதனிடையில் சிவகார்த்திகேயன் ஓகே சொன்னால் பாண்டிராஜீடன் இணைய வாய்ப்பிருக்கிறது.

மெரினா படம் மூலம் சிவகார்த்திகேயனை சினிமாவுக்கு கொண்டு வந்தவர் பாண்டிராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows