விமல்-தனுஷை அடுத்து மாதவனை இயக்கும் சற்குணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விமல் நடித்த களவாணி, வாகை சூடவா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சற்குணம்.

அதனையடுத்து தனுஷின் நையாண்டி, அதர்வாவின் சண்டிவீரன் உள்ளிட்ட படங்களை இயக்கினார்.

இந்நிலையில் களவாணி 2 படத்தை இவர் இயக்கப்போவதாக சில ஊடகங்களில் செய்தி வெளியானது.

ஆனால் இவர் அடுத்து மாதவன் இயக்கவுள்ள படத்தை இயக்கவிருப்பதாக அறிவித்துள்ளார்.

kalavani director sargunam joins with madhavan

வடிவேலுவை பாலோ செய்யும் அம்பானி சங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லிங்குசாமி இயக்கத்தில் அஜித் நடித்த ஜி படத்தில் காமெடி நடிகராக அறிமுகமானவர் சங்கர்.

தொடந்து சிம்புவின் வல்லவன், கருப்ப சாமி குத்தகைதாரர், குசேலன், பட்டத்துயானை போன்ற படங்களில் சிறு வேடத்தில் காமெடியனாக வலம் வந்தார்.

கருணாஸ் நடித்த அம்பாசமுத்திரம் அம்பானி படத்தில் கருணாஸுடன் இணைந்து காமெடியில் கலக்கி இருந்தார்.

இதனையடுத்து, தனது பெயரை அம்பானி சங்கர் என்று மாற்றிக் கொண்டு ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.

அண்மையில் வெளியான பட்டதாரி படத்தில் ஐந்து நாயர்களில் ஒருவராக நடித்திருந்தார்.

வடிவேலுதான் இவருக்கு ரோல் மாடலாம்.

அவரைப் போல காமெடியனாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்பதே தனது லட்சியம்” என்கிறார் அம்பானி சங்கர்.

இவர் வடிவேலுடன் இணைந்தும் காமெடி செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வரிவிலக்கு கொடுப்பதால் ரசிகர்களுக்கு என்ன பயன்..? கோர்ட் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழில் நேரடியாக தயாராகும் படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் தமிழக அரசின் வரி விலக்கு கிடைக்கும்.

இதில் சில நிபந்தனைகள் இருந்தாலும், இதுவொரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

ஆனால், தமிழில் பெயர் வைப்பதால் தயாரிப்பாளர்கள் மட்டுமே பயன் அடைவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது-

இது தொடர்பாக வழக்கு ஒன்று கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

கடந்த பத்தாண்டுகளில் 2000க்கும் அதிகமான படங்களுக்கு; வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும், 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதாகவும் தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதனைக் கேட்ட நீதிபதி வரி விலக்கு அளிக்கப்படும் திரைப்படங்களுக்கு கட்டணத்தை 30 சதவீதம் குறைத்து நிர்ணயிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும் இந்த விதிமுறைகளில் பாராபட்சம் காட்டக்கூடாது.

ஆனால் தமிழில் பெயர் வைப்பதால், தமிழ் வளர்ச்சிக்கோ, படம் பார்க்கும் ரசிகர்களுக்கோ பலன் இல்லை என்றும் தெரிவித்தார்.

இவ்வழக்கு நாளை மறுதினம் ஒத்திவைக்கப்பட்டது.

கபாலி நஷ்டம்: ரஜினியை சந்தித்த தியேட்டர் உரிமையாளர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியளவில் மாபெரும் வசூல் சாதனை படைத்த படம் கபாலி என கூறப்பட்டது.

ஆனால் திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஏரியாக்களில் உள்ள திரையரங்க உரிமையாளர்கள், “கபாலி” யால் தங்களுக்கு சுமார் 2 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் இவர்கள் தயாரிப்பாளர் தாணுவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியும் இதில் முடிவு எட்டப்படவில்லை என தெரிகிறது.

எனவே அடுத்த கட்ட முயற்சியாக 2.ஓ சூட்டிங்கில் இருந்த ரஜினியை தியேட்டர் உரிமையாளர்கள் நேரில் சந்தித்து பேசியுள்ளனர்.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்களை கலந்து ஆலோசித்து பிரச்சினையை கவனத்தில் கொள்வதாக ரஜினி உறுதியளித்துள்ளார்.

ஜிவி. பிரகாஷுக்கு விஜய் கல்தா; அட்லிக்கு கிடைக்கும் பெருமை!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பைரவா படத்தை தொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார்.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பார் என்று தகவல்கள் வந்தன.

ஆனால், தற்போது இசையமைக்க ஏ.ஆர். ரஹ்மான் கமிட் ஆகியிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இதன் சூட்டிங் அடுத்த வருடம் ஜனவரி மாதம் இறுதியில் தொடங்க உள்ளது.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பை கலிபோர்னியாவில் உள்ள வார்னர் பிரதர்ஸ் ஸ்டூடியோவில் நடத்தவிருக்கிறார்களாம்.

இதுவரை எந்த ஒரு தமிழ் படமும் இங்கே படமாக்கப்பட்டதில்லை.

எனவே இந்த பெருமை இயக்குனர் அட்லிக்கு கிடைக்கவுள்ளது.

‘லைட்ஸ் அவுட்’, ‘கான்ஜுரிங் 2’, ‘காட்ஸில்லா’, ‘ஹாரிபாட்டர்’ உள்ளிட்ட ஹாலிவுட் படங்கள் இங்கே படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அஜித்-விஜய்சேதுபதி இருவருக்கும் கதை எழுதிய பிரபலம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடித்து வரும் ‘தல 57’ படத்தை சிவா இயக்க, சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இதில் வில்லனாக விவேக் ஓபராய் நடிக்க, நாயகிகளாக காஜல், அக்ஷரா ஹாசன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இன்டர்நேஷனல் க்ரைம் த்ரில்லராக உருவாகும் இப்படத்திற்கு கபிலன் வைரமுத்து கதை எழுதியுள்ளார்.

இவரேதான், கே.வி. ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் கவண் படத்திற்கும் கதை எழுதியுள்ளாராம்.

More Articles
Follows