தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
நசீர் இப்படத்தை தயாரித்திருந்தார்.
இந்நிலையில் இதன் 2ஆம் பாகத்தை சற்குணம் தயாரிப்பதாக அறிவித்து அதன் பர்ஸ்ட் லுக்கை சிவகார்த்திகேயன் வெளியிட்டார்.
இப்படத்திற்கு கே2 (K2) எனப் பெயரிட்டுள்ளார்.
தற்போது இதன் 2-ம் பாகத்திற்கு கடும் போட்டி எழுந்துள்ளது.
‘களவாணி’ படத் தயாரிப்பாளரான நசீர் இது தொடர்பாக ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
‘தற்போது பூனம் கவுர் நடிப்பில் மதிவாணன் இயக்கத்தில் ‘வதம்’ படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறோம். மே மாதம் இப்படம் வெளியாகவுள்ளது.
இதனையடுத்து முக்கிய நடிகர் நடிகையர் நடிக்க ‘களவாணி 2’ என்ற படத்தை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கவுள்ளோம்.
‘களவாணி 2’ படத்திற்கான படத்தலைப்பின் உரிமையை ஷெராலி பிலிம்ஸ் தயாரிப்பாளர் சங்கத்தில் முறையே பெற்றுள்ளது.
இப்படத்தின் நடிக்கவுள்ள நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரம் விரைவில் வெளியிடப்படும்” என்று நசீர் தெரிவித்துள்ளார்.
