விக்ரமின் *கடாரம் கொண்டான்* படத்தலைப்பின் விளக்கம் இதுதான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தி விக்ரம் நடித்து வருகிறார்.

‘தூங்காவனம்’ பட இயக்குனர் ராஜேஷ் எம்.செல்வா இப்படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்திற்கு ‘கடாரம் கொண்டான்’ எனத் தலைப்பிட்டுள்ளனர்.

இதன் பர்ஸ்ட் லுக்கை ஓரிரு தினங்களுக்கு கமல் வெளியிட்டார்.

ஆனால் ‘கடாரம் கொண்டான்’ என்றால் என்ன? என்பதை அறிய வேண்டி பலரும் இணையத்தில் தேடியுள்ளனர்.

அதற்கான விளக்கம் இதுதான்…

தஞ்சாவூரில் உள்ள பெரிய கோவிலை கட்டியவர் ராஜராஜா சோழன். இவரின் மகனான ராஜேந்திர சோழன், மலேசியாவில் உள்ள கெடா என்ற பகுதி வரை போர் தொடுத்துள்ளார்.
அதில் வென்று அந்த பகுதியை தன் வசப்படுத்தியதால் அவருக்கு ‘கடாரம் கொண்டான்’ என்று பெயர் வந்ததாம்.

இப்படியொரு வரலாற்று சிறப்புமிக்க பெயரை தான் தங்கள் படத்திற்கு தலைப்பாக வைத்துள்ளனர் கமல், விக்ரம் படக்குழுவினர்.

Kadaram Kondan movie title and its historical meaning

உண்மைச் சம்பவத்தை படமாக்கும் *கொம்புவச்ச சிங்கம்டா* டீம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தன் முதல் படமான சுந்தரபாண்டியன் படத்தில் சசிகுமாரை இயக்கினார் எஸ்.ஆர்.பிரபாகரன்.

இப்படம் வெற்றிப் பெற்றது. ஆனால் இதற்கு அடுத்து எடுத்த இது கதிர்வேலன் காதல், சத்ரியன் படங்கள் மிகப்பெரிய தோல்வியை தழுவியது.

எனவே மீண்டும் சசிகுமாரை நாயகனாக வைத்து கொம்புவச்ச சிங்கம்டா என்ற படத்தை இயக்கி வருகிறார் எஸ்.ஆர்.பிரபாகரன்.

இதில் நாயகியாக மடோனா செபாஸ்டின் நடிக்க, கலையரசன், சூரி, யோகிபாபு, இயக்குனர் மகேந்திரன், ஹரீஷ் பெரடி, ஸ்ரீபிரியங்கா, துளசி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய திபு நைனன் தாமஸ் இசையமைத்து வருகிறார்.

படம் பற்றி எஸ்.ஆர்.பிரபாகரன் கூறியதாவது…

இது 1990 முதல் 1994 வரையிலான 4 ஆண்டுகளில் நடக்கும் கதை. மதுரை அருகில் உள்ள சிறு நகரில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் திரைக்கதை அமைத்திருக்கிறேன்.

அந்த சம்பவம் என்ன? எந்த ஊர் என்பதை வெளிப்படையாக சொல்ல முடியாது. 1990ல் உள்ள சினிமா போஸ்டர்கள், பணம் உள்ளிட்டவைகளை சேகரித்து வருகிறோம். என கூறியுள்ளார்.

Sasikumars Kombu Vecha Singamda movie news updates

கமல் அண்ணன் & கீர்த்தி சுரேஷ் பாட்டி இணைந்த படத்தில் ரஜினி வாய்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் நிறைய படங்களில் நடித்துள்ளார் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

தற்போது அவருக்கு 85 வயதாகிவிட்டது. இருந்தபோதிலும் அவர் ஒரு படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.

“தாதா 87” என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜா நடித்துள்ளார்.

இவர் அண்மையில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்திலும் நடித்திருந்தார்.

இவர்களுடன் ஜனகராஜ் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

விஜய்ஸ்ரீ என்ற புதுமுகம் இயக்கியுள்ள இப்படத்தில் லியாண்டர் லீ மார்ட்டின் இசையமைத்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன் “ரஜினியிடம் ஒரு நிருபர் உங்கள் கட்சி கொள்கை என்ன? என்று கேட்டார், ஒரு நிமிஷம் எனக்கு தலை சுத்திருச்சு” என்று ரஜினி கூறியிருந்தார்.

இந்த பேச்சு அப்போது ட்விட்டர் மற்றும் செய்திகளில் பரபரப்பாக பேசப்பட்டது.

“ஒருநிமிஷம் தலை சுத்திருச்சு…” என்ற அந்த டயலாக்கே தற்போது தாதா 87 படத்தில் பாடலாக அமைந்து விட்டது. அந்த பாடல் வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளனர்.

இந்த பாடலின் இறுதியில் ரஜினிகாந்தின் டிரேட் மார்க் சிர்ப்பை பயன்படுத்தியுள்ளனர்.

Oru Nimisham Thala Suthi Ruchu song from DhaDha87

புருசன் பொண்டாட்டிய அடிக்க திண்னையில் கிடக்கிறவன் அழுதானாம்.; சர்காருக்கு ஆதரவாக கருணாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படத்திற்கு வழக்கம் போல் சர்ச்சையை கிளப்பி திரையரங்க பதாகையை கிழித்து போராட்டம் செய்து வருகின்றனர் ஆளுங்கட்சி அ.தி.மு.க.,வினர்.

இது வன்மையாகக் கண்டிக்கத்தக்க அநாகரிக செயலாகும்.

சர்கார் திரைப்படம் முறையாக தணிக்கை செய்யப்பட்டு தணிக்கைக் குழுவின் ஆட்சேபனையின்றி வெளிவந்த வேலையில் அத் திரைப்படத்தில் உள்ள காட்சிகளையும், வசனங்களையும் நீக்க சொல்லி போராடுவது சட்டவிரோத செயலாகும்.

அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், உதயகுமார், கடம்பூர் ராஜு ஆகியோர் விரும்படிதான் படம் எடுக்க வேண்டுமென்றால், அதை தணிக்கைக்குழு விரும்பாத படமாகத்தான் படம் எடுக்க முடியும். இவர்கள் யார் என்று தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியும்.

கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு “பொண்டாட்டி காரன் பொண்டாட்டிய அடிக்க திண்னையில் கிடக்கிறவன் தேமி..தேமி.. அழுதானாம்” அதுபோல படத்தின் காட்சிகளுக்கு ஏற்ப வசனங்களும், நாட்டின் அரசியல் சூழலுக்கு ஏற்ப காட்சிகளையும் ஒரு இயக்குநர் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் போது! அ.தி.மு.க. வினார் கொதிக்கிறார்கள் என்றால் காரணம் என்ன?

அவர்களின் அரசியல் அடவாடியெல்லாம் திரைப்படங்கள் வழி தெரிந்து விடுகிறதே என்றா?

சர்கார் திரைப்படம் “ஒட்டு மொத்த இன்றைய அரசியலை” தோலுரித்து காட்டி மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

அந்த விழிப்புணர்வை ஏன் மக்களுக்கு தெரியப்படுத்துகிறீர்கள் என்று அ.தி.மு.க. அராஜகம் செய்கிறதா?

இவ்வாறு செய்வீர்களேயானால் இன்னும் இது போல் இன்னும் ஆயிரமாயிரம் படங்கள் வெளிவந்து கொண்டே இருக்கும் அதையாரும் தடுக்க முடியாது.

போலி அரசியலின் முகமூடி இதுபோன்ற படங்களில் வழியாகத்தான் கிழிந்து தொங்கும். அதை மக்களும் விரும்புவார்கள்!

சட்டப்படியாக தணிக்கைப் பெற்ற இத்திரைப்படத்தை அரசியல் சூழ்ச்சிகளால் தடுக்க நினைப்பது, வசனங்கள் – காட்சிகளை நீக்கச் சொல்லது கருத்துச் சொல்லும் உரிமைக்கு எதிரான செயல்பாடாகும்.
இச்செயலை வன்முறையாகக் கண்டிக்கிறேன்.

இந்நிலை தொடர்ந்து நீடிக்குமேயானால் ஒட்டுமொத்தத் திரைப்படத்துறையும் இணைத்து பெரும் போராட்டத்தை தொடங்குவோம்!

இவ்வாறு தனது அறிக்கையில் எம்.எல்.ஏ.,கருணாஸ் தெரிவித்துள்ளார்.

Actor cum MLA Karunas support Sarkar team and he condemns TN Govt

Breaking : தணிக்கை செய்யப்பட்ட சர்காரை தடுப்பதா.?; ரஜினி கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த நவம்பர் 6ஆம் தேதி தீபாவளி தினத்தில் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்கார் திரைப்படம் வெளியானது.

இப்படத்தில் ஆளும் அதிமுக அரசை கண்டிக்கும் வகையில் சில காட்சிகள் இருந்தமையால் இப்படத்திற்கு பலத்த எதிர்ப்புகள் உருவானது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதிமுக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட சர்கார் திரையிடப்படும் தியேட்டர்களில் காட்சிகள் நிறுத்தப்பட்டன.

தமிழகத்தில் ஒரு பரபரப்பான சூழ்நிலை இதனால் உருவானது. எனவே சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க படக்குழு ஒப்புக் கொண்டது.

இது திரையுலகினரின் மத்தியில் பெரும் சலசலப்பை உருவாக்கியது.

இந்நிலையில் சென்சார் செய்யப்பட்ட ஒரு படத்தை தடுக்க நினைப்பது சரியல்ல என சர்கார் படக்குழுவுக்கு தன் ஆதரவை தெரிவித்தார் கமல்ஹாசன்.

இந்நிலையில் சற்றுமுன் 5 நிமிடங்களுக்கு முன் நடிகர் ரஜினிகாந்த் அவர்களும் தன் ட்விட்டர் பக்கத்தில் சர்கார் படத்திற்கு ஆதரவாக தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.

அவர் கூறியதாவது…

Rajinikanth‏Verified account @rajinikanth 4m4 minutes ago

தணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு,அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கவேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்பதும்,படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள். இத்தகைய செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.” என பதிவிட்டுள்ளார்.

Rajini supports Vijays Sarkar team and he condemns TN Sarkar

Breaking : நாடாளப்போகும் நல்லவர் கூட்டமே வெல்லும்.; விஜய்க்கு கமல் ஆதரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தீபாவளி திருநாளை முன்னிட்டு விஜய் நடிப்பில் உருவான சர்கார் திரைப்படம் வெளியானது.

இப்படத்தில் அரசுக்கு எதிராக சில காட்சிகள் இருப்பதாக கூறி ஆளுங்கட்சியான அதிமுக அரசு போர்க்கொடி உயர்த்தியுள்ளது.

மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயரான கோமளவள்ளியை பயன்படுத்தியுள்ளதாகவும் அதையும் நீக்க வேண்டுமென கடுமையாக எதிர்த்தனர்.

இதன்படி தமிழகத்தின் பல்வேறு திரையரங்குகளில் சர்கார் காட்சிகள் நிறுத்தப்பட்டன.

இந்நிலையில் இதுபோன்ற பல பிரச்சினைகளை பார்த்த நடிகர் கமல்ஹாசன் அவர்கள் சர்கார் படத்திற்கு ஆதரவு தெரிவித்து தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அவர் பதிவிட்டுள்ளதாவது…

Kamal Haasan‏Verified account @ikamalhaasan
முறையாகச்சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார் படத்துக்கு,சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்கு புதிதல்ல.

விமர்சனங்களை ஏற்கத்துணிவில்லாத அரசு தடம் புரளும்.அரசியல் வியாபாரிகள் கூட்டம் விரைவில் ஒழியும். நாடாளப்போகும் நல்லவர் கூட்டமே வெல்லும்.

Kamal supports Sarkar movie team in controversial scenes issue

More Articles
Follows