ஜெயம்ரவி-விஜய் இணையும் வனமகன் ரிலீஸ் தேதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் வனமகன்.

தற்போது இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது முதல் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

இப்படம் முற்றிலும் வனம் மற்றும் வனம் சார்ந்த கதைக்களத்தை கொண்டுள்ளது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகவுள்ளது.

மே மாதம் 12ஆம் தேதி இப்படத்தை வெளியிட இப்பட தயாரிப்பு நிறுவனமான திங்க் பிக் ஸ்டூடியோஸ் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Jayam Ravis Vanamagan release date

ஜிவி. பிரகாஷின் ‘செம’ போஸ்டரை வெளியிட்ட கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாண்டிராஜின் உதவியாளர்கள் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் ஜி.வி. பிரகாஷ்.

பிரசாந்த் இயக்கியுள்ள இவரின் புரூஸ்லி வருகிற மார்ச் 17ஆம் தேதி வெளியாகிறது.

இதனையடுத்து பாண்டிராஜ் தயாரித்து அவரின் மற்றொரு உதவியாளரான வள்ளிகாந்த் இயக்கும் செம படத்தில் நடித்து வருகிறார் ஜி.வி. பிரகாஷ்.

ஜி.வி.யே நாயகனாக நடித்து இசையமைக்கும் இப்படத்தில் அர்த்தனாக, யோகிபாபு,கோவை சரளா, மன்சூர் அலிகான், சுஜாதா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் சற்றுமுன் ‘செம’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ரை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் கார்த்தி.

Karthi unveiled GV Prakashs Sema first look poster

‘மக்கள் தந்த வெற்றியை ரஜினி ஆசியுடன் பெற்றேன்’ – அருண்விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தவறு எங்கு நடந்தாலும் தட்டி கேட்பதிலும், நல்லது எங்கு நடந்தாலும் பாராட்டுவதிலும் உயர்ந்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இவர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே பெரும் ஆதரவைப் பெற்ற குற்றம் 23 படத்தை வெகுவாக பாராட்டியிருந்தார்.

எனவே படத்தின் நாயகன் அருண்விஜய், இயக்குனர் அறிவழகன் உள்ளிட்ட படக்குழுவினர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளனர்.

அப்போது அவர்கள் ரஜினியுடன் போட்டோ எடுத்து அதை ட்விட்டரில் பகிர தற்போது அது ட்ரெண்டாகி வருகிறது.

இந்த சந்திப்பு குறித்து அருண்விஜய் கூறும்போது…

“மக்கள் ஆதரவால் குற்றம் 23 மாபெரும் வெற்றி அடைந்துள்ளது. இதை பாராட்டி தலைவர் ரஜினி ஆசி வழங்கினார்.” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ArunVijay‏Verified account @arunvijayno1 19m19 minutes ago
Received the blessings from #Thalaivar #Rajini sir for the grand success of #Kuttram23 which u all gave us.

Arun Vijay got blessings of Rajini for the success of Kuttram 23 movie

மார்ச் 16ல் திரையரங்குகளில் ‘பாகுபலி 2’ விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜமௌலி இயக்கும் படங்கள் அனைத்தும் இந்தியாவையே திரும்ப பார்க்க வைக்கும்.

இவர் இயக்கி வெளியான பாகுபலி முதல் பாகம் உலக சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது.

ரூ. 600 கோடிக்கு மேல் இப்படம் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தற்போது பாகுபலி 2 ரிலீசுக்கு தயாராகிவிட்டது.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலரை மார்ச் 16ஆம் தேதி காலை 9 மணிக்கு வெளியிடவிருக்கிறாராம்.

அதனை தொடர்ந்து இது திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளதாம்.

அதே தினம் மாலையில் 5 மணிக்கு இணையத்தில் வெளியிடப்படுகிறதாம்.

ஏப்ரல் 28ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அன்றைய தினம் பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார்? என்பதற்கு விடை கிடைத்துவிடும் என்பதால் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்து கிடக்கின்றனர்.

Baahubali 2 trailer and movie release updates

வடிவேலு-சந்தானம் ரூட்டுக்கு யோகிபாபுவும் வந்துட்டாரு…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் காமெடியன்களுக்கு பஞ்சம் வந்துவிடும் போல.

ஏனென்றால் காமெடியன்கள் எல்லாம் தற்போது ஹீரோ அவதாரம் எடுத்து வருகின்றனர்.

கவுண்டமணி, வடிவேலு, விவேக், சந்தானம் ஆகியோர் ஹீரோவாகி விட்டனர்.

தற்போது இவர்களின் வரிசையில் காமெடியில் கலக்கிக் கொண்டிருக்கும் யோகிபாபும் இணைந்துவிட்டார்.

எல்லா பெண்களும் என்னையே பார்க்கிறார்கள் என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை கணபதி பாலமுருகன் இயக்கவிருக்கிறாராம்.

இனிமே யோகிபாபு காமெடி ரூட்டுக்கு வருவாரா? என்பதற்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும்.

Yogibabu going to act as hero directed Ganapathy Balamurugan

அஜித் படத்துடன் கனெக்ஷன் ஆகும் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷால் முதன்முறையாக ஒரு நேரடி மலையாள படத்தில் நடிக்கவிருக்கிறார் என்பதை பார்த்தோம்.

இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் ஹன்சிகா நடிக்கின்றனர்.

‘லிங்கா’ தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்க, உன்னி கிருஷ்ணன் இயக்கவிருக்கிறார்.

இந்நிலையில் இப்படத்திற்கு வில்லன் என்று பெயரிடப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

அஜித் இரு வேடங்களில் நடித்து சூப்பர் ஹிட்டான படம் வில்லன் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Vishals malayalam debut movie connect with Ajith

More Articles
Follows