தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
ஆனால், தியேட்டர்கள் ஸ்டிரைக் காரணத்தால், இப்படங்களை தியேட்டர்களில் ரசிகர்களால் பார்க்க முடியவில்லை.
தற்போது ஸ்டிரைக் முடிந்து இன்றுமுதல் திரையரங்குகளில் இப்படங்களை மீண்டும் திரையிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக பேச பத்திரிகையாளர்களை வனமகன் மற்றும் இவன் தந்திரன் படக்குழுவை சேர்ந்த கலைஞர்கள் சந்தித்தனர்.
அப்போது ஆர்.ஜே. பாலாஜி பேசியதாவது…
நான் இந்த படம் இல்லைனா வேற படத்தில் நடிக்க போய் விடுவேன், ஆனால் இயக்குனர் கண்ணனுக்கு அப்படி இல்லை.
ரொம்ப கஷ்டத்தில் தான் இந்த படத்தை எடுத்திருக்கிறார். ரங்கூன் ஏதோ ஒரு படம் ஓடிருச்சுனு இல்லாம, அடுத்தடுத்து ஹிட் என்றாகியிருக்க வேண்டியது.
கடவுள் புண்ணியத்தால் நாளை மீண்டும் ரிலீஸாகிறது. தமிழ் சினிமாவில் பல தேவையில்லாத சின்ன சின்ன விஷயங்களை குறைத்தால் சினிமா இன்னும் சூப்பராக இருக்கும்.
மக்கள் எப்போதுமே கோடிகளில் புரளும் சினிமாக்காரர்களுக்கு என்ன பிரச்சினை என்ற கோணத்திலேயே பார்க்கிறார்கள்.
இங்கும் பல பிரச்சினகள் இருக்கு. திரையரங்குகளின் ஸ்ட்ரைக் முடிவுக்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
எல்லோரும் தியேட்டருக்கு வந்து படத்தை பாருங்கள்” என்றார் ஆர்.ஜே.பாலாஜி.
