‘நான் நினைச்சப்படி படம் எடுக்க முடியல…’ AAA பற்றி ஆதிக் ரவிச்சந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

3 வேடங்களில் சிம்பு நடித்த AAA படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார்.

இப்படம் கடந்த ஜீன் 23ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

இப்படத்திற்காக உடம்பை ஏற்றிய சிம்புவின் உழைப்பை இயக்குனர் வீணடித்துவிட்டார் எனவும் சிம்பு ரசிகர்களே சொல்லி வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தன் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளதாவது…

எனக்கு முழுமையான சுதந்திரம் கொடுக்கப்படவில்லை. நான் நினைத்தப்படி படத்தை இயக்க முடியவில்லை.

என் எண்ணம் படி படம் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இப்போது அதை பற்றி பேசி என்ன பயன். நானே பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன்” என வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

I couldnt direct AAA movie as per my wish says Adhik Ravichandran

விவேகம் எந்த மாதிரியான படம்; லேட்டஸ்ட் அப்டேட்ட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வீரம், வேதாளம் படங்களை தொடர்ந்து அஜித், டைரக்டர் சிவா மீண்டும் விவேகம் படத்திற்காக இணைந்துள்ளதால், ஹாட்ரிக் வெற்றிக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் விவேகம் படம் குறித்த நிறைய தகவல்கள் சிவா தன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அதில்…

இதன் திரைக்கதை டைம் ரன் ஸ்க்ரிப்ட். அதனால்தான் இப்பட தலைப்பையே டைம் ஃபார்மெட்டில் டிசைன் செய்துள்ளோம்.

அக்ஷராஹாசனுக்கு முக்கியமான கேரக்டர். அவருடைய கேரக்டரை சுற்றிதான் கதைக்களம் அமைத்துள்ளோம்.

இது ஒரு இண்டர்நேஷ்னல் கதையாகும். இதன் மூலம் அஜித்திற்கு ஒரு இண்டர்நேஷ்னல் லுக் கிடைக்கும்.

இண்டர்நேஷ்னல் படம் என்றாலும் அதில் இந்திய எமோஷ்னல் இருக்கும்.

வீரம் படத்தில் சகோதர பாசம், வேதாளம் படத்தில் தங்கச்சி பாசம் உள்ளதுபோல் இதிலும் ஒரு குடும்ப பாசம் உள்ளது.

95 படத்தின் காட்சிகள் செர்பியா, ஆஸ்ட்ரியா, பல்கேரியா, க்ரோஷியா நாட்டில் படமாக்கப்பட்டுள்ளது.

கடுங்குளிரிலும் 12 டிகிரியிலும் அஜித் நடித்துக் கொடுத்தார்.

தன் எண்ணம் போல்தான் வாழ்க்கை அமையும் என்பதை அஜித் அடிக்கடி கூறவார்” என்று அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Ajith Siva combo Vivegam movie latest updates

நாளை அமெரிக்கா பறக்கும் ரஜினி; அடுத்த திட்டம் என்ன..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஞ்சித் இயக்கும் காலா பட சூட்டிங்கில் கலந்துக் கொள்ள மும்பை சென்றார் ரஜினிகாந்த்.

தற்போது அவருக்கான காட்சிகளை நடித்துக் கொடுத்துவிட்டாராம்.

இனி அடுத்த கட்டப் படப்பிடிப்பில் கலந்துக் கொள்ளும் வரை அவர் ஓய்வில் இருப்பாராம்.

எனவே அடுத்த கட்ட நடவடிக்கையாக நாளை அமெரிக்கா செல்கிறார்.

அங்கு இரண்டு வாரங்கள் தங்கியிருந்து, மருத்துவ பரிசோதனைகள் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து சென்னை வந்தபின்னர் மீண்டும் காலா சூட்டிங்கில் கலந்துள் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதன்முறையாக 3டி டிஜிட்டல் மீட்டிங்க்கு 2.0 டீம் ஏற்பாடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தை ரூ. 400 கோடியில் தயாரித்துள்ளது லைக்கா நிறுவனம்.

இப்படத்தை முற்றிலும் 3டியில் உருவாக்கி இருக்கிறாராம் ஷங்கர்.

எனவே இது குறித்த அறிவிப்பையும் இது தொடர்பான ஆலோசனைகளை கூட்டங்களையும் நடத்த திட்டமிட்டு இருக்கிறது லைக்கா.

எனவே தமிழகத்தில் உள்ள தியேட்டர் உரிமையாளர்களை அழைத்து 3டி குறித்த திட்டங்களை விளக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதுபோன்ற 3டி டிஜிட்டல் மீட்டிங் நடப்பது இதுதான் முதன்முறை என கூறப்படுகிறது.

‘கமலுக்கு அப்புறம் விஜய்சேதுபதிதான்..’ மாதவன் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புஷ்கர் மற்றும் காயத்ரி இணைந்து இயக்கியுள்ள படத்தில் மாதவன், விஜய்சேதுபதி இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

இவர்களுடன் வரலட்சுமி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், கதிர் உள்ளிட்டோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சற்றுமுன் சென்னையில் நடைபெற்றது.

அப்போது மாதவன் பேசியதாவது…

நான் கமல், அமீர்கான் உள்ளிட்ட பல பேர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளேன்.

கமலுக்கு அடுத்து விஜய்சேதுபதி போன்ற புத்திசாலியாக யோசிக்கும் நடிகரை பார்த்தது இல்லை.

எங்கள் நட்பு சிகரெட்டில் ஆரம்பித்து விட்டது” என்று பேசினார்.

இப்படம் ஜீலை முதல் வாரம் அல்லது இரண்டாம் வாரத்தில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

After Kamal i can says vijaysethupathi is brilliant actor says Madhavan

சூர்யா.? சிவகார்த்திகேயன்.? காத்திருக்கும் பெண் இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்னேஷ் சிவன் இயக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தை முடித்துவிட்டு செல்வராகவன் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் சூர்யா.

இதனையடுத்து ரஞ்சித் இயக்கத்தில் நடிப்பார் என் எதிர்பார்க்ப்பட்டது.

இந்நிலையில் இறுதிக்சுற்று சுதா இயக்கும் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இதே வேளையில் தற்போது பொன்ராம் இயக்கும் படத்தை முடித்துவிட்டு இன்று நேற்று நாளை புகழ் ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன்.

இவரிடம் சுதா கதை சொல்லியுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே யாரை இயக்கப் போகிறார் சுதா? என்பது புதிராக இருக்கிறது.

Suriya or Sivakarthikeyan who will act in Sudha Kongara direction

More Articles
Follows