நான் ரஜினி-விஜய்யின் தீவிர ரசிகன்… ஜி.வி.பிரகாஷ் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சாம் ஆண்டன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஆனந்தி நடித்துள்ள படம் எனக்கு இன்னொரு பேர் இருக்கு

தன் குறுகிய கால படைப்பாக லைக்கா இப்படத்தை தயாரித்துள்ளது.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சற்று முன் நடைபெற்றது.

அப்போது ரஜினி பன்ச் டயலாக்குகளை படத்தலைப்பாக வைப்பது ஏன்? என்று ஜி.வி.பிரகாஷ் இடம் கேட்டனர்.

அதற்கு… நான் ரஜினி ரசிகன் அதுபோல் விஜய்யின் தீவிர ரசிகன்… என்றார் ஜி.வி.பிரகாஷ்.

கபாலி புகழை பறக்க விடும் பிரபல விமான நிறுவனம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘கபாலி’ பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ளது.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் ஜூன் 12ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படம் ஜூலை 15ஆம் தேதிக்கு மேல் வெளியாகும் என கூறப்படுகிறது.

கலைப்புலி தாணு தற்போது இப்படத்தின் வியாபார பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தின் ஏர்லைன் பார்ட்னராக ஏர் ஆசியா நிறுவனம் இணைந்துள்ளதாம்.

இதுகுறித்த அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

‘மகிழ்ச்சி’யான செய்தி… அதியன் ஆரம்பிக்க ரஜினி ஹிட்டாக்கினார்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மகிழ்ச்சி… இது காலம் காலமாக நமக்கு அறிந்த வார்த்தைதான். ஆனால் இன்று இந்த சொல்லை, ஆங்கில மீடியத்தில் படிக்கும் குழந்தைகளும் கூறக் காரணம் ரஜினிதான்.

கபாலி டீசரில் ரஜினி கூறிய இந்த சொல், தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

இதை தன் படப்பிடிப்பு தளத்தில் அடிக்கடி ரஞ்சித் பயன்படுத்துவது வழக்கமான ஒன்றாம்.

ஆனால் இவருக்கு முன்பே, இவரின் உதவி இயக்குனரான அதியன் என்பவர் எந்தவொரு நிகழ்வாக இருந்தாலும், இதை அடிக்கடி உச்சரிப்பாராம்.

தற்போது இந்த தமிழ் சொல்லை உலகம் முழுவதும் ட்ரெண்டாக்கி விட்டார் சூப்பர் ஸ்டார்.

‘லிங்குசாமியின் கவிதையை படித்ததும் நனைந்தேன்…’ – இயக்குனர் சசி…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் லிங்குசாமி ஏற்கெனவே’ லிங்கூ’ என்கிற தனது முதல் கவிதைத் தொகுப்பு நூலை வெளியிட்டுள்ளார்.

இவரின் இரண்டாவது படைப்பாக ‘லிங்கூ-2’ ‘ வாக ‘செல்ஃபி எடுத்துக்கொள்கிறது மரம்’ என்கிற ஹைக்கூ கவிதைகள் நூலை எழுதியுள்ளார்.

இதன் வெளியீட்டு விழா, கௌதம் மேனனின் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கவிதை நூலை கவிக்கோ அப்துல்ரகுமான் வெளியிட கௌதம் மேனன் மற்றும் பார்த்திபன் பெற்றுக் கொண்டனர்.

பாடகி அனுராதா ஸ்ரீராம் ‘அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே’ என்ற பாடலைப் பாடினார்.

விழாவில் லிங்குசாமி பேசும்போது…

நான் எப்போதும் கவிதையுடன் இருப்பதாகவே உணர்கிறேன். பிறகுதான் கதை எல்லாம்.

கையில் காசு பணம் வேண்டாம். கவிதை போதும் பிழைத்துக் கொள்ளலாம் என்றிருப்பேன்.

எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் கவிதைகளுக்கு முன்னால அதெல்லாம் எனக்கு தெரியாது.

இப்போது கூட வருகிற அழைப்புகளில் 3 அழைப்புகள் பணம் திருப்பித்தரக் கேட்கும் அழைப்புகளாக இருக்கும். நான் யாரையும் ஏமாற்ற மாட்டேன்.

எனக்கு பொறுப்பும் கடமையும் இருக்கிறது. இந்த மனநிலையோடு அடுத்த படத்தை தொடங்குகிறேன். எல்லாக் கஷ்டங்களும் கடந்து போகும்” என்றார்.

சசி பேசும்போது…

”நல்ல கவிதை என்பது அதைப் படித்தவனை எழுத வைக்கும். லிங்குவின் கவிதைகளைப் படித்ததும் மொட்டமாடி மழையில் நனைந்தேன்” என்றார்.

பார்த்திபன் பேசும்போது…

”சினிமா கஷ்டத்தையோ நஷ்டத்தையோ கொடுக்கலாம். ஆனால் கவிதை இஷ்டத்தைத்தான் கொடுக்கும்” என்றார்.

விழாவில், தயாரிப்பாளர் யூடிவி தனஞ்ஜெயன், ஊடகர் ‘நீயா நானா’ புகழ் கோபிநாத், பத்திரிகையாளர் ரா.கண்ணன், இயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், வசந்தபாலன், மிஷ்கின், எஸ்.எஸ்.ஸ்டேன்லி, மாரிமுத்து, நந்தாபெரியசாமி, ராஜுமுருகன், நலன் குமாரசாமி, மணிபாரதி, விஜய் மில்டன், கவிஞர்கள் அறிவுமதி,விவேகா,நெல்லை ஜெயந்தா, ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் உள்ளிட்ட படைப்பாளிகள் கலந்து கொண்டனர்.

பணத்திற்காக எந்த தவறும் செய்ய மாட்டார்… பாரிவேந்தர் பற்றி விக்ரமன்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வேந்தர் மூவிஸ் மதன் மாயமானதை தொடர்ந்து, எஸ்ஆர்எம் குழுமத்தின் நிறுவனர் பாரி வேந்தர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் செய்தியாளர்களை சற்றுமுன் சந்தித்து பேசினர்.

இச்சந்திப்பில் இயக்குனர் விக்ரமன் பேசியதாவது…

“திரைத்துறையின் பல்வேறு பிரிவினருக்கு பாரி வேந்தர் இலவச மருத்துவ உதவிகளை செய்து வருகிறார்.

நலிவடைந்த கலைஞர்களின் குடும்பத்தில் உள்ள மாணவர்களுக்கு பொறியியல் மற்றும் மருத்துவ துறைகளிலும் இலவச கல்வியை வழங்கி வருகிறார்.

மேலும் குறும்பட இயக்குனர்களுக்கு 5டி கேமரா உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை வழங்கி அவர்களுக்கும் திரைத்துறையில் சாதிக்க வாய்ப்புகளை வழங்கி வருகிறார்.

வேந்தர் மூவிஸ் மதன் பற்றி எந்த தகவலும் தெரியாது. அதற்காக அவர் கெட்டவர்? என்று சொல்லவில்லை.

பாரிவேந்தர் மிகவும் நல்லவர். பணத்திற்காக எந்த தவறும் செய்ய மாட்டார்.

அவருடைய பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதால் இந்த சந்திப்பை நாங்கள் ஏற்பாடு செய்தோம்.

அவருடைய எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்தில் நிறைய கல்வி கட்டணம் வசூலிப்பதாக புகார் தெரிவிக்கின்றனர்.

அப்படி இருந்தால், அவர் எதற்காக எந்த பிரதி பலனையும் எதிர்பாராமல் இத்தனை உதவிகளை செய்ய வேண்டும்.”

இவ்வாறு பேசினார் விக்ரமன்.

இணையத்தை கலக்கும் படம்… கமலே நடனம் அமைத்து இயக்கிய பாடல்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டி.கே.ராஜீவ் குமார் இயக்கத்தில் கமல், ரம்யா கிருஷ்ணன், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் ‘சபாஷ் நாயுடு’.

இதன் படப்பிடிப்பு அமெரிக்காவில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

இளையராஜா இசையில் உருவான ஒரு பாடலை நேற்று படமாக்கவிருந்தனர்.

ஆனால் அப்போது இயக்குனருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கமலே அப்பாடலை படமாக்கினாராம்.

மேலும் கமலே பாடலுக்கான நடனத்தையும் அமைத்துள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு இத்தகவலை கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

எனவே இவரது ரசிகர்கள் இப்படத்தை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

More Articles
Follows