தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இந்த பத்து ஆண்டுகளில் 50 படங்களை கடந்து விட்டார். விஜய் நடிப்பில் வெளியான தெறி இவரது 50வது படமாகும்.
குறுகிய காலத்தில் ஒரு இசையமைப்பாளராக சாதனை புரிந்து நிலையில், தற்போது நடிகராகவும் சாதனை படைப்பார் என தெரிய வருகிறது.
இவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு‘ படம் வருகிற ஜீன் 17ஆம் தேதி ரிலீசாகிறது.
இதனையடுத்து, எம்.ராஜேஷ் இயக்கத்தில் ‘கடவுள் இருக்கான் குமாரு‘, பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் ‘புரூஸ்லீ‘, ஷங்கர் குணா இயக்கத்தில் ‘கெட்ட பையன் சார் இந்தகார்த்தி‘ ஆகிய படங்களில் நடிக்கிறார்.
மேலும் சசி இயக்கத்தில் சித்தார்த்துடன் ஒரு படம், ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஒரு படம் எனவும் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இவையில்லாமல், ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்‘ மற்றும் ‘ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ்‘ ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கும் படங்களில் நடிக்கவும் கால்ஷீட் கொடுத்துள்ளாராம் ஜி.வி.பிரகாஷ்.
இவர் செல்லும் வேகத்தை பார்த்தால் மாதம் ஒரு படத்தை வெளியிட்டு மற்ற நடிகர்களுக்கு சவால் விடுவார் போலவே…
