‘சிம்புவை முதல்ல பாராட்டியவரே தனுஷ்தான்…’ – கௌதம் மேனன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரே நேரத்தில் சிம்பு-தனுஷ் இருவரையும் இயக்குபவர் கௌதம் மேனன்.

சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா படம் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது தனுஷ் நடிக்கும் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தை இயக்கி வருகிறார்.

இவர்கள் இருவரையும் இயக்கி வருவது குறித்து கௌதம் தன் சமீபத்திய பேட்டியில் கூறும்போது…

‘அச்சம் என்பது மடமையடா’ ட்ரைலரைப் பார்த்துட்டு, ‘சிம்பு நல்லா பண்ணியிருக்கார் ப்ரோ. ட்ரைலர் சூப்பர்ன்னு’ முதல்ல மெசேஜ் பண்ணினதே தனுஷ்தான்.

ஃபைட்டுக்கு மட்டும் தனுஷ் ரிகர்சல் பார்ப்பார். மத்தபடி வேற எல்லாம் ஒரே முறைதான்.

என்னை நோக்கி பாயும் தோட்டா படமே தனுஷ் ஸ்பெஷல்தான்.’’

இவ்வாறு தெரிவித்துள்ளார் கௌதம் மேனன்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினியுடன் நடிக்கும் மாயா யார்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கரின் இயக்கத்தில் ரஜினி, அக்சய்குமார், எமிஜாக்சன் ஆகியோர் நடித்து வரும் 2.ஓ.

லைக்கா நிறுவனம் ரூ. 350 கோடியில் இப்படத்தை மிகப்பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

இப்படத்தின் முக்கிய கேரக்டரில் நடிகை மாயா நடித்து வருகிறார்.

மேலும் இவர் ஜோதிகாவுடன் “மகளிர் மட்டும்” படத்திலும், சந்தானத்துடன் சர்வர் சுந்தரம் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார்.

இவர் ஜேம்ஸ் வசந்தன் இயக்கிய ‘வானவில் வாழ்க்கை’ என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இவர் ஒரு ஜிம்னாஸ்டிக் கலைஞர் ஆவார். மேலும் பின்னணி பாடகி, நாடகக் கலைஞர், சிலம்பாட்ட கலைஞர் என பல பன்முக திறமை கொண்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘மோடியை பாராட்டிய ரஜினி கணக்கு காட்டுவாரா..?’ அமீர் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை, தேனாம்பேட்டையிலுள்ள காமராஜர் அரங்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பொது சிவில் சட்ட எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது.

இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், கனிமொழி, நல்லகண்ணு, இயக்குனர் அமீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.

இந்த மாநாட்டில் அமீர் பேசும்போது…

“மோடியின் புதிய திட்டத்தால், புதிய இந்தியா பிறந்துவிட்டது என்று ரஜினிகாந்த் சொல்கிறார்.

பழைய இந்தியாவில் ‘கபாலி’ படம் வெளியானதே அதற்கு தியேட்டரில் டிக்கெட்டுகள் என்ன விலைக்கு விற்றது என்று தெரியுமா?

அரசு நிர்ணயித்த விலையிலா டிக்கெட்டுகளை விற்றார்கள்? அந்த படத்தின் மொத்த வியாபாரம் என்ன?

அத்தனையும் கணக்கில் வருகிறதா? உங்களால் அந்த கணக்கை காட்ட முடியுமா?

ரூ. 200 டிக்கெட்டை 2000 ரூபாய்க்கு விற்று சம்பாதிக்கக் கூடிய ரஜினி, கறுப்புப் பணத்தை ஒழிக்க ஆதரவு கொடுக்கிறார் என்று சொன்னால் என்ன அநியாயம் இது” என்று அனல் பறக்க பேசினார் அமீர்.

‘லிங்கா’ படத்தலைப்பை வழங்கியவர் இயக்குனர் அமீர். அதற்கு படக்குழு சார்பில் அப்போது அமீருக்கு நன்றி தெரிவித்தார்கள்.

அந்த விழாவில் ரஜினியை மிகவும் புகழ்ந்து பேசினார் அமீர் என்பது இங்கே நினைவு கூறத்தக்கது.

‘ஃபீல் பண்ற விஜய் ஏழைகளுக்கு ஹெல்ப் பண்ணலாமே…’ வானதி சீனிவாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கறுப்பு பணத்திற்கு எதிராக பிரதமர் எடுத்த நடவடிக்கையை நடிகர் விஜய் இன்று காலை பாராட்டி பேசினார்.

அதே சமயம் இதனால் ஏழைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்தாகவும், முன்னேற்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை என்றும் கூறினார்.

இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சொர்ணா சேதுராமன் கூறியதாவது…

‘சாமானிய மக்களின் வேதனைகளை நடிகர் விஜய் பேசி இருக்கிறார்.

இதுதான் இந்த நாட்டு மக்களின் மனநிலை. மக்களின் துன்பங்களைப் பார்க்கும்போது வேதனையாக உள்ளது” என்றார்.

இதுகுறித்து பிஜேபியை சேர்ந்த வானதி சீனிவாசன் கூறியுள்ளதாவது…

‘நாட்டில் உள்ள ஏழை மக்கள் என்றுமே ஏழைகளாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

அவர்களும் மற்றவர்களைப்போல இந்த நாட்டின் அனைத்து வசதிகளையும் பெற்று வாழ வேண்டும்.

எனவேதான் ‘ஜன்தன் வங்கி கணக்கு’, ‘மானியங்களை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்துதல்’ என்று பல்வேறு திட்டங்களை பிரதர் மோடி கொண்டு வந்தார்.

‘ஒரு பெரியவர் பேத்தி கல்யாணத்துக்கு பணம் இல்லாததால் தற்கொலை செய்துவிட்டதாகவும் மக்கள் அன்றாட தேவைகளுக்கு கஷ்டப்படுகிறார்கள்’ என்று சொல்லிக் கொள்ளும் அரசியல்வாதிகளுக்கும் சினிமா பிரபலங்களுக்கும் ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன்.

மருத்துவ செலவுக்கு வழியில்லாமல் இதற்கு முன்பும் நிறைய பேர் இறந்துள்ளனர்.

ஏழைகள் மீது கரிசனம் காட்டும் இவர்கள், தாங்கள் வைத்துள்ள பணத்தில் தேவைக்கு போக மீதியை மக்களின் ஜன்தன் வங்கி கணக்கில் போட்டு ஏழைகளுக்கு உதவலாமே.

அறிக்கைவிடுவதை விட்டுவிட்டு, மக்களின் கண்ணீரை துடைக்க உதவுங்கள்.

கறுப்புப் பணத்தை ஒழிப்பற்கு மோடி எடுத்துள்ள அதிரடி நடவடிக்கைக்கு பாராட்டுகள் கிடைத்து வருகிறது.

கறுப்புப் பணம் வைத்துள்ளோருக்குதான் பயம் ஏற்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார் வானதி சீனிவாசன்.

ரஜினி-தனுஷ் கூட்டணியில் இணையும் த்ரிஷா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கபாலியை தொடர்ந்து மீண்டும் ஒரு புதிய படத்திற்காக ரஜினி மற்றும் ரஞ்சித் இணைய உள்ளனர்.

தனுஷ் இப்படத்தை தயாரிக்கிறார்.

அடுத்த வருடம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட உள்ளது.

இதற்காக மும்பை உள்ளிட்ட பகுதிகளில் சூட்டிங்குக்கு தேவையான பகுதிகளை பார்த்து திரும்பியுள்ளார் ரஞ்சித்.

இந்நிலையில், இதில் நாயகியாக த்ரிஷா நடிக்கக்கூடும் என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரும்வரை இதுபோன்ற செய்திகளை வந்துக் கொண்டேத்தான் இருக்கும். எது உண்மையோ…?

சைத்தானுக்கு பயம்… கடவுள் இருக்கான் தைரியத்தில் ஜிவி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரதமர் மோடியின் ரூ. 500, 1000 நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பால், மக்கள் சில்லரை பிரச்சினையால் தவிக்கின்றனர்.

இதனால் மக்கள், சினிமா, பார்க், பீச் உள்ளிட்ட தங்கள் பொழுதுபோக்குகளை குறைத்துவிட்டு அன்றாட தேவைகளுக்கு மட்டுமே பணம் செலவழித்து வருகின்றனர்.

இதனால் தியேட்டர்களில் கூட்டம் குறைந்து காணப்படுகிறது.

பெரும்பாலான படங்களின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள சைத்தான் இந்த வாரம் நவம்பர் 17ஆம் தேதி வெளியாக இருந்தது.

தற்போது பின்வாங்கியுள்ளது.

ஆனால் ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள கடவுள் இருக்கான் குமாரு இந்த வாரம் நவம்பர் 18ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

முன்பு நவம்பர் 10இல் இருந்து 17ஆம் தேதிக்கும் தற்போது 18ஆம் தேதிக்கும் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows