தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
அதன்பின்னர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வந்த அச்சம் என்பது மடமையடா படமும் கைவிடப்படும் சூழ்நிலையை நெருங்கி வருவதாக தோன்றுகிறது.
இதன் படப்பிடிப்புக்கு சிம்பு சரியாக வருவதில்லையாம்.
இதனால் பெரும் ஹிட்டடித்த ‘தள்ளிப் போகாதே’ பாடல் இதுவரை படமாக்கப்படவில்லை என்று தெரிவித்திருக்கிறார் கெளதம் மேனன்.
மேலும் துருக்கி நாட்டில் நடந்த சூட்டிங்கில் கலந்த கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
ரூ 80 லட்சம் செலவில் தெலுங்கு பதிப்பை மட்டும் முடித்து விட்டு வந்திருக்கிறார்களாம்.
ஒரு நேரத்தில் சிம்புவாக ஆதரவாக இருந்தவர் கௌதம் மேனன் மட்டுமே.
ஆனால் தற்போது அவரே சிம்புவை பற்றி இப்படி கூறியிருப்பது திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
