தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் இப்பட பாடல் ரவுடி பேபி பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
யு-டியூப்பில் மட்டும் 10 கோடி பேர் அந்தப்பாடலை பார்த்துள்ளனர்.
இதற்கு தன் பாராட்டுகளையும் தெரிவித்து இருந்தார் நடிகை ரம்யா.
இவர் தனுசுடன் பொல்லாதவன் படத்தில் நடித்திருந்தார்.
தற்போது சினிமாவை விட அரசியலில் ஆர்வம் காட்டி கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்.
அவர் தனுஷை பாராட்டியதால், கர்நாடக ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கன்னடத்தில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் கேஜிஎப், பயில்வான் போன்ற படங்களை பாராட்டாமல் தமிழ் நடிகரின் படத்தை பாராட்டுவது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் பார்லிமென்ட் தேர்தலில் இவர் கர்நாடகாவில் போட்டியிடாமல் தமிழ்நாட்டில் போய் போட்டியிடட்டும் என்றும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
