செல்ல பிராணி நாய்யின் சாகசம்… வாட்ச்மேன் படம் பார்த்த மாணவர்கள் உற்சாகம்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டபூள் மீனிங் புரோடஷன் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில் GV.பிரகாஷ்குமார் நாயகனாக AL.விஜய் இயக்கதில் “வாட்ச்மேன்” படத்தை பார்த்த மாணவர்கள் அரங்கமே அதுரும் அளவிற்க்கு ஆராவாரத்துடன் ஆடினர்.படம் பார்த்த மாணவர்கள் கூறும் போது…”

“படத்தின் ஆரம்ப முதல் முடிவு வரை படத்தில் வந்த செல்லபிராணி ப்ரவ்ணி நாய் (browni) பண்ணும் சகாசங்கள் செம. படத்தில் நாய்ய பார்த்தவுடன் என்ன அறியாமையிலே சீட்டை விட்டு எழுந்திருச்சி கத்தினேன்.திரும்பி பார்த்த அரங்கமே நாயை பார்த்து அலருது. ஒரு முதலாளி உயிறை காப்பாற்ற நாய் பண்ணும் சாகசம் மற்றும் சுட்டித்தனம் எங்களை கவர்ந்தது..இப்ப நல்லா புரியுது.ஒவ்வொரு வீட்டுக்கும் வாட்ச்மேன் நாய் தான்.இனி எங்களோட ஹிரோ ப்ரவ்ணி நாய் தான்.கண்டிப்பா நாய்க்காக இன்னொரு முறை நாங்கள் மட்டும்மல்லாமல் எங்க நண்பர்களையும் கூட்டிகிட்டு தியேட்டர்ல பார்ப்போம்.

மேலும் கரிப்பா தலைமையாசிரியர் பெருமாள் கூறும் போது.இந்த கோடை விடுமுறைக்கு ஒவ்வொரு குழந்தைகளும் பார்க்க வேண்டிய படம் வாட்ச்மேன் அந்த அளவுற்க்கு எல்லா தரப்பு மக்களுக்கும் இந்த படம் பிடிக்கும்.

இந்த நிகழ்வில் சாலி கிராமம் கரியப்பா கார்த்திகேயன் பள்ளி மாணவர்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் பி.டி.செல்வகுமார் அவர்கள் கலந்துக்கொண்டனர்.

மில்கா எஸ்.செல்வகுமார் இயக்கும் ” பியார் “

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விண்டோபாய் பிக்சர்ஸ் V.பாலகிருஷ்ணன் R.சோமசுந்தரம் மற்றும் மாரிசன் மூவிஸ் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு ” பியார்” என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் முன்னணி நடிகர் கதா நாயகனாகவும் முன்னணி நாயகி கதா நாயகியாகவும் நடிக்கிறார்கள். அதற்காக பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. முக்கிய வேடத்தில் யோகிபாபு நடிக்கிறார்.

மற்றும் சாம்ஸ், ஆர்த்தி, வாசுவிக்ரம், ஷபிபாபு ஆகியோருடன் இன்னும் சில முன்னணி நடிகர் நடிகைகள் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – N.ஆனந்தகுமார்

இசை – A.K.ரிஷால் சாய்

பாடல்கள் – வ.கருப்பன்

எடிட்டிங் – ரமேஷ் வேலுகுட்டி

நடனம் – அசோக்ராஜா

ஸ்டண்ட் – சூப்பர் சுப்பராயன்

கலை – முத்துவேல்

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் மில்கா எஸ்.செல்வகுமார். இவர் ராகவா லாரன்ஸிடம் உதவியாளராக பணியாற்றியவர்.. தற்போது நட்ராஜ் மனிஷா யாதவ் நடிக்க முடிவடையும் நிலையில் உள்ள சண்டி முனி என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

இவர் இயக்கும் இரண்டாவது படம் ” பியார் ”

தயாரிப்பு – விண்டோபாய் பிக்சர்ஸ் V.பாலகிருஷ்ணன் R.சோமசந்தரம், மாரிசன் மூவிஸ்.

படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்..

வழக்கமாக ஒரு ஹீரோ காதலர்களைத்தான் சேர்த்து வைப்பார்கள் ..இந்த படத்தில் வித்தியாசமாக ஒரு ஹீரோ இரண்டு பேய்க் காதலர்களை சேர்த்து வைக்கிறார்.அ தாவது பேயை பேயுடன் சேர்த்து வைப்பது தான் இதன் கதை. பேய்க்காதல் என்றும் சொல்லலாம்.

ஜூலை மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது.

ஊட்டி குன்னூர் பழனி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது..

ஒரு படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் முன்பே அடுத்த படம் கமிட்டானது எப்படி என்று இயக்குனரிடம் கேட்ட போது. சண்டி முனி படத்தின் படப்பிடிப்பை தயாரிப்பாளரிடம் சொன்னது போல் முடித்துக் கொடுத்ததை கேள்விப்பட்ட தயாரிப்பாளர்கள் என்னை பியார் படத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளனர். இவர்களுக்கும் நான் திட்டமிட்டு சொன்ன படி முடித்துக் கொடுப்பேன் என்கிறார் மில்கா எஸ்.செல்வகுமார்

10 லட்ச ரூபாயில் ஒரு படம் ‘ழகரம் ‘ : திரையுலகம் காணாத அதிசயம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

10 லட்ச ரூபாயில் ஒரு படம் எடுத்து திரையுலகம் காணாத அதிசயத்தை நிகழ்த்தியுள்ளார் புதுமுக இயக்குநர் க்ரிஷ். அப்படி உருவாகியுள்ள படம் தான் ‘ழகரம்’.இந்தப் படம் ஏப்ரல் 12-ல் வெளியாகிறது.

இயக்குநர் கிரிஷுக்கு சொந்த ஊர் நாகர்கோவில் .சினிமா கனவோடு சென்னை வந்தவர் புதிய தலைமுறை ,ஜீ தமிழ் போன்ற தொலைக் காட்சி சேனல்களில் பணியாற்றியிருக்கிறார் .பல நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கியிருக்கிறார் .
இப்போதுகூட புதிய தலைமுறை டிவியில் வீடு என்கிற பெயரில் நிகழ்ச்சி தயாரித்து வழங்கி வருகிறார்.

அது என்ன’ ழ கரம் ‘தலைப்பு ?

பலருக்கு வாயில் நுழையாத எழுத்துதான் ‘ழ’ அதன் சிறப்புக் கருதியே படத் தலைப்பாக ‘ழகரம்’ என்று வைத்துள்ளார்.

கிரிஷ் சினிமா வாய்ப்பு தேடலில் இறங்கியபோது நடிகர் நந்தாவின் நட்பு கிடைத்திருக்கிறது .

அவரது ஆதரவால்தான் ழகரம் படம் வளர்ந்து நிறைவு பெற்று இறுதியாகப் பத்து லட்சத்தில் ஒரு படத்தை எடுத்து முடித்திருக்கிறார் .

கோடிகளில் புழங்கும் திரையுலகில் 10 இலட்சத்தில் ஒரு படத்தை எடுத்து அனைவரையும் வியக்க வைத்திருக்கிறார் க்ரிஷ் .

நந்தா உள்பட இப்படத்தில் நடித்த நடிகர்கள் அனைவருமே ஊதியம் வாங்கிக் கொள்ளவில்லை. அவர்கள் தங்கள் ஊதியத்தை சினிமா ஆர்வமுள்ள இளைஞர் ஒருவரின் படைப்பிற்காகத் தாங்கள் செய்துள்ள பங்களிப்பு முதலீடாக இருக்கட்டும் என்று திறமையை முதலீடாக்கிப் பங்கெடுத்துள்ளனர்.

புதியதாக ஒரு கதையைத் தேடியபோது கிடைத்த ஒரு மர்ம நாவல் தான் ப்ராஜக்ட் ஃ .இதை எழுதியவர் கவாகேன்ஸ் என்கிற பெண்மணி.
கதை பிடித்து திரைக்கதையாக்கி இதோ படமாக முடிந்துள்ளது.

படத்துக்கு ஒளிப்பதிவு செய்தவர்கள் ஜோ, பரத்வாஜ், பிரின்ஸ் என மூவர் . இசையமைத்துள்ளவர் தரன். நாயகன் நந்தா, ஈடன் நாயகி .இவர்கள் தவிர விஷ்ணு பரத், சந்திரமோகன், மீனேஷ் கிருஷ்ணா ஆகியோரும் நடித்துள்ளனர் .

“ஒரு புதையலைத் தேடி நான்கு பேர் செல்லும் பயணமே கதை. சென்னை, விசாகப்பட்டினம், காஞ்சிபுரம், தஞ்சாவூர் ,கோயம்புத்தூர் என்று பயணிக்கிறது கதை.

இன்று 10 இலட்ச ரூபாயில் ஒரு படம் எடுப்பது பெரிய சவாலான விஷயம் இதை சாத்தியப்படுத்தியது நந்தாவின் ஆதரவுதான். படத்தில் பெரிய முதலீடு அவர் தான். அவர் கொடுத்த ஊக்கம் சாதாரணமானதல்ல இதில் வழக்கமான வேடத்தில் அவரைப் பார்க்க முடியாது .முற்றிலும் வித்தியாசமான பாத்திரத்தில் நடித்து உள்ளார். திரையில் திட்டமிட்டு படம் எடுத்தால் செலவைக் குறைக்க முடியும் புதியவர் கூட ஒரு படத்தை எடுக்க முடியும் என்று நிரூபிக்க இந்த படத்தை எடுத்தோம் நண்பர்கள் பலர் உதவியுடன் படம் முடிந்துவிட்டது .கதிர் பிலிம்ஸ் சார்பில் பால்டிப்போ கதிரேசன் தயாரித்துள்ளார்.

திட்டமிட்டுச் சிக்கனமாகப் படம் எடுத்திருந்தாலும் விறுவிறுப்பான கதை சொல்வதில் எந்தக் குறையும் வைக்கவில்லை என்பதை படம் பார்க்கும்போது அனைவரும் உணர்வார்கள் . ஏப்ரல் 12 -ல் படம் வெளியாகிறது .” என்கிறார் இயக்குநர் க்ரிஷ்.

இந்த ‘ழகரம்’ ரசிகர்களுக்கு ஒரு படமாகவும் திரையுலகினருக்கு ஒரு பாடமாக அமையும் என்று கூறலாம்

டீன் ஏஜில் கேமராமேன் ஆன கவின் ராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமீபத்தில் திரைக்கு வந்திருக்கும் ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’ இப்படத்தின் ஒளிப்பதிவு ஊடகங்களால் அடையாளம் கண்டு பாராட்டப்பட்டது.

படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் கவின் ராஜ். இவர் டீன் ஏஜிலேயே ஒளிப்பதிவாளர் ஆகியுள்ளவர். இவர் தனது 19 வயதிலேயே ‘தீதும் நன்றும்’ என்கிற முதல் படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் .இவரது இரண்டாவது படம் தான் ‘இஸ்பேட் ராஜா’. இப்போது வயது 22

இவரது அனுபவம் விசித்திரமானது. கேமராவைத் தொட்டுக் கூட பார்க்காமல் இருந்த இவருக்கு முதல் பட வாய்ப்பு வந்தது. தனது ஆர்வத்தாலும் திறமையாலும் வாய்ப்பு அளித்தவர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றித் தன் தகுதியை நிரூபித்துக் கொண்டுள்ளார்.

இனி அவருடன் பேசலாம்!

“நான் பிளஸ் டூ முடித்தவுடன் மேற்கொண்டு என்ன படிப்பது ?எந்தத் துறையில் ஈடுபடுவது ?என்று எந்த தெளிவும் இல்லாமல் இருந்தேன். ஆனால் ஓவியம் கலை சினிமா என்று ஆர்வமாக இருந்தேன் ஆனால் இதில் எதில் முழு ஈடுபாடு காட்டுவது என்று தெரியவில்லை .நான் சினிமா நிறைய பார்ப்பேன்.

பலவகையான படங்களையும் பார்ப்பேன் iஇந்த ஆர்வத்தைக் கவனித்த என் அப்பா உனக்கு சினிமாவில் ஈடுபட விருப்பம் இருக்கிறதா என்றார் .சினிமா ஆர்வம் என்பதை அவரிடம் கூறினேன். அவர் கேந்திரீய வித்யாலயா பள்ளியில் ஓவிய ஆசிரியர் . கலை ஈடுபாடு இருப்பதால் அப்பா என் ஆர்வத்தை கண்டு கொண்டார்.

அப்படி என்றால் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் சேரலாம் என்று சொன்னார் .டைரக்ஷன் துறையில் சேர்ந்தால் சினிமா பற்றி ஆழமான அறிவு கிடைக்கும் என்று கருதினோம். ஆனால் ஒளிப்பதிவு கூடக் கிடைக்கவில்லை.கடைசியில் கிடைத்த எடிட்டிங்கில் சேர்ந்தேன்.

எடிட்டிங் சம்பந்தப்பட்ட அறிவும் சினிமா உருவாக்கத்தில் தேவை என்பது புரிந்தது. இன்ஸ்டிடியூட்டில் படித்துக்கொண்டே நிறைய புத்தகங்கள் படித்தேன். இணையதளத்தில் தேடிப் பார்த்தபோது ஒளிப்பதிவு என்னை மிகவும் ஈர்த்து விட்டது .அதன்பிறகு ஒளிப்பதிவு சார்ந்த தேடலில் இறங்கினேன் .ஒளிப்பதிவாளர் ஆவது என்பதை முடிவு செய்து கொண்டேன் .

நாளைய இயக்குநர் சீசன் 5 -ல் குறும்படம் உருவாக்கத்தில் இணைந்து பணியாற்றினோம். எங்கள் குழுவுக்கு வெற்றி கிடைத்தது. அந்த நட்பு வளர்ந்துதான் முதல் படம்’ தீதும் நன்றும்’ என்ற படத்தில் ஒளிப்பதிவு செய்தேன் .இந்த படம் இன்னும் வெளிவரவில்லை .

சொன்னால் நம்ப மாட்டீர்கள் தீதும் நன்றும் திரைப்படத்தில் நான் ஒளிப்பதிவு செய்த போது அதற்கு முன் சினிமா கேமராவை நான் தொட்டதே இல்லை .ஆனால் கேமரா சம்பந்தமான அனைத்து தொழில்நுட்ப விஷயங்களும் எனக்குத் தெரியும். இந்த பலவீனத்தை படக்குழுவிடம் சொல்லிவிட்டுத்தான் வேலையில் இறங்கினேன்.
அந்த வாய்ப்பை பயன்படுத்தினேன். அவர்களும் என் ஆர்வத்தை மதித்து என் மீது நம்பிக்கை வைத்து கொடுத்தார்கள் .வெற்றிகரமாகச் செய்து முடித்தேன் .

அடுத்த படம்தான்’ இஸ்பேட் ராஜா’ இயக்குநர் ரஞ்சித் எனக்கு அவர் வாய்ப்பு கொடுத்த போது சில நாட்கள் அவகாசம் கேட்டேன் .அவரிடம் கதையும் கேட்டேன் .அதில் நான் என் சார்ந்த என் தரப்பு பங்களிப்பு என்ன செய்ய முடியும் என்பதற்காக சில நாள் அவகாசம் கேட்டேன். சில தினங்களுக்குப் பிறகு என் தரப்பு எண்ணங்களைக் கூறினேன். அவர்களுக்கு நம்பிக்கை வந்து விட்டது .அதன்படி புறப்பட்டு விட்டோம்.

இந்த படத்தை பொறுத்தவரை இவன் சின்ன பையன் இவன் புதியவன் என்று யாரும் நினைக்கவில்லை. ஆரம்பத்தில் ஒரு மாதிரியாக இருந்தது .போகப் போகப் என்னை தங்களில் ஒருவராக ஏற்றுக் கொண்டார்கள் .மரியாதை கொடுத்தார்கள். அன்பு காட்டினார்கள்.படத்தில் நடித்த நடிகர் ஹரீஷ் கல்யாண் மற்றும் நடிகை . கலைஞர்கள், படக்குழுவினர் அனைவருமே ஒரே குழுவாக இயங்கினோம்.

படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி மலை உச்சியில் உயரமான இடத்தில் எடுக்க வேண்டியிருந்தது. பலருக்கும் உயரம் சார்ந்த பிரச்சினையால் உடல் பிரச்சினை ஏற்பட்டது. எங்கள் உதவியாளர் ஒருவருக்கு இதயப் பிரச்சினை ஏற்பட்டது.
இருந்தாலும் வெற்றிகரமாக எடுத்து முடித்தோம்.” என்கிறவர் படத்தில் தான் சிரமப்பட்டுப் பணியாற்றியதைப் பற்றி இப்படிக் கூறுகிறார்.

“நான் இந்தப் படத்தை ஒரு வாய்ப்பாகப் பார்க்கவில்லை. வாழ்க்கையாகத்தான் பார்த்தேன் கேமராவை ட்ரை பேடில் போட்டு ஸ்டாண்டில் பொருத்தி காட்சிகளை எடுப்பதைப் பெரும்பாலும் தவிர்த்தேன் .கையில் தூக்கிக் கொண்டு தோளில் சுமந்து கொண்டு, நகர்ந்து கொண்டு ,அசைந்து கொண்டு, ஊர்ந்து கொண்டு இருக்கும் படி தான் காட்சிகள் எடுத்தோம்.. அதுதான் பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்க்கும் என நினைத்தோம். இதை படம் முழுக்க பெரும்பாலான காட்சிகளில் செய்திருக்கிறேன். படப்பிடிப்பு முழுதும் handheld கேமராவாகவே எடுத்தேன்.

ஒரு காட்சி எடுக்கும் போதும் நம்மால் எப்படி அதை மேம்படுத்த முடியும் ,வலு சேர்க்க முடியும் என்பதாகவே யோசித்தேன். அப்படித்தான் என் உழைப்பினைப் போட்டேன்.

இந்தப் படத்தில் இரண்டு நீளமான முக்கியமான காட்சிகளை ஒரே ஷாட்டில் எடுத்தோம். காபி ஷாப்பில் காதலர்கள் பிரியும் காட்சி ஒன்று.மற்றொன்று தாராவின் வீட்டில் நடக்கும் காட்சி.

இரண்டு காட்சியிலும் ஒரு வினாடி கூட இடைவெளி கொடுக்கக்கூடாது என்று ஒரே ஷாட்டில் எடுப்பது என்று முடிவெடுத்தோம், அதற்குள் கட் செய்வது என்பது பார்வையாளர்களின் கவனத்தை மாற்றிவிடும் என்று நினைத்து இயக்குநருடன் பேசி அப்படி எடுத்தேன் .இந்த இரண்டு காட்சிகளும் விமர்சகர்களால் இனம் கண்டு கொள்ளப்பட்டுப் பாராட்டப்பட்டன.

அதே போல் இன்னொரு முக்கியமான விஷயம். இந்தப்படத்தில் நான் மூன்று லென்ஸ்களை பயன்படுத்தி இருப்பேன். கெளதம் என்ற பாத்திரம் தனிமையில் இருக்கும்போது அனபா பிக் லென்ஸ் பயன்படுத்தியிருக்கிறேன் .

சென்னை நினைவுகளுக்கு ஸ்பிரிக்கல் லென்ஸைப் பயன்படுத்தி இருக்கிறேன். பிளாஷ்பேக் காட்சிகளுக்கு 1950 ஆம் ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்ட விண்டேஜ் லென்ஸைத் தேடிப்பிடித்து பயன்படுத்தினோம்.அதுமட்டுமல்ல படத்தில் காட்டப்படும் நிறங்களுக்கும் புது அர்த்தம் இருக்குமாறு பயன்படுத்தி இருக்கிறேன் .
கெளதம் தனக்குள் கோபத்தை மறைத்து வைத்திருக்கும் ஒரு பாத்திரம். அது எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என்று உணரும் போது சிவப்பு நிறம் வரும் .வேறு காட்சிகள் வந்து மனநிலை மாறும் போது பச்சை நிறமாக மாறும்.

இப்படி வண்ணங்களையும் உணர்வுகள் ஆக்கிக் காட்டியிருப்பேன்.சூரியன் மறைகிற செம்மாலை நேரத்தில் முக்கியமான காட்சியைப் பரபரப்பாக எடுத்து முடித்தோம். இன்று ஊடகங்கள் என் ஒளிப்பதிவைப் பாராட்டுகிற போது நான் கதைப் போக்கிற்கு ஏற்ப கையாண்டுள்ள நிற மாற்றங்களை அடையாளம் கண்டு பாராட்டுகிற போது பட்ட கஷ்டங்கள் ஒன்றுமில்லை என்று தோன்றுகிறது.” என்று முடிக்கிறார் கவின் ராஜ்.

இப்போது புதிய பட வாய்ப்புகள் கவின் ராஜை வட்டமிட்டு வருகின்றன.இவர் விளையும் பயிர் என்பதை நிரூபித்து விட்டார்.

எனக்கென்று ஒரு இடத்தை ஏற்படுத்தி தந்த ஹிப் ஆப் ஆதிக்கு நன்றி நடிகர் அஸ்வின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கலையுலகம் கடல் போன்றது..அதில் மீனையும் பிடிக்கலாம்.. முத்தையும் அள்ளலாம்.. அவரவர்களின் முயற்சியைப் பொறுத்தது.

சமீபத்தில் வெளியான நட்பே துணை படத்தின் மூலம் முத்தை அள்ளியவர் அஸ்வின்…படத்தில் ஹாக்கி பிளேயர் ஆசிப் என்ற காரக்டரில் நடித்து பலரது பாராட்டுதலை பெற்றவர்…நெகடிவ் காரக்டர் போன்று ஆரம்பமாகி அப்புறம் பாசிடிவ் காரக்டராகி ஆதியின் நண்பராக நடித்திருப்பவர்.

படத்தை பார்த்த பலரின் பாராட்டினால் குளிர்ந்து போயிருக்கும் அஸ்வினை சந்தித்து பேசினோம்..

நான் சிங்கப்பூரில் மாஸ்டர் ஆப் பிஸினஸ் மேனேஜ்மெண்ட் படிப்பை முடித்து விட்டு

ஹில் பிரீஸ் ஹோட்டல் ரிசார்ட்ஸ் என்ற நிறுவனத்தில் உயரிய

பொறுப்பில் இருந்தேன்…கை நிறைய சம்பளம் ..கெளரவமான வேலை என்று இருந்தவன்

நான் அத்துடன் டான்ஸ் ஸ்கூல், ஜிம் என்று நடத்திக் கொண்டிருந்தேன்.

அந்த நேரத்தில் யானும் தீயவன் என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. என் நடிப்புக்கு நல்ல பெயர் கிடைத்தது. படம் வெளியான நேரத்தில் பண மதிப்பிழப்பு அறிவிக்கப் பட்டது. அதனால் படத்திற்கு வெற்றி கிடைக்காமல் போச்சி.

அதற்கப்புறம் பஞ்சாட்சரம் படத்தில் செகண்ட் ஹீரோவாக நடித்தேன்..அந்தப்படம் விரைவில் ரிலீசாகப் போகுது. என்னை நானே டெவலப் செய்து கொள்ள வேண்டும் என்று கூத்துப் பட்டறைக்குப் போய் பயிற்சி எடுத்தேன்

அதற்கு எனக்கு கிடைத்த பரிசு ஹிப் ஆப் ஆதி அவர்கள் மூலம் நட்பே துணை படத்தின் மூலம் கிடைத்தது… எனக்கு ஒரு நல்ல கேரக்டர் கொடுத்து என் வாழ்க்கைகு ஒரு நல்ல இடத்தை ஏற்படுத்தி கொடுத்த அவருக்கு நான் என்றென்றும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். அதே மாதிரி தயாரிப்பாளர் சுந்தர்.c.சாருக்கும் குஷ்பு மேடத்துக்கும் நன்றியை சொல்லிக் கொள்கிறேன். எனக்கு இது தான் வேண்டும்..இதில் தான் நடிப்பேன் என்று இல்லை…எந்த காரக்டராக இருந்தாலும் சரி…ஹீரோ வில்லன் காரக்டர் எதுவாக இருந்தாலும் அதில் நான் என்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கேன்.

என்னோட அப்பா ஜெரோம் புஷ்பராஜ் ஒரு லாயர்…அதோடு இல்லாமல் மியூசிக் டைரக்டர். அதனால் எனக்கு மியூசிக் ஆர்வம் அதிகம் நிறைய மியூசிக் ஆல்பங்களை தயாரித்திருக்கிறேன். இப்போ வெப் சீரியல்களை தயாரித்து இயக்கிக் கொண்டிருக்கிறேன்…

எனக்கும் இந்த கலைத்துறையில் மதிப்பு மிக்க இடம் கிடைக்கும் என்று நம்புகிறேன்…

என்றார் அஸ்வின்.

ராகவா லாரன்சுக்கு நன்றி சொல்லும் Doopaadoo

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடினமான உழைப்பு, உறுதியான அர்ப்பணிப்பு இருந்தால் வெற்றி நிச்சயம் வரும். ஆனால் அது புதுமையான விஷயத்தை முயற்சிக்கும் போது கிடைத்தால் அது மிகப்பெரிய சாதனை. பின்பற்றுவதற்கு பாதை எதுவும் இல்லாமல், ஒரு புதிய பாதையை உருவாக்கும் முயற்சி அது. DooPaaDoo என்பது இசையில் புதிய முயற்சிகளை ஊக்கப்படுத்தும் ஒரு இடம். திறமையான இசைக்கலைஞர்களை கண்டுபிடிப்பது, அவர்களுடன் இணைந்து இசையை உருவாக்குவது தான் இவர்களின் நோக்கம். இன்று, ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 படத்தின் முழுமையான ஆல்பத்தை உருவாக்கி, தமிழ் இசை துறையில் DooPaaDoo தன் பெயரை பதித்திருக்கிறது. DooPaaDoo சுயாதீன இசை கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஒரு வசதியான தளத்தை உருவாக்கி கொடுக்கிறது.

பாடலாசிரியர் மற்றும் DooPaaDooவின் இணை நிறுவனருமான மதன் கார்க்கி இது குறித்து கூறும்போது, “இது என்னை மிகவும் உற்சாகப்படுத்தியுள்ளது. நான் இதை பெருமையால் சொல்லவில்லை, திறமையான சுயாதீன கலைஞர்கள் எங்கள் தளத்தின் மூலம் இசைத்துறையில் புகழ் பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. 2017ல் ராகவா லாரன்ஸ் மாஸ்டரை சந்தித்தபோது, நாங்கள் அவருக்கு DooPaaDoo பற்றிய புதிய கருத்துகளை அறிமுகப்படுத்தினோம். புதிய முயற்சிகளை பரிசோதித்து பார்க்க எந்த தயக்கமும் இல்லாமல் ஒப்புக் கொண்ட அவர், எங்கள் ஸ்டுடியோவிற்கு வந்தார். அவரது படத்தின் கதையின் சூழ்நிலைகளை அடிப்படையாக கொண்டு பாடல்களை பட்டியலிட்டோம். நாங்கள் அவருக்கு அளித்த அனைத்து பாடல்களையும் கேட்ட அவர், ஆறு பாடல்களை தேர்ந்தெடுத்தார். மேலும் மீதமுள்ள பாடல்களை அவரது அடுத்தடுத்த படங்களில் பயன்படுத்துவதாக எங்களுக்கு உறுதியளித்தார். காஞ்சனா 3ல் மிகவும் தனித்தன்மையான விஷயம் என்னவென்றால், பாடலின் பின்னணியில் உள்ள எந்த பெயரையோ அல்லது கலைஞர்களின் அடையாளங்களையோ நாங்கள் வெளிப்படுத்தவில்லை. நாங்கள் நினைத்தது வெற்றியாக மாறி, DooPaaDooவை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தியிருக்கிறது. கலைஞர்களின் பெயர்களை தெரிந்து கொள்ளாமலேயே காஞ்சனா 3 பாடல்களை ரசிகர்கள் ரசிப்பதை பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. ஒருவேளை இது விரைவில் ஒரு நடைமுறையாகவும் மாறலாம். அதாவது, ஒரு சிறந்த இசையின் வெற்றி கலைஞரின் திறமை, பாடல்களின் தரம் மற்றும் கலையின் புத்துணர்வைப் பொறுத்து இருக்குமே தவிர, அந்த இசையுடன் சம்பந்தப்பட்ட பிராண்டை ஒட்டி இருக்காது” என்றார்.

தங்களது எதிர்கால திட்டங்கள் குறித்து DooPaaDooவின் தலைவர் & CEO கவுந்தேயா கூறும்போது, “நாங்கள் இன்னும் பல இயக்குனர்களுடன் இணைந்து செயல்பட முயற்சிக்கிறோம். சுயாதீன கலைஞர்களை இன்னும் நிறைய மக்களிடம் கொண்டு சேர்க்கவும், அவர்களின் புகழை விரிவுபடுத்தவும் முயற்சிக்கிறோம். ராகவா லாரன்ஸ் மாஸ்டர், DooPaaDooவை அவர் படத்துக்கு முயற்சித்ததோடு நில்லாமல், மற்ற இயக்குனர்களுக்கும் பரிந்துரை செய்வதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். DooPaaDoo காஞ்சனா 3 மூலம் 6 கலைஞர்களுக்கு வாய்ப்பை பெற்று தந்ததில் மகிழ்ச்சி அடைகிறது. மேலும் இதில் இருந்து இன்னும் பலரை அறிமுகப்படுத்த விரும்புகிறோம்” என்றார்.

More Articles
Follows