தமிழ் புத்தாண்டில் வெளியாகும் ‘இங்கிலீஷ் டைட்டில்’ தமிழ் படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு பிறக்கிறது.

பொதுவாக தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நிறைய படங்கள் வெளியாகும்.

ஆனால் இம்முறை ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதாலும் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளதாலும் படங்கள் வெளியீட்டை தள்ளி வைத்துள்ளனர்.

இருந்தபோதிலும் ஒரு சில படங்கள் ஏப்ரல் 12ஆம் தேதியில் வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

அன்றைய தினத்தில் விஜய் இயக்கத்தில் ஜிவி. பிரகாஷ் நடித்துள்ள ‘வாட்ச்மேன், வெங்கட் பிரபு இயக்கத்தில் வைபவ் நடித்துள்ள ஆர்கே நகர் மற்றும் கேங்ஸ் ஆப் மெட்ராஸ்’ ஆகிய மூன்று படங்கள் வெளியாகின்றன.

இவை அனைத்தும் தமிழ் படங்கள் என்றாலும் ஆங்கில தலைப்பில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வரி விலக்கு இல்லை என்பதால் தமிழ் தலைப்புகளை வைக்க யாரும் முன்வருவதில்லை என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

ரூ. 750 கோடியில் ‘பொன்னியின் செல்வன்’; நயன்தாராவும் இணைகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் மெகா பட்ஜெட்டில் உருவாகவுள்ள படம் பொன்னியின் செல்வன்.

இதன் பட்ஜெட் மட்டும் கிட்டதட்ட ரூ. 750 கோடி என்கின்றனர்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாராகவுள்ள இப்படத்தை செப்டம்பர் மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

பொன்னியின் செல்வன்’ என்ற நாவலை தழுவி இப்படம் எடுக்கப்பட உள்ளது. எனவே கிட்டதட்ட 2 அல்லது 3 பாகங்களாக தயாரிக்க இருக்கிறார்களாம்.

இதில் சுந்தர சோழராக அமிதாப்பச்சனும், ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், வந்தியத்தேவனாக கார்த்தியும் நடிக்கவுள்ளனர் என கூறப்படுகிறது.

மேலும் பெரிய பழுவேட்டவரையராக மோகன்பாபு நடிக்கிறார்.

பேரழகி நந்தினியாக ஐஸ்வர்யாராயும், குந்தவை நாச்சியாராக கீர்த்தி சுரேஷ்ம் நடிக்கவுள்ள நிலையில் பூங்குழலி வேடத்துக்கு நயன்தாராவை கேட்டு இருக்கிறார்களாம்.

அவரும் ஓகே சொல்லிவிடுவார் என்கிறது கோலிவுட்.

விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடர நயன்தாரா படக்குழு தீவிரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள ‘கொலையுதிர் காலம்’ படத்தின் டிரைலர் வெளியீட்டு அண்மையில் சென்னையில் நடைபெற்றது.

இதில் நாயகி மற்றும் டைரக்டர் கலந்துக்கொள்ளாத போதும் சிறப்பு விருந்தினர் ராதாரவி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சையாக கருத்துக்களை பேசினார். இதனால் பலரும் கண்டிக்க, திமுக கட்சியை விட்டு முக. ஸ்டாலின் நீக்கினார்.

மேலும் விஷால் உள்ளிட்ட நடிகர்களும் கண்டித்தனர்.

இதனிடையில் நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் ‘‘இந்த படத்தை தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் சில ஆண்டுகளுக்கு முன்பே கைவிட்டு விட்டனர் என்று நினைத்தேன்.

பொருத்தமற்ற நிகழ்ச்சியில் தேவையற்ற நபர்கள் என்ன பேசுகிறோம் என்று தெரியாமலே பேசினர்’’ என்று ராதாரவியை கண்டித்தார்.

விக்னேஷ் சிவனின் இந்த பேச்சை படத்தயாரிப்பாளர் கண்டித்துள்ளார்.

கொலையுதிர் காலம் படத்தை வாங்கிக்கொள்வதாக சொன்ன வினியோகஸ்தர்கள் தற்போது வேண்டாம் என்று பின்வாங்கிவிட்டனர்.

டிஜிட்டல் உரிமையை வாங்குவதாக உறுதி அளித்த நிறுவனமும் இப்போது வேண்டாம் என்று கூறிவிட்டது.

எனவே படத்தின் நஷ்டத்துக்கு பொறுப்பு ஏற்கும்படி விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடர படக்குழுவினர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

96 பட த்ரிஷாவை ஜெராக்ஸ் எடுத்த பாவனா..; அட ஆமாம்ல…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த ஆண்டில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட படம் 96.

பிரேம்குமார் இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர்.

இப்படம் மாபெரும் வெற்றிப் பெற்றதை அடுத்து மற்ற மொழிகளில் இதை ரீமேக் செய்ய போட்டி உருவானது.

கன்னட மொழியில் ‘99’ என்ற பெயரில் ரீமேக் செய்யவுள்ளனர்.

விஜய்சேதுபதி வேடத்தில் கன்னட நடிகர் கணேஷும் த்ரிஷா வேடத்தில் பாவனாவும் நடித்து வருகின்றனர்

த்ரிஷா கெட்டப்பில் இருக்கும் பாவனா போட்டோவை தற்போது வெளியிட்டுள்ளனர்.

இப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

மீண்டும் மீண்டும் அழகிகளுடன் ஜோடி போடும் பிரசாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் பிரசாந்த் நடிப்பில் அண்மையில் வெளியான படம் ஜானி.

இப்படத்தை அடுத்து ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு சேலஞ்ச் என்று பெயரிடப்படலாம் என கூறப்படுகிறது.

இப்படம் குறித்த விவரம் வருமாறு…

‘ஜீன்ஸ்’ படத்தில் ஐஸ்வர்யா ராய், `காதல் கவிதை’ படத்தில் இஷா கோபிக்கர், `பொன்னர் சங்கர்’ படத்தில் பூஜா சோப்ரா என உலக அழகிகளுடனும் இந்திய அழகிகளுடனும் நடித்தவர் பிரசாந்த்.

தற்போது நடிக்கவுள்ள புதிய படத்தில் கடந்த ஆண்டு ‘மிஸ் இந்தியா’ பட்டம் வென்ற திருச்சியைச் சேர்ந்த அனுகீர்த்தி வாஸ் என்பவருடன் இணைகிறார்.

பிரசாந்த்துக்கு அக்காவாக நடிகை பூமிகா நடிக்கிறார். மேலும் நாசர், பிரகாஷ்ராஜ், யோகி பாபு, ரோபோ சங்கர் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்கவுள்ளனர்.

இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களிலும் படக்காட்சிகளையும் பாடல்களை நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளில் படமாக்க இருக்கிறார்களாம்.

எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு தடை; மக்களின் வெற்றி என கருணாஸ் அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை- சேலம் இடையே 5 மாவட்டங்கள் வழியாக, 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 8 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. இத்திட்டத்திற்கான தடைகோரிய வழக்கில் இன்று (8.4.2019) தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

வரவேற்கத்தக்க தீர்ப்பாகும். இந்த வெற்றி விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் கிடைத்த வெற்றியாகும்.

இத்திட்டத்திற்காக 1,900 ஹெக்டர் நிலம் கையகப்படுத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெறுவதற்கு முன்னே நிலம் அளவிடும் பணிகள் வேக வேகமாக தொடங்கப்பட்டன.

எட்டுவழிச்சாலை திட்டத்தை எதிர்த்து, விவசாயிகளும், பொதுமக்களும், பல்வேறு அமைப்புகளும் தொடர்ந்து போராட்டம் நடத்தினார்.

மக்கள் போராட்டம் தொடர்ந்து நடந்தேறிய அதே சமயம் பூவுலகின் நண்பர்கள், ஐந்து மாவட்ட விவசாயிகள் சார்பின் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டன.

அதன் விளைவாக தமிழக அரசு செயல்படுத்த நினைத்த எட்டுவழிச்சாலை தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ளது.

அதோடு மட்டுமின்றி கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீண்டும் நில உரிமையாளர்களுக்கே பத்திரப்பதிவு செய்து கொடுக்க நீதிமன்றம் உத்தர பிறப்பித்துள்ளது இது வரவேற்கத்தக்கது.

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் அ.தி.மு.க. பா.ஜ.க. உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தலைவர்கள் எட்டுவழிச்சாலை திட்டத்தை அமல்படுத்தியே தீருவோம் என முழங்கிக் கொண்டிருக்கின்ற இவ்வேளையில் இத்தீர்ப்பை மக்களுக்கு ஆதரவாக நீதிமன்றம் வழங்கியுள்ளது.

இந்த திட்டத்தை நிறைவேற்ற நினைத்தவோர்களோடு கூட்டணி வைத்துக் கொண்டுள்ள கட்சிகள் ”இந்த திட்டத்திற்கு தடை விதிக்க நாங்கள்தான் போராடினோம்” என்று தேர்தல் நேரத்தில் பேசினால் மக்கள் சிரித்துவிடுவார்கள்.

ஆகவே இது மக்கள் போராட்டத்திற்கான வெற்றி! இதை தனிநபர் யாரும் உரிமைகோரி அதை வாக்குகளாக மாற்றிட முயற்சி செய்தால் அதைவிட இழிவானச் செயல் வேறொன்றும் கிடையாது!

இவ்வாறு எம்.எல்.ஏ., கருணாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Actor Karunas talks about Eight way road and High Court Stay Order

More Articles
Follows