தமிழ் சவுண்ட் பார்ட்டி ஜாக்குவார் தங்கத்தை கிழித்த முன்னாள் கவர்னர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மனோ ஜெயந்த், மகாராஷ்ட்டிராவைச் சார்ந்த ஊர்வசி ஜோஷி இருவரும் ஜோடியாக நடித்துள்ள படம் வேதமானவன்.

ஓய்வுபெற்ற நீதிபதி மூ.புகழேந்தி, செல்லம் அன்கோ கிரியேஷன்ஸ் சார்பில் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி தயாரித்து இயக்கியுள்ள படம் இது.

இப்படத்தில் டெல்லி கணேஷ், பெஞ்சமின், போண்டா மணி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவை எஸ்.கண்ணன் கவனிக்க இசை பணியை இசை கவிஞர் செளந்தர்யன் மேற்கொண்டுள்ளார்.

‘சிறையிலிருந்து விடுதலையாகும் கைதிக்கு, இந்த சமூகம் என்ன வரவேற்பு கொடுக்கிறது என்பதுதான் படத்தின் ஒன்லைன் கதையாம்.

தான் நீதிபதியாக இருந்தபோது வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் இப்படத்தை இயக்கியுள்ளார் புகழேந்தி.

இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இயக்குனர் கே. பாக்யராஜ் வேதமானவன் பட பாடல்களை வெளியிட்டார்.

கில்டு சங்கத் தலைவர் ஜாக்குவார் தங்கம் அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.

ஜாக்குவார் தங்கம் எந்த மேடையில் பேசினாலும் தமிழர்கள் மட்டும் தான் தமிழ் படங்களில் பணி புரிய வேண்டும் என சவுண்ட்டாக பேசுவார்.

ஆனால் அவர் காலங்களில் அவர் மற்ற மொழி படங்களில் பணி புரிந்துள்ளார் என்பது வேறுகதை.

இந்நிலையில் இதனைக் கண்டிக்கும் வகையில் வேதமானவன் இசை விழாவில் கலந்துக் கொண்ட கர்நாடகாவின் முன்னாள் கவர்னரும் முன்னாள் நீதிபதியுமான மோகன் (வயது 89) பேசியதாவது….

நான் கர்நாடகாவில் கவர்னராக இருந்தேன். ஓய்வு பெறும்போது நான் ஒரு தமிழராக இருந்தபோதும அந்த மக்கள் என்னை விடவில்லை.

காரணம் நம்பிப்கை. நல்ல நடத்தை தான். அங்கு மொழி தேவையில்லை. அதுபோல் கலைஞர்களுக்கும் மொழி பேதம் கிடையாது.

தமிழ் படத்தில் தமிழர்கள் மட்டும் தான் இருக்க வேண்டும் என கூறும் ஜாக்குவார் அவர்கள் தமிழ் சினிமாவை தமிழர்கள் மட்டும்தான் பார்க்கனும்? என கூற முடியுமா? அவரால் முடியாது.” என பரபரப்பாக பேசினார் இந்த 89 வயது முன்னாள் நீதிபதி மோகன்.

கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நிதி திரட்டும் மைம் கோபி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் மைம் கோபி சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர். இவர் மைம் கலை , நடிப்பு பயிற்சி ஆசிரியராகவும் இருக்கிறார். மைம் கலை மூலமாக பல நிகழ்ச்சிகள் நடத்தியும் வருபவர்.

சென்னை எழும்பூர் டான் போஸ்கோ பள்ளியுடன் இணைந்து மைம் நிகழ்ச்சி நடத்தி அதில் வரும் நிதியை ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணத்தில் மைம் நிகழ்ச்சியை டான் போஸ்கோ பள்ளி கலையரங்கில் நடத்தினார்கள்.

நடிகர்களாக டான் போஸ்கோ பள்ளி மாணவர்களையே பயிற்சி கொடுத்து நடிக்கவும் வைத்துள்ளார்.

இது பற்றி மைம் கோபி கூறுகையில்…

குழந்தைப்பருவத்தில் நாம் சொல்லிக்கொடுக்கும் பழக்க வழக்கங்கள்தான் ஒரு மனிதனை மனிதனாக்குகிறது.

நல்ல பழக்கங்களும், உதவும் எண்ணமும், மனிதபிமானமும் சிறு வயதிலிருந்தே நாம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கவேண்டும் என்கிற நோக்கில் டான் போஸ்கோ பள்ளி மாணவர்களை மைம் கலையை சொல்லிக்கொடுத்து அதை மேடையேற்றி அதில் வரும் நிதியை புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மருத்துவ உதவிக்கும், ஆதரவற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று முடிவு செய்து இந்த நிகழ்ச்சியை நடத்தினோம்.

தான் நடித்த நிகழ்ச்சியில் கிடைக்கும் வருவாய் எங்கோ இருக்கும் ஆதரவற்றவர்களுக்கும், புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மருத்துவ உதவிக்கும் உதவப்போகிறது என்பதை இந்த மாணவர்களுக்கு உணர்த்தினோம்.

மாணவர்களும் ஆர்வத்துடன் இந்த மைம் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் மாணவர்கள் மத்தியில் உதவும் குணத்தை ஏறபடுத்த ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித்தந்த டான் போஸ்கோ பள்ளி பங்குத் தந்தை லூயி பிலிப் மற்றும் நிற்வாகத்தினருக்கு எனது நன்றிகள். என்றார்.

விழாவில் தயாரிப்பாளர் நந்தகுமார், நடன இயக்குனர் சாண்டி, இமான் அண்ணாச்சி, நடிகை அர்ச்சனா, நடிகர் வசந்த் ரவி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மலையாளத்தில் விஜய்சேதுபதி அறிமுகம்; ஜெயராமுடன் இணைகிறார்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அண்மையில்தான் பீட்சா, தென்மேற்கு பருவக்காற்று படங்கள் வந்த மாதிரி இருந்தது. அதற்குள் 25 படங்களை முடித்துவிட்டார் விஜய்சேதுபதி.

மாத்ததிற்கு ஒரு படம் என்றளவில் நிறைய படங்களை கொடுத்து வருகிறார்.

இதனிடையில் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கும் ’சைரா நரசிம்ம ரெட்டி’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

இதில் அமிதாப் பச்சன், சுதீப், நயன்தாரா ஆகியோரும் நடிக்கின்றனர்.

இந்நிலையில், தெலுங்கை அடுத்து மலையாளத்திலும் நடிக்கிறார்.

சனில் இயக்கத்தில் ஜெயராம் நாயகனாக நடிக்கும் மர்கோனி மத்தாய் என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் இந்த சீதக்காதி.

Vijay Sethupathi set to make Malayalam debut with Jayaram

ஹன்சிகாவின் குணாதிசயங்களை குறிக்கும் *MAHA* லெட்டர்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Magnetizing, Alluring, Hidden & Aggressive’ ஆகியவை இந்த ‘MAHA’ படத்தின் தலைப்பின் முதல் எழுத்துக்களை குறிக்கிறது.

மேலும், மொத்த படமும் நாயகி ஹன்சிகாவின் குணாதிசயங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதல் கட்ட படப்பிடிப்பை படக்குழு முடித்திருக்கிறது.

எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் வி மதியழகன் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.

“ஆம், ஒரு தயாரிப்பாளராக மிகக் கடுமையாக பணிபுரியும் இந்த குழுவை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன்.

ஒரு தயாரிப்பாளரை ஊக்கப்படுத்தும் முதல் விஷயம், படக்குழுவினர் சொன்ன தேதிக்குள் முடித்துக் கொடுக்கும் போது தான்.

இயக்குனர் ஜமீல், ஹன்சிகா மொத்வானி, ஒளிப்பதிவாளர் லக்ஷ்மன் மற்றும் குழுவில் உள்ள அனைவரின் ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்பை கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்கிறார் எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் வி மதியழகன்.

“வழக்கமாக சினிமாவில், திறமையான கலைஞர்களை இயக்குநரின் நடிகர், தயாரிப்பாளரின் இயக்குனர் என்ற அடைமொழியுடன் குறிப்பிடுவார்கள். ஆனால் நான் தொடர்ந்து பெரும் பொறுப்புடன் செயல்படும் ஒரு தயாரிப்பாளரின் குழுவைக் கொண்டிருக்கிறேன் என கருதுகிறேன்.

இது எனக்கு ஒரு நேர்மறையான உணர்வைத் தருகிறது. இப்போதே எனக்கு படத்தின் தரம் கண் முன்னால் தெரிகிறது” என்றார்.

தயாரிப்பாளர் மதியழகன் வெவ்வேறு நிலைகளில் உருவாகி வரும், நயன்தாராவின் கொலையுதிர் காலம், அருண் விஜய் நடிக்கும் ‘பாக்ஸர்’ என நல்ல தரமான படங்களை தயாரித்து வருகிறார்.

ஜிப்ரான் இசையமைக்க, ஹன்சிகா மோத்வானி நடிக்கும் ‘மகா’ அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் அம்சங்களை கொண்ட ஒரு மர்மம் நிறைந்த திரில்லர் படம்.

Maha title itself reveals 4 characters of Heroine Hanshika

திறமையானவர்களுக்கு லிப்ரா ஹவுஸ் ஆஃப் ஆர்ட்ஸ் துணை நிற்கும். – ரவீந்தர் சந்திரசேகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரைப்படத் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரின் லிப்ரா ‘ஹவுஸ் ஆஃப் ஆர்ட்ஸ்’ வழங்கிய ருத்ர தசாகம் நாட்டிய விழா, சென்னை லேடி ஆண்டாள் பள்ளி வளாகத்தில் டிசம்பர் 22 ஆம் தேதி இன்று நடந்தது.

சிவாலயங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆருத்ரா தரிசனத்தை அளித்தது போன்ற உணர்வை ஏற்படுத்திய இந்த நிகழ்வில், சர்வதேச அளவில் பரத நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தி வருபவரும் பல்லாயிரம் கலைஞர்களை உருவாக்கியவருமான நாட்டியாச்சார்யா வி.பி.தனஞ்செயன் அவரது மனைவியும் பரத நாட்டியக் கலைஞருமான சாந்தா தனஞ்செயன், மற்றொரு பிரபல பரத நாட்டிய கலைஞர் SNA Awardee நந்தினி ரமணி, முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் அன்றைய விஞ்ஞான ஆலோசகர் மற்றும் அப்துல்கலாம் விஷன் இந்தியா கட்சியின் நிறுவனர் பொன்ராஜ், எழுத்தாளர் இயக்குநர் கேபிள் சங்கர், கெளதமி வேம்புநாதன், நடிகர் சாந்தனு பாக்யராஜ் மற்றும் நடிகர் செளந்திரராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

பரத நாட்டிய கலைஞர் பினேஷ் மஹாதேவன் குழுவினர் நடத்திய ‘ருத்ர தசாகம்’ சிறப்பு விருந்தினர்கள் மற்றும் அரங்கில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு ஆன்மீக விருந்தளித்தது போல இருந்தது என்றால் அது மிகையாகாது.

அதனைத் தொடர்ந்து பேசிய தனஞ்செயன், “திறமையான கலைஞர்கள் பணம் கொடுத்தால் தான் சபாக்களில் நாட்டியமாட முடியும் என்கிற நிலை மாறி கலைஞர்களுக்குப் பணம் கொடுத்து ஆட வைக்கவேண்டும்.

நல்ல கலைஞர்களை ஊக்குவித்தால், அவர்களால் அற்புதமான நாட்டிய விருந்து படைக்க முடியும். அப்படி, நல்ல கலைகள் அரங்கேற்றப்பட்டால், ரசிகர்களும் அதனை அங்கீகரிப்பார்கள்.

அந்த வகையில், திறமையுள்ள கலைஞர்களைக் கண்டறிந்து முற்றிலும் சிறப்பான மேடையமைத்துக் கொடுக்கும் ரவீந்தர் சேகரரின் லிப்ரா ‘ஹவுஸ் ஆஃப் ஆர்ட்ஸ்’ நிறுவனம் பாராட்டுக்குரியது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாட்டியத்திற்கான அரங்குகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதைப்போன்ற அரங்குகளை நாம் அமைக்கவேண்டும்.

உலகின் துயர்களைத் தீர்க்கும் நாடு என்கிற பொருள் படவே பாரதம் என்று நம் நாடு அழைக்கப்படுகிறது. நாட்டின் பெயரும் அதன் கலையும் ( பாரத நாட்டியம் ) ஒரே மாதிரி அழைக்கப்படுவது நம் நாட்டில் மட்டும் தான்..” என்றார்.

“தமிழை மறந்ததே கலைகளும் அழிய காரணம் ” என நடிகர் செளந்திரராஜா பேசினார். “கலைகளை இலவசமாகக் கொடுத்து விடாமல், ஒரு ரூபாயாவது ரசிகர்களிடம் வசூலிக்க வேண்டும்…” என கேபிள் சங்கர் பேசினார்.

“பரத நாட்டியம், நம் உடல், மனம் மற்றும் ஆன்மாவை இணைக்கிறது. புத்துணர்ச்சி தருகிறது.

அதன் மூலம் மகிழ்வும் ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் கிடைக்கிறது. கலாம் ஐயாவுடன் ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்ற போது, அங்குள்ள கலைகளை அந்த நாட்டு மக்கள் தினமும் பார்த்து ரசித்து கொண்டாடுகிறார்கள்.

அதுபோன்ற நிலை, நம் நாட்டிலும் ஏற்படவேண்டும்..” என்றார் பொன்ராஜ்.

லிப்ரா ஹவுஸ் ஆஃப் ஆர்ட்ஸ் ரவீந்தர் சந்திரசேகர் பேசிய போது…

“திறமையான கலைஞர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு மேடை அமைக்கவேண்டும் என்பதே எங்களின் குறிக்கோள். இதன் மூலம் எந்த பண பலனும் கிடைக்கவேண்டாம்.

ஆத்ம திருப்தியும் நம் பாரம்பரிய கலைஞகளுக்கு ஏதாவது செய்கிறோம் என்கிற நிறைவுமே முக்கியம்… வருடந்தோறும் என்றில்லாமல், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்துவோம்.

நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும், பரத நாட்டியத்தைத் தீவிரமாக நேசிக்கும், நேர்த்தியாக வெளிப்படுத்தும் திறமையுள்ள கலைஞர்களுக்கு லிப்ரா ‘ஹவுஸ் ஆஃப் ஆர்ட்ஸ்’ என்றுமே துணை நிற்கும்.

ரசிகர்களை கேட்டுக் கொள்வது ஒன்றே ஒன்றுதான். நீங்கள் குடும்பத்துடன் வந்து நிகழ்ச்சிகளைக் கண்டுகளியுங்கள். கலைஞர்களை ஊக்குவியுங்கள்.” என்றார்.

Libra House of Arts will supports Talented Artists says Ravindar Chandrasekar

தமிழ்நாடு திரையரங்கு & மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் துவக்க விழா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ்நாடு திரையரங்கு & மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் துவக்க விழாவானது, சென்னை இராமபுரம் Feathers – A Radha Hotel – ல் நடைபெற்றது.

தமிழ் நாட்டில் தற்போது இயங்கிக்கொண்டிருக்கிற திரையரங்குகள் மற்றும் புதிதாக தோன்றியுள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகளை இணைத்து ஒரு புதிய சங்கமாக தோற்றுவிக்கப்பட்டது.

இவ்விழாவில் தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ்
உரிமையாளர்கள் சங்கத்தின் புரவலர் திரு. அபிராமி இராமநாதன் தலைமை தாங்கினார், தமிழக அரசின் மாண்புமிகு. உயர்கல்வித்துறை அமைச்சர் திரு கே பி அன்பழகன் அவர்களும், மாண்புமிகு தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு கடம்பூர் ராஜீ அவர்களும் குத்துவிளக்கேற்றி சங்கத்தை துவக்கி வைத்தனர்.

சங்கத் தலைவராக திருப்பூர் சுப்ரமணியம் அவர்களும் , சங்க பொது செயலாளராக திரு. R .பன்னீர் செல்வம் அவர்களும் பொருளாளராக திரு.D.C. இளங்கோவன் அவர்களும் மற்றும் பல நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர்.

விழாவில் திரையரங்க தொழில் வளர்ச்சியடையும் வகையில் தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளையும், வழங்க உள்ள சலுகைகளையும் பற்றி அறிவித்து அமைச்சர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.

இவ்விழாவில் தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ்
உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து நலிவடைந்த திரையரங்க தொழிலை மேம்படுத்தும் வகையில் ஆணை வழங்கியதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் உயர்திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் தலைமையிலான நல்லரசுக்கு சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது,

மேலும் நிலுவையில் உள்ள மற்ற கோரிக்கைகளையும் விரைவாக பரிசீலனை செய்து ஆணை வழங்கிடுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது, விழாவை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதி திரையரங்குகளின் உரிமையாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tamilnadu Theatre and Mulitiplex Owners Association news

More Articles
Follows