எரும சாணி புகழ் ஹரிஜாவும் சினிமாவுக்கு வருகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவுக்கு நிகராக டிவி சேனல்கள் உருவெடுத்து வருகின்றன.

அதே வேளையில் டிவிக்கு நிகராக யூட்யுப் சேனல்களும் வந்துக் கொண்டிருக்கின்றனர்.

இதில் எரும சாணி என்ற யூ-ட்யூப் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஹரிஜா.

இவர், ஏற்கெனவே ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வருபவர்.

தற்போது, ‘டார்லிங்’ பட புகழ் சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா முரளி நடிக்கும் படத்திலும் நடிக்கவுள்ள்ர்.

இதில் அதர்வா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறாராம். ஆனால் ஹரிஜாவுக்கு எந்த கேரக்டர் என்பது தெரியவில்லை.

Eruma Saani fame Harija entering into Cinema

விஷால் கோரிக்கையால் தாய்லாந்து சூட்டிங்கை அவசரமாக முடிக்கும் சந்திரமௌலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நவரச நாயகன் கார்த்திக் மற்றும் அவரது மகன் கௌதம் கார்த்திக் முதன் முறையாக இணைந்து நடித்து வரும் படம் Mr. சந்திரமௌலி

டைரக்டர் திரு இயக்கி வரும் இப்படத்தில் ரெஜினா கெசண்ட்ரா, வரலட்சுமி, சதீஷ், ‘மைம்’ கோபி, விஜி சந்திரசேகர் இயக்குனர்கள் மகேந்திரன், அகத்தியன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

தனஞ்செயனின் ‘பாஃப்டா’ நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

தற்போது இதன் படப்பிடிப்புக்காக படக்குழுவினர் தாய்லாந்தில் உள்ள கிராபி தீவுக்கு பயணமாகியுள்ளனர்.

அங்கு வருகிற 22-ஆம் தேதிக்குள் சூட்டிங்கை அவசரமாக நடத்தி முடிக்கவிருக்கிறார்களாம்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க உத்தரவின்படி மார்ச் 23-ஆம் தேதிக்குள் சூட்டிங்கை முடிக்கத்தான் இந்த அவசர ஏற்பாடாம்.

Mr Chandramouli shooting at Thailand news updates

ப்ளாப் பட டைரக்டருக்கு சூர்யா கார் பரிசா..? விக்னேஷ்சிவன் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஞானவேல் ராஜா தயாரித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சூர்யா நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார்.

அனிருத் இசையமைத்திருந்த இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.

எனவே இப்படம் லாபமா? நஷ்டமா? என ரசிகர்களே குழம்பியிருந்தனர்.

இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு டொயோட்டா கார் ஒன்றை பரிசளித்தார் சூர்யா.

இதற்கு பல பாராட்டுகள் வந்தாலும், ஒரு சில பேர் தோல்வி படத்திற்கு எல்லாம் பரிசு கொடுக்கிறாங்கய்யா? என கிண்டல் செய்தனர்.

மேலும் பலர், தோல்வியை திசை திருப்பவே இந்த அன்பளிப்பு என பேசினர்.

இதனையறிந்த விக்னேஷ் சிவன், ‘யார் என்ன சொன்னாலும் அன்பாக இருப்போம். என் போன்ற இயக்குனர்களுக்கு ஊக்கப்படுத்த பெரிய மனது வேண்டும். சூர்யாவின் அன்புக்கும் பரிசுக்கும் நன்றி” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Vignesh ShivN‏Verified account @VigneshShivN
Yaar enna sonnalum Anbaagavae iruppom ThankU @Suriya_offl sir for this priceless Anbu & kind gesture It takes a big heart to encourage a beginner like me Not sure if I deserve this much love frm u sir! ThankU for the opportunity & this moment @rajsekarpandian

Vignesh Shivan tweet about Suriyas car gift issue

குரங்கணி தீ விபத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு கமல் நேரில் ஆறுதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தேனி மாவட்டத்தில் உள்ள குரங்கணி மலையில் கடந்த 11-ந் தேதி தீ விபத்து ஏற்பட்டது.

இதில் மலையேற்ற பயிற்சிக்கு (டிரெங்கிங்) சென்ற சென்னை, கோவை, ஈரோடு பகுதியை சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் சென்றனர்.

திடீரென ஏற்பட்ட காட்டுத் தீயால் இவர்கள் அனைவரும் அதில் சிக்கிக் கொண்டனர்.

ஒரு சில தப்பித்துவிட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.

இதுவரை 16 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

இந்த நிலையில், காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்த சென்னையைச் சேர்ந்த உஷா தமிழ் ஒளி மற்றும் அனுவித்யா குடும்பத்தினரை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தவர், இந்த விஷயத்தை ஒரு பாடமாகக் நினைத்து, இதுபோன்ற விபத்துகள் எதிர்காலத்தில் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்தார்.

Kamal paid his respects to the victims of Kurangani forest fire, Ms. Nisha & Ms.Anuvidhya. He met their families today and offered condolences to them.

பத்து நாடுகளுக்கு பறக்கும் சூர்யா-37 படக்குழுவினர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

செல்வராகவன் இயக்கும் ‘என்.ஜி.கே’ படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

இப்படத்தில் சாய்பல்லவி, ரகுல் பிரித்தி சிங் நாயகிகளாக நடித்து வருகின்றனர்.

இதனையடுத்து சூர்யாவின் 37-வது படத்தை கே.வி.ஆனந்த் இயக்க லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

இதன் சூட்டிங் ஜூலை இறுதியில் துவங்கவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்புக்காக 10 நாடுகளுக்கு சூர்யாவை அழைத்து செல்ல இருக்கிறாராம் கே.வி.ஆனந்த்.

அவை எந்தந்த நாடுகள் என்ற விவரங்கள் விரைவில் வெளியாகவுள்ளது.

Suriya 37 movie team flying to 10 countries for shooting

விவசாயமும் சினிமாவும் இறக்கின்றன; விவேக் கருத்தால் கடுப்பான ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவில் காமெடி மட்டுமில்லாமல் நல்ல நல்ல கருத்துக்களை சொல்லி வருபவர் விவேக்.

எனவே இவருக்கு சின்ன கலைவாணர் என்ற பட்ட பெயரும் உண்டு.

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பசுமை திட்டத்தை தமிழகத்தில் நிறைவேற்றி வருகிறார்.

இந்நிலையில் இன்று தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.

அதில்…

தமிழ் நாட்டில் இறந்து கொண்டிருக்கும் 2 விஷயங்கள். 1. விவசாயம் 2. சினிமா. அதை அழிப்பது வரண்ட நீர் நிலை, காணாமல் போன ஆறுகள், மரங்கள் ,மீத்தேன் போன்ற திட்டங்கள்.இதை அழிப்பது வரைமுறை அற்ற வெளியீடு, fdfs இணைய விமர்சனங்கள்,கட்டண உயர்வு, சம்பள உயர்வு. அரசு தலையிடாமல் தீர்வு இல்லை” என பதிவிட்டுள்ளார்.

— Vivekh actor (@Actor_Vivek) March 16, 2018

சினிமா இல்லாமல் இருக்கலாம். விவசாயம் இல்லாமல் இருக்க முடியும்? அது எப்படி விவசாயத்தை சினிமாவுடன் ஒப்பிடுகிறீர்கள் என ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் அவரது ட்விட்டர் பக்கத்தில் சினிமாவுக்கு எதிரான பல கருத்துக்கள் பதிவாகி உள்ளன.

How You can compare Agriculture with Movies Fans Question to Vivek

More Articles
Follows