VZ துரை தயாரித்த Sci-Fi திரில்லர் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட பிரபல நடிகர் கபீர் துகான் சிங்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முகவரி, தொட்டி ஜெயா, இருட்டு போன்ற பல வெற்றிப்படங்களை இயக்கிய VZ துரை, டாய்னா பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து Sci-Fi திரில்லர் படத்தை தயாரிக்கிறார்.

கடந்த 2017ஆம் ஆண்டு ‘ராடன் பிலிம் பெஸ்டிவெல்’ குறும்பட போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்ற சிறந்த குறும்படம் ‘அசரீரி’. அந்த படத்தை இயக்கிய ஜி.கே தொடர்ந்து ‘காதலின் தீபம் ஒன்று ‘ என்ற குறும்படத்தை இயக்கினார்.இது யூடியுபில் ஒரு மில்லியனுக்கு மேலான பார்வையாளர்களை கடந்து அனைவராலும் வெகுவாகப் பாராட்டப்பெற்றது.

இந்த குழுவினரால் மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் Sci-Fi திரில்லராக “டிஸ்டண்ட்” எனும் திரைப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாக்கப்பட்டு விரைவில் வெளிவர இருக்கிறது. இதன் பர்ஸ்ட் லுக்கை பிரபல வில்லன் நடிகர் கபீர் துகான் சிங் தன் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

ஜீவி படத்தின் ஒளிப்பதிவாளர் பிரவீன் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். படம் பற்றி அவர் கூறும்போது இந்த கதை தனக்கு மிகவும் சவாலாக இருந்ததாக தெரிவித்தார்.

படத்தின் நாயகனாக அறிமுக நாயகன் சுரேஷ் நல்லுசாமி நடிக்கிறார்.விஜய் டிவி ஆயுத எழுத்து தொடர் புகழ் சௌந்தர்யா நஞ்சுதன் இந்த படத்தில் நாயகியாக நடிக்கிறார். விஜய் சித்தார்த்தா இசையமைக்கிறார்.

நடிகர்கள் : சுரேஷ் நல்லுசாமி, சௌந்தர்யா நஞ்சுதன், பிக் பிரிண்ட் கார்த்திக், ராதாகிருஷ்ணன், முத்துபாண்டியன்

இயக்கம் : ஜி.கே
இசை : விஜய் சித்தார்த்தா
ஒளிப்பதிவு: பிரவீன் குமார்
பாடல்கள்: ஆதி
படத்தொகுப்பு: ராகுல்
கலை: தேவா
ஸ்டண்ட்: சுதேஷ்
VFX: முத்துகுமரன்
மாடல் மேக்கர்: அருண்
பாடியவர்: சில்வி சரோன்

தயாரிப்பு: சுரேஷ் நல்லுசாமி | முருகன் நல்லுசாமி

ஊரடங்கில் 17000 குடும்பங்களுக்கு உதவிய விஜய் தேவரகொண்டா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகம் முழுவதும் ‘கொரோனா’ நோய்த் தொற்று காரணமாக நெருக்கடிக்கு உள்ளான நிலையில் இந்தியாவில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. எதிர்பாராத இந்த அசாதாரண சூழ்நிலை பல பேரின் வாழ்வாதாரத்தை அசைத்துப் பார்த்தது. பணத்தை ஈட்ட வழியில்லாமலும், வேலையை இழந்தும் ஸ்தம்பித்துப் போயிருந்த நிலையில் நடிகர் விஜய் தேவர்கொண்டா இதற்கு தீர்வு காண எண்ணினார்.

அதன் காரணமாக தனது இலாப நோக்கமில்லாத அமைப்பான தேவர்கொண்டா அறக்கட்டளை (The Deverakonda Foundation) மூலம் நடுத்தர குடும்பத்தினருக்கு உதவும் ஒரு தனித்துவ முயற்சியை மேற்கொண்டார்.

விஜய் தேவர்கொண்டாவின் இந்த அறக்கட்டளை இது வரை 1.7 கோடி ரூபாயில் சுமார் 17,723 குடும்பங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மளிகைப் பொருட்களை நிவாரண உதவியாக அளித்துள்ளது.

மேலும் 8,505 தன்னார்வ தொண்டர்கள் தங்களை இந்த கட்டளையில் இணைத்துக் கொண்டு 1.5 கோடி ரூபாய் அளவிற்கு நிதி திரட்டியதன் மூலம் சுமார் 58,808 குடும்பங்களுக்கு சரியான நேரத்தில் முக்கிய உதவிகள் சென்றடைந்துள்ளன.

கொரோனாவால் ஏற்பட்ட அசாதாரண நிலையை எதிர்கொள்ள மட்டுமே முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சி தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஐந்தாம் கட்ட பொது முடக்கத்தில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மக்கள் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில், கடந்த ஜூன் 2-ம் தேதியுடன் இயக்கத்தை நிறுத்த முடிவெடுத்துள்ளது.

எனவே அறக்கட்டளை எப்படி நிதி கையாளப்பட்டது என்பதை வெளிப்படையாக ஊடகங்களுக்கு ஒவ்வொரு நாளும் வெளியிடப்பட்டு வருகிறது.

இந்த அறக்கட்டளை இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காக அறிமுகம் செய்த முதல் வேலைத் திட்டமும் (First Job Program) இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அடிப்படையில் நடுத்தர குடும்பதை சேர்ந்த விஜய் தேவர்கொண்டாவுக்கும், அப்படிப்பட்ட குடும்பங்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் கஷ்டங்களும், போராட்டங்களையும் நன்கறிந்தவர் என்பதால், இந்த நெருக்கடி காலகட்டத்தில் அவர்களுக்கு தோள்கொடுக்க மற்றொரு வாய்ப்பாக அமைந்தது.

ஆனால் அதை விட அவர் இந்த திட்டத்தை அறிவித்தவுடன் நன்கொடையை வாரி வழங்கி அவர் மீது தாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை பொதுமக்கள் காண்பித்தது அவரது உத்வேகத்தை மேலும் அதிகரித்தது என கூறலாம்.

அந்த நம்பிக்கையே அவர்கள் அளித்த பணத்தில் இம்மியளவு கூட வீணாகிவிடக்கூடாது என்ற பொறுப்புணர்ச்சியை இந்த அறக்கட்டளைக்கு அதிகரிக்க செய்தது. அதன் காரணமாக நன்கொடைகளை கையாளும் விதத்தை மிக கவனத்துடன் வடிவமைத்தது இந்த அறக்கட்டளை. அறக்கட்டளையிடம் உதவி கோரிய ஒவ்வொரு குடும்பத்தினரின் பின்னணி மற்றும் விவரங்களை சரி பார்த்து உறுதி செய்த பின்னரே உதவி செய்யப்பட்டது.

இந்த அறக்கட்டளையானது தாங்கள் உதவுவதோடு நிறுத்தி கொள்ளாமல் கார்ப்பரேட் நிறுவனங்களையும் உதவ வலியுறுத்தியதுடன் சுமார் 535 தன்னார்வலர்கள் அவர்களுடன் இணைத்து பெரும் பாதிப்புக்குள்ளான ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு வெற்றிகரமாக உதவ துணை புரிந்துள்ளது.

அறக்கட்டளையின் இந்த தீவிர செயல்பாடும், அதில் விஜய் தேவர்கொண்டா காண்பித்த ஈடுபாடும் பல குடும்பங்களை நெருக்கடியிலிருந்து மீட்க உதவியுள்ளது. எந்தவித எதிர்பார்ப்பையோ, புகழ் வெளிச்சத்தையோ எதிர்பாராமல் நடுத்தர வர்க்கத்திற்குப் பக்கபலமாக நின்ற அவரது இந்த பண்பு மிகவும் பாராட்டுதலுக்குரியது.

பெரும்பாலும் சமுதாயத்தால் தாழ்த்தப்பட்டும், புறக்கணிக்கப்பட்டும் இருந்து வந்த தொழிலாள வர்க்க குடும்பங்களுக்கு உதவியதன் மூலம் அளப்பறிய பணியை இந்த அறக்கட்டளை ஆற்றியுள்ளது,ம். நிதிகளை கையாண்டதில் வெளிப்படை தன்மை மற்றும் திட்டமிட்டு செயல்பட்டதன் மூலம் இந்த அறக்கட்டளையும், விஜய் தேவர்கொண்டாவும் அனைவரின் பாராட்டுதல்களை மட்டுமல்லாமல் இதயங்களையும் வென்றுள்ளனர்.

இது இத்துடன் முடிந்து விடவில்லை, இந்த நற்பணியைத் தொடர விரும்பும் விஜய் தேவர்கொண்டா மேலும் பல நலத்திட்டங்களை வரும் நாட்களில் அறிவிப்பார்.

ஆன்லைன் வர்த்தக மோசடிகளுக்கு ஆப்பு வைக்கும் விஷால்; விரைவில் ‘சக்ரா’ டீஸர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷால் நடித்து வரும் ‘சக்ரா’ படத்தின் டீஸர் தயாராகிவருகிரது. விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்துவிட்டது.

முழுதாக முடிக்கும் நேரத்தில் கொரோனா கால பொதுமுடக்கம் வந்து விட்டது. எனவே ஒரு வாரம் படப்பிடிப்பு நடைபெறாமல் தடைபட்டுவிட்டது. அனுமதி கிடைத்ததும் படபிடிப்பு நடைபெறும்.

இப்போது படத்தின் டீஸர்
விரைவில் வெளியாக இருக்கிறது.

விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரிக்கும் படத்தை இயக்குபவர் எம்.எஸ். ஆனந்தன். இவர், இயக்குநர் எழிலிடம் உதவியாளராகப் பணிபுரிந்தவர்.

‘சக்ரா ‘ – ஆன்லைன் வர்த்தக மோசடிகள் பற்றிய பின்னணியுள்ள கதையாக உருவாகி வருகிறது.

இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ரெஜினா கசண்ட்ரே நடிக்கிறார்.

இவர்களுடன் ரோபோ ஷங்கர், கே.ஆர்.விஜயா, ஸ்ருஷ்டி டாங்கே, மனோபாலா, விஜய்பாபு மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, மதன் கார்க்கி பாடல்களை எழுதியிருக்கிறார். ஒளிப்பதிவு பாலசுப்பிரமணியெம், படத்தொகுப்பு சமீர் முகமது, கலை எஸ்.கண்ணன், சண்டைக்காட்சி அனல் அரசு, PRO ஜான்சன்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளில் நடத்தப்பட்டது.
இப்படம் விஷால் ரசிகர்களுக்கு மட்டுமல்லாது, அனைவரின் கண்களுக்கும் விருந்தாக அமையும்.

படத்தின் டீஸர் விரைவில் வெளிவரும்.

மின்சார வாரியத்தின் ‘ஷாக்’ ஸ்டேட்மெண்ட்..; பின் வாங்கினார் பிரசன்னா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஓரிரு தினங்களுக்கு முன்பு கொரோனா ஊரடங்கு காலத்திலும் தமிழ்நாடு மின்சார வாரியம் கட்டண கொள்ளையடிப்பதாக நடிகர் பிரசன்னா தெரிவித்திருந்தார்.

இந்த செய்தியை நம் தளத்தில் பார்த்தோம்.

பிரசன்னாவின் இந்த ட்வீட்டர் பதிவு பெரும் விவாதத்தை உண்டாக்கியது.

இது தொடர்பாக மின்சார வாரியம் இன்று விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதில் மார்ச் மாதத்துக்கான கட்டணத்தை பிரசன்னா கட்டவில்லை என்றும், மின் கட்டணம் ஏன் அதிகமானது என்பதற்கான காரணத்தையும் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், மின்சார வாரியத்தைக் குறை சொல்வதோ, குற்றம்‌ சாட்டுவதோ என்‌ நோக்கமல்ல என்று கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

உண்மைதான்‌! ரீடிங்‌ எடுப்பதிலிருந்து 10 நாட்களுக்குள்‌ பொதுவாக கட்டணம்‌ செலுத்தும்‌ பழக்கமுள்ள நான்‌, மார்ச்‌ மாதம்‌ ரீடிங்‌ எடுக்காததால்‌ கட்டணம்‌ செலுத்த தவறியது உண்மைதான்‌. அதே அளவு இதற்குமுன்‌ காலதாமதமின்றி தவறாமல்‌ கட்டணம்‌ செலுத்தி வருகிறேன்‌ என்பதும்‌ உண்மை. வாரியம்‌ சொல்வது போல்‌ நான்கு மாத கணக்கீட்டாலும்‌, மார்ச்‌ மாத கட்டணம்‌ சேர்த்தும்‌ எனக்கு தனிப்பட்ட கட்டணம்‌ கூடுதலாக வந்திருக்கலாம்‌. என்‌ தனிப்பட்ட பிரச்சினையாக இதை நான்‌ எழுப்பவில்லை. அதிக தொகை கட்டணமாக வந்திருப்பதாக எவ்வளவு பேர்‌ நினைக்கிறார்களென்று அறிந்துகொள்ளவே என்‌ ட்வீட்‌.

மின்வாரியத்தைக் குறை சொல்வதோ, குற்றம்‌ சாட்டுவதோ என்‌ நோக்கமல்ல. பொதுவாக எல்லோருக்கும்‌ வந்திருப்பதாக சொல்லப்படும்‌ அதிக கட்டணம்‌ குறித்த கவன ஈர்ப்பும்‌ , அதன்மூலம்‌ வாரியமோ அரசோ இந்த இக்கட்டான சூழலில்‌ ஏதாவது முறையில்‌ இப் பிரச்சினையில்‌ மக்களுக்கு ஒரு தளர்வோ கட்டணம்‌ செலுத்த தவணை அல்லது கால அவகாசமோ தருமாயின்‌ மிக்க உதவியாக இருக்கும்‌ என்பதே என்‌ வேண்டுகோள்‌.

நேற்றைய தொலைக்காட்சி உரையாடலிலும்‌ அதையே நான்‌ குறிப்பிட்டிருக்கிறேன்‌. ஊரடங்கு காலங்களில்‌ மருத்துவ, காவல்‌, சுகாதார துறைகள்‌ போலவே மின்வாரிய ஊழியர்களும்‌, அதிகாரிகளும்‌ அயராது பணியாற்றியிருக்கிறார்கள்‌ என்பதை நன்றியோடு பாராட்டவும்‌ நான்‌ மறக்கவில்லை.

மற்றபடி வாரியத்தையோ அரசையோ குறைகூறுவதற்கான உள்நோக்கமில்லை. உள்நோக்கமில்லாத போதும்‌ என்‌ வார்த்தை மின்வாரிய ஊழியர்கள்‌, அதிகாரிகள்‌ மனநோகச்‌ செய்திருப்பின்‌ அதற்காக வருந்துகிறேன்‌. மக்கள்‌ மீது விழுந்திருக்கும்‌ இந்த எதிர்பாரா சுமையை வாரியமும்‌ அரசும்‌ இறக்கி வைக்குமென எதிர்பார்க்கிறேன்‌.

பிகு: என்‌ வீட்டிற்கு நிர்ணயிக்கப்பட்ட முழு தொகையும்‌ எந்த நிலுவையுமின்றி நான்‌ செலுத்திவிட்டேன்‌”.

இவ்வாறு அந்த பதிவில் நடிகர் பிரசன்னா குறிப்பிட்டுள்ளார்

நிம்மதியாக மூச்சு விடும் போது ‘மூக்குத்தி அம்மன்’ தரிசனம் – RJ பாலாஜி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எல்கேஜி படத்தை அடுத்து மீண்டும் அடுத்த படத்திலும் ஹீரோவாகியுள்ளார் ஆர். ஜே. பாலாஜி. இந்த படத்தை இவரே இணைந்து இயக்கியும் வருகிறார்.

இயக்குனர் என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி உள்ளார்.

நயன்தாரா கதையின் நாயகியாக நடித்து வருகிறார்.

காமெடி படமாக உருவாகி வரும் இப்படத்திற்காக நயன்தாரா, 48 நாட்கள் அம்மனுக்கு விரதம் இருந்து நடித்திருக்கிறாராம்.

இவர்களுடன் ஊர்வசி, மவுலி, ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ளார்.

கடந்த மாதம் மே 1-ந் தேதி படத்தை வெளியிடயிட இருந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக படம் ரிலீஸ் தள்ளிபோனது.

இந்நிலையில், ‘மூக்குத்தி அம்மன்’ பட ரிலீஸ் குறித்து ஆர்.ஜே.பாலாஜி சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அதில்… கொரோனா அச்சுறுத்தல் தணிந்து மக்கள் அனைவரும் பயமின்றி எப்போது குடும்பத்தோடு திரையரங்குக்கு வருகிறார்களோ அப்போது தான் மூக்குத்தி அம்மன் ரிலீசாகும்.

இதை நானும் தயாரிப்பாளரும் பேசி முடிவு செய்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

விக்ரமுடன் இணைத்து துருவை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி நடித்த பேட்ட படத்தை அடுத்து தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்பராஜ்.

இந்த படம் கொரோனா லாக் டவுனுக்கு பிறகு வெளியாகவுள்ளது.

இந்த படத்தை அடுத்து விக்ரம் நடிக்கவுள்ள படத்தை இயக்கவிருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ்.

இதில் விக்ரம் மகன் துருவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தன் முதல் படமாக ஆதித்ய வர்மா படத்திலேயே தன் சிறந்த நடிப்பை கொடுத்தவர் துருவ்.

தற்போது தந்தையுடன் இணைவதால் நிச்சயம் தந்தையுடன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கலாம்.

கொரோனா லாக்டவுனுக்கு இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.

More Articles
Follows