தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
முதல் படத்தில் நாம் அன்றாடம் பார்க்கும் பக்கத்து வீட்டு பெண்ணாக வந்து அசத்திருந்தார்.
இப்படத்தை தொடர்ந்து ஏமாலி என்ற படத்தில் நடித்துள்ளார்.
ஆனால் இதில் முற்றிலும் மாறுப்பட்ட கேரக்டரில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் டீசர் பெற்ற வரவேற்பையே இதற்கு உதாராணமாக சொல்லலாம்.
இதன் டீசரில் படு கிளாமராகவும் அதே சமயம், புகை பிடிப்பது போன்ற காட்சிகளிலும் நடித்திருந்தார்.
இதை சில ரசிகர்கள் ரசித்தாலும், என்னம்மா இப்படி பண்ணிட்டியேம்மா என ரசிகர்கள் தங்கள் கருத்தை தெரிவித்து வந்தனர்.
இந்த காட்சிகள் டீசரில் பார்க்கத்தான் இப்படி இருக்கும். படத்திற்கு தேவையான காட்சிகள்தான் இவை. இருந்தபோதிலும் ஆபாசம் இல்லாமல் படத்தில் காட்ட சொல்லியிருப்பதாக இயக்குனரிடம் அதுல்யா கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
V.Z. துரை இயக்கத்தில் உருவாகியுள்ள ஏமாலி படத்தில் சமுத்திரக்கனி, பாலசரவணன் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
