சந்தோஷத்தில் கலவரம் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட எஸ்ஏசி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘சந்தோஷத்தில் கலவரம்’ என்று பெயரிடப்பட்டுள்ள படத்தை கிராந்தி பிரசாத் இயக்கியுள்ளார்.

இவர் பல விளம்பரப்படங்கள் , குறும்படங்களை இபக்கியவர். அவற்றுக்காக விருதுகளும் பெற்றவர்.

திரைப்படக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்ற இவர், தெலுங்கில் சில இயக்குநர்களிடமும் திரைப்பாடம் பயின்றவர்.

இருந்தாலும் படங்கள் பார்த்து கற்றவை அதிகம். தமிழ்ப்படங்கள் நிறைய பார்த்து தமிழ் திரைச் சூழலை அறிந்து வைத்துள்ளார்.

இங்கே முகங்களை விட்டு விட்டு திறமைக்கு மட்டும் தரப்படும் மரியாதையை வைத்து தமிழில் படம் இயக்க வந்திருக்கிறார் ‘

ஸ்ரீ குரு சினிமாஸ் சார்பில் ‘சந்தோஷத்தில் கலவரம் ‘என்கிற இப்படத்தை திம்மா ரெட்டி வி.சி. தயாரிக்கிறார் . .

“ஒரு மகிழ்ச்சியான தருணத்தில் கலவரம் நடந்தால் அதன் விளைவு எப்படி இருக்கும்? என்பதே கதை.

அதனால்தான் ‘தீமைக்கும் நன்மைக்கும் இடையில் நடக்கும் மோதல் ‘என்று டைட்டிலுடன் டேக் லைன் போட்டுள்ளோம் இது ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் “என்கிறார் இயக்குநர் கிராந்தி பிரசாத் .

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன் வெளியிட்டார். வெளியிட்ட பிறகு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

அவரது வாழ்த்து குறித்து இயக்குநர் கிராந்தி பிரசாத் பேசும் போது “எஸ்.ஏ.சி.சார் துணிச்சலான பெரும் புகழ் பெற்ற இயக்குநர். அவர் எங்களை வாழ்த்தியது ஆரே்வதித்தது எங்கள் படக்குழுவிற்கே பெரும் பலம் கிடைத்த உணர்வைத் தருகிறது. ” என்கிறார்.

நிரந்த், ருத்ரா அவ்ரா, ஆர்யன், ஜெய் ஜெகநாத் , ராகுல் சி.கல்யாண், கெளதமி, செளஜன்யா, ஷிவானி, அபேக்ஷா என இப்படத்தில் புதுமுகங்கள் பலரும், ரவி மரியா வித்தியாசமான ரோலில் நடித்துள்ளனர்.

படத்துக்கு ஒளிப்பதிவு பவுலியஸ் இவர் ஹாலிவுட் படங்களில் பணியாற்றியவர். இப்படத்துக்காக அமெரிக்காவிலிருந்து வந்து பணியாற்றியுள்ளார்.

இவருடன் ஷிரவன்குமார் இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளார். இசை சிவநக் , பாடல்கள் கபிலன் மணி அமுதன், ப்ரியன் ,எடிட்டிங் கிராந்தி குமார். ஒலிப்பதிவு அருண் வர்மா இவர். ஆஸ்கார் புகழ் ரசூல் பூக்குட்டியின் மாணவர்.

விரைவில் ‘சந்தோஷத்தில் கலவரம்’ படம் திரைக்கு வருகிறது.

நிர்வாணமாக நடித்த 18.5.2009 பட தன்யாவுக்கு கொலை மிரட்டல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

18.5.2009’ என்ற பெயரில் புதிய படம் ஒன்று தயாராகி வருகிறது. இதில் கதாநாயகியாக தன்யா ரபியா பானு நடித்து வருகிறார்.

இப்படம் இன்று வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகிக்கு மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

மர்ம நபர் நள்ளிரவு 1 மணிக்கு போன் செய்து ஆபாச வார்த்தைகளால் பேசியும், கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியும் இருக்கிறார்.

இதுதொடர்பாக, நடிகை தன்யா சென்னை காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து தன்யா கூறியதாவது…

நான் இயக்குனர் கணேசன் இயக்கிய 18.5.2009 என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளேன். இலங்கையில் இசைபிரியா கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த படம் தயாரிக்கப்பட்டது.

ஆனால் அந்த படம் வெளிவரவில்லை. தற்போது புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறேன். இந்தநிலையில் என்னிடம் செல்போனில் பேசிய நபர் ஒருவர் கொலைமிரட்டல் விடுத்தார்.

18.5.2009 படத்தில் நிர்வாணமாக, கேவலமாக நடித்து உள்ளாய். உன்னை தொலைத்து விடுவேன் என்று பயமுறுத்தினார்.

நானும், எனது தாயாரும் தனியாக வசிக்கிறோம். இதுதொடர்பாக விசாரணை நடத்தி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு தொடர்பாக விசாரணை நடத்த ‘சைபர் க்ரைம்’ போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கல்யாணம் செய்துக் கொள்ள நயன்தாராவிடம் கெஞ்சும் விக்னேஷ்சிவன்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கோலமாவு கோகிலா’.

இப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘எனக்கு கல்யாண வயசு வந்திடுச்சி டி’ என்ற பாடல் நேற்று வெளியானது.

அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்பாடலுக்கு சிவகார்த்திகேயன் பாடல் எழுதியுள்ளார்.

இந்த பாடல் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த பாடலை தன் இன்ஸ்ட்ராகிராமில் பதிவிட்டுள்ள நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் ‘எனக்கு கல்யாண வயசு வந்திடுச்சி டி’ என்று பதிவு செய்து, வெய்ட் பண்ணவா என்று கேள்வி கேட்டிருக்கிறார்.

மேலும் இருவரின் பெயர்களின் முதல் எழுத்துடன் கூடிய தொப்பியை அணிந்து கொண்டிருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.

என்னம்மா நயன்தாரா இப்படி கெஞ்சுராரே…? எப்போ கல்யாணம்..?

காலா விஷயத்தில் கடுப்பேற்றும் தனுஷ்; ரஜினி ரசிகர்கள் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கபாலியை தொடர்ந்து ரஜினி, ரஞ்சித் கூட்டணியில் உருவாகியுள்ள படம் காலா.

தனுஷ் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இப்படம் ஒரே நேரத்தில் தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளில் ஜீன் 7ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

ஆனால் இதன் தமிழ் பதிப்பின் பாடல்கள் மட்டும் சென்னையில் வெளியிடப்பட்டது.

அதற்கு மிகப்பிரம்மாண்டமான விழாவும் நடத்தப்பட்டது.

ஆனால் ரஜினிக்கு உலகமெங்கும் ரசிகர்கள் உள்ளனர். அப்படி இருக்கையில் காலா படத்தின் தெலுங்கு பதிப்புக்கு எந்த விழாவும் நடத்தப்படவில்லை.

இறுதியாக லிங்கா பட இசை வெளியீட்டு விழாவில்தான் ரஜினியை நாங்கள் சந்தித்தோம். அதன்பின்னர் ஆந்திராவில் ரஜினி பட விழா எதுவும் நடக்கவில்லை.

மேலும் தயாரிப்பாளர் தனுஷ் காலா விளம்பர வேலைகளில் சரியாக திட்டமிட்டு செயல்படவில்லை என கூறி வருகின்றனர் தெலுங்கு தேசத்த சேர்ந்த ரஜினி ரசிகர்கள்.

ரஜினியின் காலா ரிலீஸ் தேதியில் மாற்றமா..? தனுஷ் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படம் வருகிற ஜூன் 7-ந் தேதி வெளியாகவுள்ளது.

ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தை தனுஷ் தயாரித்துள்ளார்.

அண்மையில் இதன் பாடல் வெளியீட்டு விழா மிகப்பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.

இந்நிலையில் திடீரென்று காலா படம் அடுத்த மாதம் ரிலீஸ் ஆகாது எனவும் தயாரிப்பு தரப்பு விளம்பரங்களில் ஈடுபடவில்லை என சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.

இதனால் காலாவை எதிர்பார்த்தவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

இதற்கு விளக்கம் அளித்கும் வகையில் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் “வதந்திகளை நம்ப வேண்டாம். காலா படம் திட்டமிட்டபடி ஜூன் 7-ந் தேதி திரைக்கு வரும்” என தெரிவித்துள்ளார்.

நயனின் சினிமா காதலுக்கே கடுப்பாகும் விக்னேஷ்சிவன்; அஜித்-சிவகார்த்திகேயன் உஷார்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நயன்தாரா நடிப்பில் லைகா தயாரித்துள்ள படம் ‘கோலமாவு கோகிலா’.

நெல்சன் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, முக்கியி வேடத்தில் யோகி பாபு நடித்துள்ளார்.

இப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘எனக்கு கல்யாண வயசு வந்திடுச்சி டி’ என்ற பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். இந்த பாடல் நேற்று வெளியானது.

இந்த பாடலை தன் ட்விட்டரில் பகிர்ந்துள்ள டைரக்டர் விக்னேஷ் சிவன் அவர்கள் நயன்தாராவை பெயரை குறிப்பிடும்போது காதல் எமோஜியை போட்டு, யோகிபாபு பெயரை பதிவிட்டு குத்து + கோபம் எமோஜிளை பதிவிட்டுள்ளார்.

சினிமாவில் கூட இனி நயன்தாராவிடம் யாரும் காதலை சொல்லக்கூடாது போல… ஹீரோஸ் எல்லாம் எச்சரிக்கையாக இருங்கப்பா..

அஜித்துடன் விஸ்வாசம், சிவகார்த்திகேயன்டன் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படம் ஆகிய படங்களில் நயன்தாரா நடிக்கவுள்ளார் என்பது இங்கே கவனித்தக்கது.

அனிருத் இசையில், சிவகார்த்திகேயனின் பாடல் வரிகளில் வெளியான இப்பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

More Articles
Follows