எஸ்ஏசி தொடங்கிய தளபதி விஜய் மக்கள் இயக்க மாநிலத் தலைவரும் ராஜினாமா.; கட்சியில இப்போ எத்தனை பேர்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தீபாவளிக்கு முன்பு தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்ட விஷயங்களில் ஒன்று அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் கட்சி பதிவு தான்

சில நாட்களுக்கு முன்பு விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தொடங்கிய இந்த கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார்.

இந்த கட்சியின் மாநிலத் தலைவராக R.K.ராஜா என்னும் பத்மநாபன் நியமிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து விஜய் தரப்பிலிருந்து ஓர் அறிக்கை வெளியானது.

அதில் தன்னுடைய ரசிகர் யாரும் அதில் சேர வேண்டாம் என தெரிவித்தார் விஜய்.

இந்த நிலையில், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மாநிலத்தலைவர் பதவியில் இருந்து தான் விலகிக் கொள்வதாக எஸ்.ஏ சந்திரசேகருக்கு கடிதம் எழுதியுள்ளார் பத்மநாபன்.

அந்த கடிதத்தில்…. தனது சிரமத்தையும் கட்சியின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு தாமாக முன்வந்து மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கட்சியில் சாதாரண உறுப்பினராக இருக்க தான் விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே பொருளாளர் பொறுப்பில் இருந்து விஜய்யின் தாய் ஷோபா விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது எஸ்ஏசி உள்பட கட்சியில் எத்தனை பேர் இருக்கிறார்கள்? என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.

Another big shock for Vijay father SA Chandrasekar

லோகேஷ் அடுத்த அட்லியா..? மாஸ்டர் படக்குழு கமலை சந்தித்தால் மெர்சலுக்கு கிடைத்த அவமானம் தான் மிஞ்சும்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டைரக்டர் லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனின் தீவிர ரசிகர்.

தான் இயக்கிய ‘கைதி’ படத்தில் சில காட்சிகளை எடுக்க ‘விருமாண்டி’ படம் தான் உதவியது என லோகேஷ் ஒரு முறை தெரிவித்திருந்தார்.

லோகேஷ் இயக்கிய கமலின் ‘விக்ரம்’ பட டைட்டில் டீசர் கூட நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியான ஒரு வெப்சீரிஸ் காப்பி தான் என தெரிய வந்துள்ளது.

அண்மையில் விஜய்யின் ‘மாஸ்டர்’ பட டீசர் வெளியானது. அதில் வரும் ஒவ்வொரு காட்சிகளிலும் ஏற்கனவே கமல் நடிப்பில் வெளியான நம்மவர் பட காலேஜ் காட்சிகளை அப்படியே நினைவூட்டுவதாக அமைந்துள்ளது.

கமல் கேரக்டரில் விஜய், கௌதமி கேரக்டரில் மாளவிகா, கரண் கேரக்டரில் அர்ஜுன் தாஸ் என பல ஒற்றுமைகள் உள்ளன.

மேலும் காலேஜில் நடக்கும் கலவரம், அதை அடக்க வரும் புரொபசர் என பல காட்சிகளும் ஒத்து வருகின்றன.

ஆனால் வில்லன் விஜய்சேதுபதி கேரக்டர் கொஞ்சம் வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

எனவே லோகேஷ் அடுத்த அட்லியாக உருவாகி வருகிறாரோ.? என ரசிகர்களே கேட்கத் தொடங்கிவிட்டனர்.

சில வருடங்களுக்கு முன் ‘மெர்சல்’ படக்குழு கமலை சந்தித்தனர். அப்போது போட்டோ எடுத்துக் கொண்டனர்.

அதன் பின்னணியில் ‘அபூர்வ சகோதரர்கள்’ பட போஸ்டரை வைத்திருந்தார் கமல்.

அப்போதே பலரும் ‘அபூர்வ சகோதரர்கள்’ பட காப்பி தானே ‘மெர்சல்’. அதான் கமல் படக்குழுவை மறைமுகமாக கலாய்த்துள்ளார் என்றனர்.

ஒருவேளை ‘மாஸ்டர்’ படக்குழு கமலை இந்த முறை சந்திக்க சென்றால் சந்திப்பின் பின்னணியில் ‘நம்மவர்’ பட போஸ்டரை கமல் வைத்திருக்க கூடும்.

எனவே விஜய் லோகேஷ் & விஜய்சேதுபதி ஆகியோர் உஷாராக இருக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது.

Is Vijay’s Master inspired by Kamal Haasan’s Nammavar?

கேன்சரால் தவசி அவதி..; ரஜினி நலம் விசாரிப்பு.. சிவகார்த்திகேயன் உதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் சூரிக்கு அப்பாவாக நடித்தவர் தவசி.

இந்த படத்தில் ‘கருப்பன் குசும்புக்காரன்’ என்று இவர் பேசிய வசனம் தான் இவரை படு பிரபலமாக்கியது. தற்போது அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் நடித்து வருகிறார் தவசி.

தற்போது இவரை புற்றுநோய் தாக்கியுள்ளது.

அண்மையில் வெளியான புகைப்படத்தல் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியிருக்கிறார்.

மேலும் அவரின் சிகிச்சைக்கு போதிய பணமின்றி கஷ்டப்படுவதால் பண உதவியை நாடியிருக்கிறார்.

விஜய்சேதுபதி ரூ. 1 லட்சம் கொடுத்து உதவியிருக்கிறார்.

இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் ரூபாய் 25 ஆயிரம் பண உதவி செய்துள்ளதாக கூறப்படுகிறது- தனது ரசிகர் மன்ற நிர்வாகியின் மூலம், அவர் இந்த உதவியை செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இதனை தொடர்ந்து தவசியை தொடர்பு கொண்டு நடிகர் ரஜினிகாந்த் உடல் நலம் விசாரித்துள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

Celebrities help to Tamil actor Thavasi

நயன்தாரா பிறந்தநாளில் காதலர் விக்னேஷ் சிவனின் ‘டீசர்’ ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நிஜத்தில் காதலர்களாக வலம் வரும் விக்னேஷ் சிவனும் நயன்தாரா மீண்டும் ஒரு திரைப்படத்திற்காக இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

நெற்றிக்கண் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க ரவுடி பிக்சர்ஸ் சார்பாக விக்னேஷ் சிவன் தயாரித்து வருகிறார்.

‘அவள்’ பட இயக்குநரான மிலந்த் ராவ் இயக்கி வருகிறார்.

அஜ்மல் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

கிரிஷ் இசையமைக்க ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இந்த நிலையில் நாளை நயன்தாரா பிறந்தநாளை முன்னிட்டு நவம்பர் 18ஆம் தேதி காலை 9.03 மணிக்கு இப்பட டீசரை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார் விக்கி.

2011-ம் ஆண்டு வெளியான கொரியன் படமான ‘ப்ளைண்ட்’ படத்தின் தழுவல் தான் ‘நெற்றிக்கண்’ என ஒரு தகவலும் கோலிவுட்டில் உலா வருகிறது.

Netrikkan teaser to release on Nayanthara birthday

கேங்ஸ்டர் படத்தில் பிரியா மணியுடன் இணையும் ‘தெய்வத்திருமகள்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘தெய்வத்திருமகள்’, ‘சைவம்’ ஆகிய படங்கள் மூலம் தான் ஒரு சிறந்த குழந்தை நட்சத்திரம் என நிரூபித்தார் பேபி சாரா.

அண்மையில் வெளியான ஹலிதா ஷமீம் இயக்கத்தில் ‘சில்லுக் கருப்பட்டி’ திரைப்படத்திலும் ஒரு எபிசோட்டில் நடித்திருத்தார்.

தற்போது பெரிய பெண்ணாக வளர்ந்து விட்டதால் நாயகியாக களமிறங்கியுள்ளார்.

அருண் விஜய்யின் நடிப்பில் உருவாகும் ‘பாக்ஸர்’ படத்தை இயக்கி வருகிறார் விவேக்.

இந்த படத்தை தொடர்ந்து ‘கொடேஷன் கேங்’ என்கிற கேங்ஸ்டர் திரைப்படத்தை இயக்கவுள்ளார் விவேக்.

மும்பை மாநகரில் உள்ள நிழலுலகத்தைச் சேர்ந்தவர்களின் வாழ்க்கையை இதில் படமாக்கவுள்ளனர்.

இந்த படத்தில் பிரியா மணி நாயகியாக நடிக்கிறார். அவருக்கு இணையான மற்றொரு கேரக்டரில் சாரா அர்ஜுன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Priya Mani and Sara Arjun joins for a gangster film

கமல் கட்சி உறுப்பினரும் பாடலாசிரியருமான சினேகன் மீது 2 வழக்கு பதிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர்களில் பிரபலமானவர் சினேகன்.

இவர் அமீர் உடன் ‘யோகி’ படத்தில் நடிகராகவும், பாடகராகவும் அறிமுகமானார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பின் தமிழக ரசிகர்களிடையே நல்ல அறிமுகம் கிடைத்தது.

அதன் பின்னர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்.

அங்கு அவருக்கு மாநில இளைஞரணி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

கடந்தாண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட்டார்.

இருபத்தி இரண்டாயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று 5-ம் இடத்தில் இருந்தார் சினேகன்.

இந்த நிலையில் இவர் மீது ஒரு விபத்து வழக்கில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், ஊனையூர் அருகே உள்ள ஆலமரத்துக் குடியிருப்பைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் அருண்பாண்டியன் (28).

அந்த நபர் ஓட்டி வந்த பைக் மீது பாடலாசிரியர் சினேகன் ஓட்டி வந்த கார் மோதியது. இந்த விபத்தில் அருண் பாண்டியன் காயமடைந்தார்.

தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

திருமயம் போலீஸார், 2 பிரிவுகளின் கீழ் சினேகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Case filed against lyricist snehan

More Articles
Follows