தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
இதுநாள் வரை மென்மையான காதலை சொன்ன பிரபு சாலமன் இதில், ஆக்ஷன் கலந்த காதலை ஓடும் ரயிலில் விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்.
இப்படத்தின் ட்ரைலரில் தனுஷ் பேசுவதாக ஒரு பன்ச் இடம்பெற்றுள்ளது. அதில்….
“தளபதி படம் பாத்திருக்கீங்களா. அதுல மெகா ஸ்டார் மம்மூட்டிக்கே எங்க சூப்பர் ஸ்டார் ரஜினிதாங்க பாதுகாப்பு. நாங்களும் பெரிய ஆளுதான்.” என்று சொல்வதாக உள்ளது.
தற்போது இந்த டயலாக்கை வைத்து மீம்ஸ்களை உருவாக்கி இணையத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர் இவர்களது ரசிகர்கள்.
