தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இந்த படத்தை அடுத்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஏஆர் முருகதாஸ் இயக்கவுள்ள படத்தில் நடிக்கிறார் விஜய்.
தளபதி 65 என்று தற்காலிமாக அழைக்கப்படும் இந்த படத்தில் தமன் இசையமைக்க உள்ளார்.
முக்கியமான ரோலில் நடிகை மடோனா செபஸ்டியன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் தலைப்பு குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
1992ல் மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி மற்றும் மம்மூட்டி இணைந்த ‘தளபதி’ படத்தலைப்பை இந்த படத்துக்கு வைக்க முருகதாஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு தளபதி படக்குழுவினரிடம் அனுமதி கேட்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
நடிகர் விஜய்யை அவரது ரசிகர்கள் அன்பாக தளபதி என்றே அழைத்து வருகின்றனர். எனவே விஜய்க்கும் அவரது படத்திற்கும் தளபதி டைட்டில் பொருத்தமாக இருக்கும் என்பதால் இந்த முடிவு என கூறப்படுகிறது.
