*கெட்டவன்* படம் நிற்க தனுஷ் தான் காரணம்.. : டைரக்டர் ஜி.டி. நந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பல வருடங்களுக்கு மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட சினிமா போஸ்டர்களில் ஒன்று சிம்புவின் கெட்டவன் படம்.

இந்த படத்தில் சிம்புவின் கெட்அப்பே பரபரப்பாக பேசப்பட்டது.

இப்படத்தை ஜி.டி. நந்து என்பவர் இயக்கவிருந்தார்.

இவர் அண்மையில் ஒரு பேட்டியில் கெட்டவன் படம் பற்றி மனம் திறந்துள்ளார்.

அதில்… கெட்டவன் படக்கதையை பரத், ஜீவா ஆகியோரிடம் கூறினேன். அவர்கள் நடிக்கவில்லை. பின்னர் தனுஷை சந்திக்க நேரம் கேட்டேன்.

ஆனால் சந்திக்க முடியவில்லை. அதன்பின்புதான் சிம்புவை சந்தித்தேன். அவரும் ஓகே சொல்ல படம் நாளை ஆரம்பிக்க இருந்தது.

ஆனால் அப்போது சிம்பு நடிக்க முடியாது என்று கூறிவிட்டார். அதற்கு காரணமே தனுஷ் தான். என்னிடம் கதையை சொன்ன டைரக்டர் இப்போது உன்னிடம் கதை கூறியிருக்கிறார் என்று சிம்புவிடம் சொல்லிவிட்டார்.

நண்பர்கள் எதை சொன்னாலும் அதை அப்படியே நம்பி விடுவார் சிம்பு. அப்போது சிம்பு அப்படியே நம்பி படத்தை நிறுத்திவிட்டார்.

சிம்புவை தன் நண்பன் தனுஷ் சொல்வார். ஆனால் இருவரும் இணைந்து நடிக்க மாட்டார்கள்.” என அந்த பேட்டியில் கூறியுள்ளார் நந்து.

புலி முருகன் சாதனையை முறியடித்த *காயம்குளம் கொச்சுன்னி*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த அக். 11ஆம் தேதி மோகன்லால்-நிவின்பாலி நடித்த ‘காயம்குளம் கொச்சுன்னி’ என்ற படம் வெளியானது.

இப்படம் கேரளாவில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதால் கேரளாவில் மட்டும் 35௦ திரையரங்குகளில் வெளியானது.

முதல்நாளில் மட்டும் 16௦௦க்கும் மேற்பட்ட காட்சிகள் திரையிடப்பட்டதாம்.

முதல்நாள் கேரளாவில் மட்டும் ரூ 5.6 கோடி வசூலித்து புலிமுருகன் படம் சாதனையை பின்னுக்கு தள்ளியுள்ளதாம்.

மேலும் உலகம் முழுதும் முதல் நாள் வசூலாக ரூ 10 கோடியை கடந்துவிட்டதாம். இதுவரை 25 கோடியை கடந்துள்ளதாக கூறப்படுகிறது.

மோகன்லாலும் நிவின்பாலியும் இப்படத்தில் இணைந்துள்ளதால் இந்த சாதனை சாத்தியமானதாக சொல்லப்படுகிறது.

நயன்தாரா திருமணம் செய்து கொண்டால் சி.எம். ஆகமுடியாது.. நந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு நடிப்பில் உருவாகவிருந்த கெட்டவன் படத்தை ஜி.டி. நந்து என்பவர் இயக்கவிருந்தார்.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார்.

ஆனால் இப்படம் தனுஷ் மற்றும் ஒரு சில காரணிகளால் நின்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சிம்பு மற்றும் நயன்தாரா காதல் குறித்து பட இயக்குனர் நந்து தன் சமீபத்திய பேட்டியில் கூறியதாவது…

சிம்புவும் நயன்தாராவும் காதலித்தார்கள். அவர்கள் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துக் கொண்டார்கள். 5 லட்சம் மதிப்பில் ஒரு மோதிரத்தையும் மாற்றிக் கொண்டார்கள்.

ஆனால் திருவல்லிக்கேணியில் உள்ள பிரபலமான ஜோசியர் ஒருவர் சொன்னதை கேட்டு இருவரும் பிரிந்து விட்டனர்.

இருவரும் தனி தனியாக இருந்தால்தான் அவர்களின் வாழ்க்கைக்கு நல்லது. திருமணம் செய்துக் கொண்டால் நயன்தாரா நடுத்தெருவில் தான் நிற்பார்.

அவர் திருமணமே செய்துக் கொள்ளாமல் இருந்தால் முதல் அமைச்சராக வாய்ப்புண்டு என அந்த பேட்டியில் நந்து தெரிவித்துள்ளார்.

Breaking ரஜினி-கமலை நம்பி நானில்லை .. இளையராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இசைஞானி இளையராஜா அவர்களின் 75வது பிறந்தநாள் கொண்டாட்டம் சென்னை, டாக்டர் எம்ஜிஆர் ஜானகி பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது.

இளையராஜா பாடல்களுக்கு மாணவிகள் ஆடி பாடினர்.

இதில் இளையராஜா கலந்துக் கொண்டார்.

அப்போது இளையராஜா பேசும்போது…

நான் 1968ல் சென்னை வந்தேன். நான் ஆர்மோனிய பெட்டியை நம்பி வந்தேன்.

ரஜினி கமல் பட வாய்ப்புகளை நம்பி வரவில்லை. அவர்கள் தான் நான் இசையமைக்க என்னைத் தேடி வந்தார்கள்.” என்று பேசினார்.

வைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த சின்மயி வலியுறுத்தல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பிரபல பாடகி சின்மயி குற்றம் சாட்டியிருந்தார்.

சின்மயிக்கு பல நடிகைகள் ஆதரவு கொடுத்தாலும் நடிகர்களிலேயே சித்தார்த் மட்டும் தனது ஆதரவை பகிரங்கமாக தெரிவித்தார்.

சின்மயின் குற்றச்சாட்டிற்கு விளக்கம் அளிக்கும் வகையில் வைரமுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், என் மீது கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் முழுக்க, முழுக்க பொய்யானது. உள்நோக்கத்துடன் சொல்லப்படுபவை.

பாலியல் குற்றம் சொல்பவர்கள், உண்மையிருந்தால் வழக்கு தொடரலாம். அப்படி தொடர்ந்தால் அவற்றை சந்திக்க தயாராக உள்ளேன்.

கடந்த ஒரு வாரமாக மூத்த வழக்கறிஞர்களுடன் ஆழ்ந்து ஆலோசித்து வந்தேன். அசைக்க முடியாத ஆதாரங்களை தொகுத்து திரட்டி வைத்துள்ளேன்.

நான் நல்லவனா? கெட்டவனா என்பதை இப்போதும் யாரும் முடிவு செய்ய வேண்டாம். அதனை கோர்ட் முடிவு செய்யட்டும்.” இவ்வாறு அந்த வீடியோவில் வைரமுத்து பேசியுள்ளார்.

வைரமுத்து வீடியோவை பார்த்த சின்மயி கூறியுள்ளதாவது… வைரமுத்துவுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Playback singer Chinmayis shocking reply to Vairamuthu Video

தனுஷ் நடிப்பில் *வெட்கை* நாவலை படமாக்கும் வெற்றி மாறன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் நடித்த பொல்லாதவன் (2007), ஆடுகளம் (2011) ஆகிய படங்களை இயக்கியவர் வெற்றிமாறன்.

தற்போது இதே கூட்டணி இணைந்துள்ள வட சென்னை படம் வருகிற அக்டோபர் 17ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இப்படத்தை தொடர்ந்து வடசென்னை படத்தின் 2ஆம் பாகத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வேறு ஒரு படத்திற்காக தனுஷை இயக்கவுள்ளார் வெற்றிமாறன்.

இதன் சூட்டிங்கை விரைவிலேயே தொடங்கவுள்ளனர்.

இப்படம் வெட்கை என்ற நாவலை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ளதாம்

இப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார் என சொல்லப்படுகிறது.

Vetrimaaran to direct Vetkai novel with Dhanush

More Articles
Follows