பிக்பாஸில் இருந்து நமீதா அவுட்டாகனும்; சிம்பு ரசிகர்கள் ஆசை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

AAA படம் தனக்கு மிகவும் கெட்டப் பெயரை வாங்கி கொடுத்துவிட்டதால், அதிரடியான ஹிட் படத்தை கொடுக்க நினைத்துள்ளார் சிம்பு.

எனவே பாதியில் கைவிடப்பட்ட கெட்டவன் படத்தை இயக்க முடிவு செய்துள்ளாராம் சிம்பு.

இதில் நமீதா ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தாராம்.

ஆனால் நமீதா தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிக்கிக் கொண்டுள்ளதால், அவர் அதிலிருந்த வர நாட்கள் ஆகும் என கூறப்படுகிறது.

இதனையறிந்த சிம்பு ரசிகர்கள், நமீதா அவுட் ஆகி வெளியானால், அவர் கெட்டவன் படத்தில் நடிக்க வந்துவிடுவார் என நினைக்கிறார்களாம்.

பிக்பாஸ் ஜி.. இதெல்லாம் உண்மையா..?

சிவகார்த்திகேயனிடம் வேலை செய்தவர் மர்ம மரணம்; போலீஸ் விசாரணை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திருச்சி மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

இவர் தற்போது நடிப்புலகில் பிஸியாகிவிட்டதால், சென்னையிலேயே புதிய வீட்டை கட்டி செட்டிலாகிவிட்டார்.

இந்நிலையில், சிவகார்த்திகேயனின் திருச்சி வீட்டின் அருகில் வசித்து வந்த ஆறுமுகம் என்பவர் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார்.

கல்குவாரி அருகே ஆறுமுகத்தின் சடலத்தை போலீசார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் மீட்டுள்ளனர்.

இதுகுறித்த விசாரணையில் சடலமாக கிடந்தவர் சிவகார்த்திகேயன் வீட்டில் தோட்ட வேலை செய்து வந்தவர் என்ற தகவல் வந்துள்ளது.

மேலும் இதுபற்றிய விசாரணையில் தீவிரமாக இறங்கியுள்ளனர் போலீசார்.

பிக்பாஸிலிருந்து பரணி தப்பிக்கும் காட்சி; அட இதுவும் காப்பியா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தினமும் 3 கோடி பேர் பார்த்து வருகிறார்களாம்.

இந்நிகழ்ச்சி எதிர்மறையான கருத்துக்களை பலர் கூறி வந்தாலும், நாளுக்குள் நாள் இதில் பரபரப்பை கூட்டி பார்வையாளர்களை ஈர்த்து வருகின்றனர்.

பங்குபெற்ற 15 பேர்களில் இதுவரை ஸ்ரீ, அனுயா, கஞ்சா கருப்பு உள்ளிடோர் வெளியேறிவிட்டார்கள்.

இந்நிலையில் இதன் ப்ரோமோவில் நடிகர் பரணி பிக்பாஸ் வீட்டை விட்டு தப்பித்து செல்வது போல் ஒரு காட்சி வந்தது.

இதற்கு முன் ஒளிப்பரப்பான பிக்பாஸ் ஹிந்தி நிகழ்ச்சியில் குஷால் என்பவர் இப்படித்தான் தப்பிக்க முயற்சி இருந்தாராம்.

அதை காப்பியடித்துதான் ஸ்கிரிப்ட் தயார் செய்துள்ளதாக பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மீண்டும் கோலி சோடா-வை கையிலெடுத்த விஜய்மில்டன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் மில்டன் இயக்கத்தில் கிஷோர், ஸ்ரீராம், பாண்டி, முருகேஷ், இமான் அண்ணாச்சி, சாந்தினி உள்ளிட்டோர் நடித்த படம் கோலி சோடா.

பரத் சீனி தயாரித்திருந்த இப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையின் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க கடந்த சில மாதங்களாகவே பணியாற்றி வந்தார் விஜய் மில்டன்.

அதன்படி, தற்போது இன்றுமுதல் சூட்டிங் தொடங்கிவிட்டார்.

எனவே, விஜய்மில்டனுக்கு இயக்குனர் சுதீந்திரன் தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நல்ல பெயர் எடுக்க கெட்டவனாக மாறும் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு நடிப்பில் அண்மையில் வெளியான AAA படம் கடுமையாக விமர்சனங்களை சந்தித்தது.

எனவே அடுத்து ஒரு நல்ல படத்தை கட்டாயம் கொடுத்து தன் புகழை மீண்டும் நிலைநிறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் சிம்பு.

எனவே கடந்த 2007ஆம் ஆண்டு சிம்புவே இயக்கி பாதியில் நின்றுபோன கெட்டவன் படத்தை மீண்டும் கையில் எடுக்க உள்ளாராம்.

இந்த ஐடியாவை சிம்புவுக்கு கொடுத்ததே டி.ராஜேந்தர் தானாம்.

எனவே, AAA படத்தின் இரண்டு கேரக்டர்களுக்காக உடல் எடையை ஏற்றிருந்த சிம்பு தற்போது மீண்டும் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறாராம்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் நமீதா மற்றும் லேகா வாஷிங்டன் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Simbu plans to start Kettavan movie soon

ஒரே நேரத்தில் த்ரிஷா-நயன்தாராவுடன் நிவின்பாலி டூயட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாளத்தில் பிரபலமான நிவின்பாலி தற்போது தமிழில் நட்டியுடன் ‘ரிச்சி’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது.

இதனையடுத்து, ஒரே நேரத்தில் த்ரிஷா மற்றும் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

ஷியாம் பிரசாத் இயக்கும் ‘ஹே ஜுட்’ படத்தில் த்ரிஷாவுடனும், தியான் சீனிவாசன் இயக்கும் ‘லவ் ஆக்ஷன் டிராமா’ படத்தில் நயன்தாராவுடனும் ஜோடி சேருகிறார்.

Nivin Pauly romance with Trisha and Nayanthara for 2 malayalam movies

 

More Articles
Follows