தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
RP Films சார்பில் R.P.பாலா தயாரித்து இயக்க பரத் – வாணி போஜன் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ள படம் “லவ்” ( Love ).
மாறுபட்ட திரைக்கதையில் மிரட்டலான திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா படக்குவினர் கலந்துக் கொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடந்தது.
இவ்விழாவினில் ஒளிப்பதிவாளர் P G முத்தையா பேசியதாவது…
மனதிற்கு மிகவும் நெருக்கமான படம். படமெடுக்கும் போதே நிறைய சுவாரஸ்யங்கள் இருந்தது.
இறுதிக்காட்சிகளில் வாணி போஜன் அட்டகாசமாக நடித்துள்ளார். அவரை விட்டு கண்ணை எடுக்க முடியவில்லை.
பரத்தும் நானும் ஃப்ரண்ட்ஸ், இந்தப்படத்தில் அவர் பின்னியிருக்கிறார். படத்தை ரசிகர்கள் எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறார்கள் என்பதைக் காண ஆவலாக இருக்கிறேன். எல்லோருக்கும் நன்றி.
நடிகர் விவேக் பிரசன்னா பேசியதாவது…
என்னுடைய இயக்குநர் தயாரிப்பாளர் R.P.பாலா மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி.
பரத் – வாணி போஜன் வெற்றிக்கூட்டணியில் நானும் இணைந்திருப்பது மகிழ்ச்சி. படத்தின் கதையில் நிறைய ஆச்சர்ய திருப்பங்கள் இருக்கிறது. உங்களை மகிழ்விக்கும் படமாக இப்படம் இருக்கும். அனைவருக்கும் நன்றி.