தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
ஆர்பி பாலா இயக்கத்தில் பரத் வாணி போஜன் மீண்டும் இணைந்துள்ள படம் ‘லவ்’.
இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் நடிகை வாணி போஜன் பேசியதாவது…
“முதலில் பரத்துடன் இன்னொரு படம் உடனே நடிக்க வேண்டுமா ? என யோசித்தேன்.. ஆனால் இந்தக்கதை மிரள் படத்திலிருந்து மிகவும் மாறுபட்ட கதை. எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
இந்தப்படத்தில் பரத்திடம் நிறைய அடி வாங்கினேன். நிறைய ஆக்சன் காட்சிகள் இருக்கிறது. வீட்டிற்கு போகும்போது உடம்பில் நிறைய காயங்கள் இருந்தன. இதை பார்த்த என் அம்மா.. “நடிக்கத் தான் போறியா.? (அடி வாங்க போறீயா?) அப்படி என்று கேட்டார்கள்.
பல சுவாரஸ்யங்கள் படத்தில் இருக்கிறது. இந்தப்படம் எங்களுக்கு மிக நெருக்கமான படம். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி.