வசூல் முகனாக பட்டைய கிளப்பும் விக்ரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாபெரும் வெற்றி பெற்ற ‘ஐ’ படத்திற்கு பிறகு விக்ரம் நடிப்பில் 10 எண்றத்துக்குள்ள படம் வந்தாலும் இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

எனவே அண்மையில் வெளியான இருமுகன் படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு உருவானது.

மேலும் இதில் விக்ரம் ஏற்றிருந்த வேடங்கள் பாப்புலராக பேசப்பட்டது.

இந்நிலையில் படம் வெளியாகி நான்கு நாட்கள் ஆகியுள்ள நிலையில் படத்தின் வசூல் குறித்த விவரங்களை தயாரிப்பாளர் வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் மட்டும் ரூ 20.19 கோடி வசூல் செய்துள்ளது.

ஆந்திரா மற்றும்தெலுங்கானாவில் ரூ 13.5 கோடியும், கேரளாவில் ரூ 3.6 கோடி முறையே வசூல் செய்துள்ளது.

வெளிநாடுகளில் ரூ 14 கோடி என மொத்தம் ரூ 51.19 கோடி வரை வசூல் செய்துள்ளது.

கிழமை வாரியாக நான்கு நாட்கள் விவரம்..

வெளியான வியாழக்கிழமையில் ரூ. 12.66 கோடியும், வெள்ளிக்கிழமை ரூ. 10.12 கோடியும், சனிக்கிழமை ரூ. 13.94 கோடியும், ஞாயிற்றுக்கிழமை ரூ. 14.47 கோடியும் வசூலித்துள்ளது.

இதனால் விக்ரம் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.

நயன்தாராவுக்கு வில்லனாக மாறிய கௌதம்மேனன்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜய் ஞானமுத்து இயக்கும் இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வா, நயன்தாரா நடிக்கின்றனர்.

இதில் அதர்வாவுக்கு ஜோடி நயன்தாரா இல்லையென்பதால் மற்றொரு ஹீரோயினை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் வில்லன் வேடத்தில் கௌதம் மேனன் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்கு முன்பு, நிவின்பாலி நாயகனாக நடிக்கும் படத்தில் கௌதம் மேனன் நடிக்க ஒப்புக் கொண்டதும், பின்பு விலகியதும் தங்களுக்கு நினைவிருக்கலாம்.

ரசிகர்களின் அன்பை திரும்பி கொடுக்க வரும் கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக சிகிச்சை மேற்கொண்டார் கமல்ஹாசன்.

தற்போது ஓய்வில் இருக்கும் இவர், விரைவில் சபாஷ் நாயுடு படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார்.

இதுகுறித்து தன் ட்விட்டரில் கூறியுள்ளதாவது…

“நான் எழுந்து நடக்க தயாராகி விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

உங்களுடைய அன்பே என்னை இவ்வளவு சீக்கிரத்தில் குணமடைய செய்தது.

சபாஷ் நாயுடு மற்றும் வருங்கால படங்களின் முமூலம் என் அன்பை திருப்பி செலுத்துவேன்” என தெரிவித்துள்ளார்.

காவிரி பிரச்சினையில் ரஜினி வாய்ஸ் ஒலிக்குமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து, பல்வேறு கர்நாடக அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதற்கு சில கன்னட நடிகர் நடிகைகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தமிழக விவசாயிகளுக்கும் ஆதரவாக, ரஜினி குரல் கொடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும், மதத்திற்காகவும், ஜாதிக்காகவும், தான் நேசிக்கிற சினிமா நடிகனுக்காகவும், பொங்கி எழும் தமிழக மக்கள், காவிரி பிரச்சினையில் அமைதி காத்து வருவது மிகவும் வேதனையாக உள்ளதாக தமிழக விவசாயிகள் தெரிவித்துள்னர்.

அஜித்துக்கு அப்புறம் விக்ரம்; காஜலுக்கு கவலை வேண்டாம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான காஜல் அகர்வால், டாப் ஹீரோக்களுடன் நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் கவலை வேண்டாம் படம் அக்டோபர் 7ஆம் தேதி வெளியாகிறது.

தற்போது சிவா இயக்கும் படத்தில் அஜித்துடன் நடித்து வருகிறார்.

இதனை தொடர்ந்து சிரஞ்சீவியின் கைதி நம்பர் 150 படத்திலும் நடிக்கவிருக்கிறார்.

இந்நிலையில் முதன்முறையாக விக்ரமுடன் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தை சில்வர்லைன் பிலிம் பேக்டரி தயாரிக்க பிரம்மன் பட இயக்குனர் சாக்ரடீஸ் இயக்குகிறார்.

கருடா படத்தில் இணையவிருந்த இந்த ஜோடி தற்போது பெயரிடப்படாத இப்படத்தில் இணைந்து நடிப்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் சூர்யாவுடன் இணையும் கே.எஸ்.ரவிக்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த வாரம் எவரும் எதிர்பாராத வகையில் சூர்யா நடிக்கும் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.

இப்படத்தின் நாயகி தேடும் படலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அனிருத் இசையமைக்கவுள்ள இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில் கே.எஸ்.ரவிகுமார் மற்றும் சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் சூர்யாவின் பெற்றோர்களாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்களாம்.

ஆதவன் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் சூர்யாவுடன் கே.எஸ்.ரவிக்குமார் நடித்திருந்தார்.

தற்போது இவர்கள் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows