புள்ளக்குட்டி பெத்துகிட்டு கட்டிக்கலாமே…; இது எமிஜாக்சன் வெர்சன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெளிநாட்டில் பிறந்து அங்கேயே வளர்ந்து ‘மதராசப்பட்டனம்’ படத்தின் மூலம் இந்திய சினிமாவில் அறிமுகமானவர் எமி ஜாக்சன்.

அதன்பின் விக்ரமின் ‘ஐ’, தனுஷின் ‘தங்கமகன்’, விஜய்யின் ‘தெறி’, ரஜினியின் ‘2.0’, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்

இதனிடையில் இங்கிலாந்து தொழிலதிபர் ஜார்ஜ் என்பவரை காதலித்து வந்துள்ளார்

அவரைத் தான் திருமணம் செய்வேன் என அறிவித்திருந்தார்.

ஆனால் திருமணத்திற்கு முன்பே எமி கர்ப்பமாகி விட்டார். அதையும் அவரே வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டுக்குள்ளேயே குழந்தை பிறக்கும் என தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், வரும் 2020ல், தனக்கும்; காதலர் ஜார்ஜூக்கும் கிரிஸ் நாட்டில் திருமணம் நடக்கும் என எமி ஜாக்சன் அறிவித்துள்ளார்.

தன் ரசிகர் சாந்தனுவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தானே ஒரு நடிகராக இருந்தபோதும் விஜய்யின் தீவிர ரசிகர் என அடிக்கடி கூறி கொண்டிருப்பவர் சாந்தனு.

இவர் தற்போது விக்ரம் சுகுமாறன் இயக்கவுள்ள படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் என்பதை பார்த்தோம்.

கதிர், ஓவியா நடித்திருந்த `மதயானை கூட்டம்’ படத்தை இயக்கியவர் இந்த விக்ரம் சுகுமாறன்.

தற்போது 7 ஆண்டுகளுக்கு பிறகு தன் படத்திற்கு `இராவண கோட்டம்’ என்று தலைப்பிட்டு இயக்கவுள்ளார்.

இந்த படத்தை கண்ணன் ரவி தயாரிக்கிறார்.

இந்நிலையில் சாந்தனுவுக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் விஜய் குறுந்தகவல் ஒன்றை அனுப்பியுள்ளாராம்.

இதுகுறித்து சாந்தனு கூறியிருப்பதாவது,

வாழ்த்துக்கள் நண்பா, தலைப்பு செம என்று எனக்கு குறுந்தகவல் அனுப்பி விஜய் அண்ணா என்னை மெர்சலாக்கி விட்டார். உங்களது வாழ்த்துக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

பேட்ட படத்தை அடுத்து புது ஹீரோவுக்கு வில்லனாக விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் போது வில்லனாக நடிக்க பலர் மறுக்கும் நிலையில் ரஜினிக்கு வில்லனாக பேட்ட படத்தில் நடித்தார் விஜய்சேதுபதி.

தற்போது தெலுங்கில் சிரஞ்சீவி நடித்து வரும் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கிறார்.

ராம்சரண்-சமந்தா நடித்த ரங்கஸ்தலம் படத்திற்கு கதை எழுதிய புஜ்ஜி பாபு இயக்கும் ஒரு புதிய படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கவுள்ளார் நம் மக்கள் செல்வன்.

வைஷ்ணவ் தேவ் என்ற புதுமுக நடிகர் நாயகனாக நடிக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.

Makkal Selvan Vijay Sethupathi again acting as baddie

விஜய்யுடன் கூட்டணி வைத்து சூர்யாவுடன் மோதும் தமன்னா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல் பிரீத்சிங், சாய்பல்லவி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் என்ஜிகே.

இப்பட டீசர் மற்றும் பாடல்கள் இன்று மாலை வெளியாகவுள்ளது. இதற்கான விழா இன்று சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடக்கிறது.

யுவன் இசையமைத்துள்ள இப்படத்தை மே 31-ந்தேதி திரையிட உள்ளனர்.

சூர்யாவுக்கு தெலுங்கிலும் நல்ல மார்கெட் உள்ளதால் அங்கும் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிடுகிறார்கள்.

இதே நாளில் விஜய் இயக்கத்தில் பிரபு தேவா-தமன்னா நடித்துள்ள தேவி-2 படம் வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

பிரபுதேவா மற்றும் தமன்னாவுக்கும் தெலுங்கில் நல்ல மார்கெட் வேல்யூ இருப்பது இங்கே கவனிக்கத்தக்கது.

ஆக.. நல்ல போட்டியிருக்கும் என எதிர்பார்க்கலாம்.

Surya and Tamanna movies clash on 31st May 2019

சூர்யா படத்திற்காக தீ-யை பற்ற (பாட) வைத்த ஜிவி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘இறுதிச்சுற்று’ படத்தில் இடம்பெற்ற “ஏ சண்டக்காரா…’ பாடலை யாரும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. அப்படி ஒரு குரலால் நம்மை ஈர்த்தவர் பாடகி தீ (DHEE).

அப்பாடலை தொடர்ந்து, தனுஷின் ‘மாரி-2’ படத்தில் இடம் பெற்ற ‘ரவுடி பேபி…’ பாடலைப் பாடினார்.

இந்த பாடல் இன்றும் இணையத்தை கலக்கி வருகிறது. பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து செல்கிறது.

தற்போது இந்த பாடகி தீயை தன் இசையில் பாட வைத்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிக்கும் ‘சூரரை போற்று’ படத்தில் தான் அந்த பாடல் இடம் பெறுகிறது.

‘சூரரை போற்று’ படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் தான் இசையமைக்கிறார் என்பது தங்களுக்கு தெரியும் தானே…

Rowdy Baby sensation Dhee lends her voice for Soorarai Pottru

அவெஞ்சர்ஸ் பார்த்து கதறி அழுத ரசிகை ஆஸ்பத்திரியில் அனுமதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளான ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி உலகம் முழுக்க ரிலீஸ் ஆனது.

ஆண்டனி மற்றும் ஜோ ரூஸோ இணைந்து இயக்கியுள்ள அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தில் ராபர்ட் டவுனி, அயர்ன் மேனாகவும், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் தோராகவும், மார்க் ருஃபெல்லோ ஹல்காகவும், கிறிஸ் இவான்ஸ் கேப்டன் அமெரிக்காவாகவும், ஸ்கேர்லெட் ஜொஹான்சன் பிளாக் விடோவாகவும், ஜோஸ் பிரோலின் தேனோஸாகவும், பிரே லார்சன் கேப்டம் மார்வெலாகவும் நடித்துள்ளனர்.

மேலும் பல சூப்பர் ஹீரோக்கள் கதாபாத்திரங்களும் இப்படத்தில் உள்ளன. உலகம் முழுவதும் நல்ல வசூல் வேட்டை செய்து வருகிறது.

சீனாவில் மட்டும் 330 மில்லியன் டாலர் வசூலித்துள்ளதாம்.

இதில் ஐயர்ன் மேன் இறப்பதாக அப்படத்தில் ஒரு காட்சி இருக்கும்.

இதனால் சியோலி என்ற 21 வயது அயர்ன்மேன் ரசிகை ஒருவர் மிகவும் அழுதபடியே இருந்தாராம்.

அழுது அழுது அவருக்குள்ள என்ன ஆனதோ..? மருத்துவமனையில் சேர்க்கும் அளவுக்கு சென்றுள்ளார்.

அவருக்கு சுவாசப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Avengers endgame fan hospitalised as she cant control crying

More Articles
Follows