தனுஷ் இயக்கும் படத்தில் அனு இமானுவேல்; படத்தலைப்பு முடிவானது?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘வட சென்னை’ அக்டோபர் 18-ஆம் தேதி ரிலீசாகவுள்ளது.

இதனையடுத்து கவுதம் மேனன் இயக்கத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ மற்றும் பாலாஜி மோகன் இயக்கத்தில் `மாரி-2′ படங்களும் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது.

தான் இயக்கிய முதல் படமான ‘பவர் பாண்டி’ படத்தை தொடர்ந்து அடுத்த படத்தை தற்போது இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தில் தனுஷ் உடன் நாகார்ஜுனா, சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், அதிதி ராவ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு நான் ருத்ரன் என்று பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில்துப்பறிவாளன் பட நடிகை அனு இமானுவேல் இப்படத்தில் இணைந்திருக்கிறாராம்.

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த அனு தமிழ் சினிமா தவிர தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

சான் ரோல்டன் இசையமைக்க மெர்சல் படத்தை தயாரித்த ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Anu Emmanuel roped in to Dhanushs second directorial

*பப்பி* படத்தில் வருணுக்கு ஜோடியாக சம்யுக்தா ஹெக்டே

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

போகன், நெருப்புடா, மற்றும் நைட் ஷோ ஆகிய படங்களில் மறக்க முடியாத கதாபாத்திரங்களில் நடித்த வருண், தற்போது ஹீரோவாக அறிமுகமாகிறார்.

பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து ஹீரோவாக அவதாரம் எடுக்கவிருக்கும் வருண், சினிமாவுக்கு தேவையான, நாயகனாக புகழ் பெற அவசியமான அத்தனை கலைகளையும் நன்கு கற்றிருக்கிறார்.

‘காக்கா முட்டை’ மணிகண்டனின் இணை இயக்குனர் நட்டு தேவ் இயக்கும் ‘பப்பி’ படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார்.

கன்னட திரையுலகில் மிகவும் பிரபலமான கதாநாயகியான சம்யுக்தா ஹெக்டேவுடன் ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தில் ஒரு நாய் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சம்யுக்தா ஹெக்டே அவரது கன்னட படமான கிரிக் பார்ட்டி படத்தில் தனது துறுதுறு கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர்.

அந்த தருணத்திலிருந்தே அவரின் தமிழ் ரசிகர்கள், தமிழில் அவர் எப்போது அறிமுகமாவார் என்று காத்திருந்தனர்.

பல்வேறு கதைகளை கேட்ட சம்யுக்தா, இறுதியாக ‘பப்பி’ என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் கால் பதிக்க இருக்கிறார். இயக்குனர் நட்டுதேவ் காக்கா முட்டை இணை இயக்குனர் மட்டுமல்லாமல் ஒரு சில படங்களில் நடித்தும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனக்கு பிராணிகள் மீதான காதல் அதிகம், அதை வளர்க்கும் ஆர்வம் அதிகம். ‘பப்பி’ கதையை நான் கேட்டவுடனே தனிப்பட்ட முறையில் என்னை அந்த கதை ஈர்த்தது. மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையில் உள்ள உணர்ச்சி பிணைப்பை அந்த கதை பதிவு செய்வது.

ஒரு ஹீரோவாக நான் அறிமுகமாக நிறைய அனுபவங்களை சேகரித்தேன். நகைச்சுவை மற்றும் உணர்வுகள் கலந்த இந்த படம் அனைத்து தரப்பையும் சென்றடையும்.

எனக்காக படங்கள் ஓடுவதற்கு இன்னும் நிறைய காலம் உள்ளது. அதுவரை வெற்றிகரமான படங்களில் நான் பங்கு பெறுவதில் உறுதியாக இருக்கிறேன்” என்று தன்னம்பிக்கையோடு கூறுகிறார் வருண்.

Varun is paired opposite Samyuktha Hegde in Puppy

தளபதி விஜய்யுடன் நடிச்சிட்டேன்..; துள்ளிக் குதிக்கும் லல்லு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

`ரங்கூன்’ மற்றும் `8 தோட்டாக்கள்’ உள்ளிட்ட படங்களில் மிகவும் கவனிக்கத்தக்க நடிகராக காணப்பட்டவர் நடிகர் லல்லு.

இவர் தற்போது முருகதாஸ் இயக்கும் விஜய்யின் `சர்கார்’ படத்தில் ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறாராம்.

இதுபற்றி அவர் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது…

`சர்கார் படத்தில் அற்புதமான வாய்ப்பை கொடுத்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசுக்கு மிகப்பெரிய நன்றிகள். தளபதியுடன் திரையில் இணைந்து நடிப்பேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. எனது கனவு நிறைவேறிவிட்டது.’ என பதிவிட்டுள்ளார்.

சர்கார் பட இசை வெளியீட்டு விழா அக்டோபர் 2-ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

மேலும் சர்கார் கொண்டாட்டம் தொடர்பான அறிவிப்பு ஒன்று நாளை செப்டம்பர் 19ல் வெளியாகவுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து 2018 தீபாவளிக்கு வெளியிட உள்ளனர்.

Actor Lallu is so excited as he acted with Vijay in Sarkar

Lallu‏ @lalluTweets
A big thanks to @ARMurugadoss sir for giving me an amazing opportunity to work in sarkar. Never did I imagine I’d share screen space with my #Thalapathy It’s a dream come true moment for me. #Sarkar #Thalapathy62

பாரதி கண்ட புதுமைப் பெண்; 40வது ஆண்டில் ராதிகா பயணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஓரிரு தினங்களாகவே ட்விட்டரில் பிரபல நடிகர்கள் பலரும் பாரதி கண்ட புதுமைப் பெண் யார்? காத்திருங்கள்… என்ற ஒரு புதிய வீடியோவை பகிர்ந்து வந்தனர்.

அந்த வீடியோவில் பெண்கள் பலரும் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.

இறுதியாக ஒரு கட் அவுட் மட்டும் தெரிகிறது. அதில் இருக்கும் புதுமைப் பெண் யார்? என்பது தெரியாமல் இருந்து வந்தது.

‘1978ல் ஹவுஸ்புல், பாரதி கண்ட புதுமைப் பெண்ணை கொண்டாட தயாரா? காத்திருங்கள் நாளை வரை’ என்றும் சித்தார்த், ஜிவி. பிரகாஷ் உள்ளிட்டோர் பதிவிட்டு இருந்தனர்.

தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது.

அவர் நடிகை ராதிகா தான். அவர் தன் திரையுலக பயணத்தில் 40 ஆண்டுகளை கடந்துள்ளார். அதனை கொண்டாடவே இப்படி ஒரு வீடியோ வைரலாகி வந்துள்ளது.

அந்த வீடியோவை ராதிகாவின் ராடன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Actress Radhika celebrating her 40 years of Payanam in Cinema Industry

 

 

ரஜினியின் அம்மாவாக நடித்த சத்யபிரியாவுக்கு டாக்டர் பட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாட்ஷா படத்தில் ரஜினியின் அம்மாவாக நடித்தவர் நடிகை சத்யபிரியா.

இவருக்கு கலைத்துறை சாதனைக்காக டாக்டர் பட்டம் கிடைத்துள்ளது.

அது பற்றிய விவரம் வருமாறு…

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளி முதன்மை மாணவராய் வந்து, மருத்துவ துறையில் சேர தகுதியுடன் இருந்தார் சத்யபிரியா.

ஆனால் துரதிஷ்டவசமாக சத்யப்ரியா அந்த கனவை தூக்கி எறிய வேண்டியதாயிற்று. ஏனெனில் குடும்பச்சூழலில் அவருக்கு கிழே 3 தம்பிகளும் தங்கையும் இருந்தனர்.

அன்றும் சரி, இன்றும் சரி, பல கனவுகள் சில காரணங்களால் நனவாகாமலேயே போகின்றன. ஆனால் சில நேரங்களில் வாழ்க்கை நாம் கண்ட கனவை வேற வழியில் நனவாக்கும். தற்போது இங்கிலாந்தை சேர்ந்த AUGP (Academy of Universal Global Peace) சத்யப்ரியா அவர்களுக்கு முனைவர் பட்டம் அளித்து கெளரவித்துள்ளது.

தனக்கு அளிக்கப்பட்ட முனைவர் பட்டத்தை குறித்து நடிகை சத்யப்ரியா கூறுகையில், “நான் மருத்துவத்துறை தேர்ந்தெடுத்து மருத்துவராக வேண்டும் என்பதே என் அம்மாவின் விருப்பம்.

இப்போது நான் பெரும் மகிழ்ச்சியில் இந்த முனைவர் பட்டத்தை பெற்று கொள்கிறேன்!”

1972 முதல் நடிகையாகவும், திரைத்துறையில் ஓர் அங்கமாக, 45 ஆண்டுகளாய் 300 படங்கள் நடித்துள்ள சத்யப்ரியா கூறுவதாவது…

”இந்த முனைவர் பட்டத்தால் கெளரவிக்கப்பட்ட நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். திரைத்துறையில் இதுவரை நான் என் குடும்பத்திற்க்காக உழைத்தேன்.

இப்போது என் வாரிசுகள் எல்லோரும் நல்ல நிலையில் உள்ளதால், சமுதாயத்திற்கு என்னால் இயன்றதை செய்ய விழைகிறேன். இந்த கெளரவ பட்டம் என்னை சமுதாயத்தின் மேம்படுத்தலை நோக்கி கொண்டு செல்கிறது.”

பன்முக திறன் கொண்ட நடிகை சத்யப்ரியா, ஒப்பற்ற தன் திறமையால் பாராட்டுக்குரிய பல கதாபாத்திரங்களின் வழி தென்னிந்திய திரைப்படங்களில் பயணித்ததோடு நில்லாமல், சீரியல்கள் வழி தமிழ் மக்களின் உள்ளங்களிலும் குடியேறியிருக்கிறார்.

அவரது மகன், MS பட்டம் பெற்று அமெரிக்காவில் சாப்ட்வேர் நிறுவனமொன்றில் பணிப்புரிந்து கொண்டிருக்கிறார்.

இங்கிலாந்தில் வாழும் கட்டிட கலைஞரான அவரது மகள், இந்திய நிறுவனமொன்றிற்கு ஆன்-லைன் மூலம் பணிப்புரிந்து கொண்டிருக்கிறார். இருவரும் தங்கள் குடும்பங்களுடன் நன்றாக வாழ்ந்து வருகின்றனர்.

இங்கிலாந்து AUGP – Academy of Universal Global Peace என்ற அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைவரான மது கிருஷ்ணன், உலகெங்கிலும் உள்ள திறமைசாலிகளை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு முனைவர் பட்டமளித்து கெளரவித்து வருகிறார்.

கலைத்துறையில் நடிகை சத்யப்ரியாவின் பங்களிப்பை பாராட்டும் விதமாக அவருக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

இன, மொழி, சாதிய பாகுபாடுகளை களைந்து, உலக அமைதி நிலைநிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது AUGP நிறுவனம்.

Baasha fame Actress Sathyapriya felicitated with Doctorate by AUGP

குருதி ஆட்டம் படத்தில் அதர்வாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சின்னத்திரையில் மிகவும் கொண்டாடப்பட்ட நடிகை பிரியா பவானி சங்கர். சினிமாவில் அறிமுகமான பிறகு நல்ல நடிகை என்ற பெயரை பெற்றார்.

அத்தோடு பல நல்ல பட வாய்ப்புகளும் அவரை தேடி வருகின்றன. அடுத்து அதர்வா முரளி நடிக்க, ஸ்ரீகணேஷ் இயக்கும் குருதி ஆட்டம் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம செய்யப்பட்டிருக்கிறார்.

பல நடிகைகளை படத்தின் வியாபாரத்திற்காக மார்க்கெட் அடிப்படையில் நடிக்க ஒப்பந்தம் செய்வார்கள்.

ஆனால் ஒரு சிலர் தான் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுக்கும் நல்ல நடிகையை, அறிமுக நடிகையாக இருந்தாலும் ஒப்பந்தம் செய்ய முன்வருவார்கள். அந்த வகையில் இதுவரை நடித்த அனைத்து படங்களிலும் தன்னை நிரூபித்தவர் பிரியா பவானி சங்கர்.

“இது முற்றிலும் உண்மை, கதை சொல்லும் போது நானே அதை கவனித்தேன். பொதுவாக, வளர்ந்து வரும் காலகட்டத்தில் நடிகைகள் முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு வந்தால் எதையும் யோசிக்காமல் உடனே ஒப்புக் கொள்வார்கள்.

ஆனால் பிரியா அதில் விதிவிலக்கானவர், “என்றார் இயக்குனர் ஸ்ரீகணேஷ்.

மேலும் கதை சொல்ல அவரை சந்தித்த போது, அந்த கதாபாத்திரம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தாலும், அவரது கதாபாத்திரத்துக்கு இன்னும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுக்கலாம் என அவருடைய கருத்தை வெளிப்படையாக சொன்னார். உண்மையில், படத்தின் கதை மற்றும் கதாபாத்திரத்தின் மீது அவர் காட்டிய ஈடுபாடு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

உடனடியாக நானும் அவரது கதாபாத்திரத்தை கொஞ்சம் மாற்றியமைத்தேன், அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார், படத்தில் நடிக்கவும் சம்மதித்தார்” என்றார் ஸ்ரீகணேஷ்.

மதுரை பின்னணியில் அமைந்திருக்கும் இந்த கேங்க்ஸ்டர் படத்தில் பிரியா பவானி சங்கர் ஆசிரியராக நடிக்கிறார். ராதாராவி, ராதிகா சரத்குமார் போன்ற முக்கிய நடிகர்கள் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்குகிறது.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ‘குருதி ஆட்டம்’ ஏற்கனவே தமிழ் சினிமாவில் பேசப்படும் படமாக மாறியிருக்கிறது.

ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மென்ட் சார்பில் முருகானந்தம் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐ பி கார்த்திகேயன் ஆகியோர் இந்த குருதி ஆட்டம் படத்தை தயாரிக்கின்றனர்.

Priya Bhavani Shankar Gets Onboard For Atharvaas Kuruthi Aattam

More Articles
Follows