தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரூ. 350 கோடியில் இப்படத்தை தயாரித்து வருகிறது லைக்கா.
இப்படத்தின் சில காட்சிகளை பறவைகளை வைத்து அனிமேட்ரானிக்ஸ் முறையில் படமாக்கி வருகிறார் ஷங்கர்.
ஹாலிவுட் நிறுவனமான ‘Legacy Effects’ என்ற நிறுவனம் இந்த பணிகளை செய்து வருகிறது.
சில மாதங்களுக்கு முன் வெளியான ஒரு புகைப்படத்தில் அக்ஷய்குமாரின் முகம் கூட ஒரு பறவையைப் போல் இருந்தது.
தற்போது, ரியாஸ்கானும் பறவை போல் மாறி ரஜினியுடன் சண்டையிட்டு வருகிறாராம்.
இப்படத்திற்காக காகங்களின் குரல்களை பதிவு செய்வது கஷ்டமாக இருக்கிறது என ரசூல் பூக்குட்டி தெரிவித்திருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.
மேலும், திருக்கழுக்குன்றத்திலும் அரிதான பறவைகளை வைத்து சில காட்சிகளை படமாக்கியிருக்கிறார் ஷங்கர்.
நவம்பர் 20ஆம் தேதி ‘2.0’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை மும்பையில் வெளியிட திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
