முருகதாஸின் ஒன்லைன் ஸ்டோரிக்கு ஓகே சொன்ன ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் இரு படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

ஷங்கர் இயக்கியுள்ள 2.ஓ படம் அடுத்த 2018 ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

ரஞ்சித் இயக்கி வரும் காலா படம் 2018 ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் ரஜினியை சந்தித்து இயக்குனர் ஏஆர். முருகதாஸ் ஒரு கதையின் ஒன்லைன் ஸ்டோரியை சொன்னாராம்.

அதற்கு ஓகே சொன்ன ரஜினி முழு ஸ்கிரிப்டையும் தயார் செய்து கொண்டு வரச் சொன்னாதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எனவே சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் விஜய்யின் 62 படத்தை முடித்துவிட்டு ரஜினி படத்தை முருகதாஸ் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

லிங்குசாமி-விஷால் கூட்டணியின் சண்டகோழி2 தொடங்கியது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்து 2005ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் சண்டகோழி.

தற்போது 12 ஆண்டுகளுக்கு பிறகு இதன் 2ஆம் பாகத்தின் படப்பிடிப்பு இன்று பாடல்காட்சியுடன் ஆரம்பமானது.

இப்படத்துக்காக சென்னை பின்னி மில்லில் மிகப்பெரிய அளவில் மதுரை திருவிழா செட் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ் தெலுங்கு இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தில்,விஷால், கீர்த்திசுரேஷ் ஜோடியாக நடிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஒளிப்பதிவை சக்தி கவனிக்கிறார்.

விஷால் தயாரித்து நடிக்கும் இப்படம் அவரின் 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Vishal Keerthy Suresh starring Sandakozhi2 shooting starts today

நயன்தாரா-ஜோதிகா வரிசையில் இணையும் வரலட்சுமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அண்மை காலமாக நயன்தாரா, ஜோதிகா ஆகியோர் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் கதைகளில் நடித்து வருகின்றனர்.

தற்போது இவர்களின் வரிசையில் வரலட்சுமி இணைகிறார்.

இயக்குனர் மிஷ்கினின் உதவியாளர் பிரியதர்ஷினி இயக்கும் புதிய படத்தில் வரலட்சுமி நடிக்கிறார்.

இது பெண்ணை மையப்படுத்தி எடுக்கப்படும் ஆக்சன் த்ரில்லர் கதை என கூறப்படுகிறது.

இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வருகிற செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வெளியிட உள்ளனர்.

Mysskins associate Priyadhaarshini going to direct Varalaxmi

ரஜினியுடன் நாய்; விஜய்யுடன் காளை; வைரலாகும் புதிய படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ரஞ்சித் இயக்கும் காலா படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் நிறைய நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள் என்பதை முன்பே பார்த்தோம்.

தற்போது அப்படத்தில் இடம்பெற்றுள்ள ரஜினியின் குடும்ப போட்டோ ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் ரஜினியுடன் ஈஸ்வரிராவ் மற்றும் அவரின் மகன், மகள், மருமகன், மருமகள், பேரன், பேத்திகளுடன் ஒரு நாய் ஒன்றும் உள்ளது.

இந்நிலையில் நேற்று விஜய்யின் மெர்சல் பட டீசர் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் விஜய் உடன் நித்யாமேனன் அவர்களது குழந்தை மற்றும் ஒரு ஜல்லிக்கட்டு காளை ஒன்றும் உள்ளது.

இந்தப் படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Kaala Rajini Family and Mersal Vijay family photos goes viral

ஷேக்ஸ்பியரின் கிங் லியர் கேரக்டரில் ரஜினி… – விஷால் பரத்வாஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலக இலக்கிய மேதை ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற மேக்பத், ஒதெல்லோ, ஹேம்லெட் ஆகிய அழியாக் காவிய படைப்புகளை மக்பூல், ஓம்காரா, ஹைதர் உள்ளிட்ட படங்களை எடுத்தவர் இயக்குநர் விஷால் பரத்வாஜ்.

இவர் ஷேக்ஸ்பியரின் இன்னொரு படைப்பான கிங் லியரை படமாக்கினால் அந்த கிங் லியர் கேரக்டருக்கு ரஜினியைத்தான் தேர்ந்தெடுப்பேன் என கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது…

“ஹைதர் எடுக்கும் முன்பாக கிங் லியர் படத்துக்காக திரைக்கதை அமைக்கும் பணியை மேற்கொண்ட்டேன்.

அப்போது கிங் லியர் கேரக்டருக்கு என் மனக்கண் முன் வந்து நின்றவர் ரஜினிதான்.

கிங் லியரை படமாக்க முடிவெடுத்தால் என் பர்ஸ்ட் சாய்ஸ் ரஜினிதான்.” என பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு திரைப்பட விழாவில் தன் கருத்தை தெரிவித்தார் விஷால் பரத்வாஜ்.

மெர்சல் உடன் இணைய ஸ்கெட்ச் போடும் விக்ரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் அட்லி உருவாக்கியுள்ள மெர்சல் படம் இந்தாண்டு 2017 தீபாவளிக்கு வெளியாகிறது.

ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தன் 100வது படைப்பாக உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் மெர்சல் படம் வெளியாகும் தியேட்டர்களில் ஸ்கெட்ச் படத்தின் டீசரை வெளியிட உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஏற்கெனவே டிக் டிக் டிக் படத்தின் டீசரும் மெர்சல் படத்துடன் திரையிடப்படுவது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

More Articles
Follows