சிறந்த வில்லன் பிரகாஷ்ராஜ்; நான் இல்லையா.? – வெங்கடேஷ் வருத்தம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2009 முதல் 2014 வரை ஆண்டுகளுக்காக விருதை தமிழக அரசு நேற்று அறிவித்தது.

இதில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது என்றும், திறமையான கலைஞர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது.

இயக்குனர் சுசீந்திரனும், தன் படத்திற்கு ஒரு விருது கூட கிடைக்கவில்லை என தன் ஆதங்கத்தை ஒரு கடிதமாக வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் பிரபல இயக்குனரும் நடிகருமான வெங்கடேஷ் அவர்களும் தன் வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
2009-ல் சிறந்த வில்லன் ‘வில்லு’ படத்தில் நடித்த பிரகாஷ்ராஜ்க்கு கிடைத்துள்ளது.

அப்படியென்றால், அங்காடித் தெருவில் நான் ஏற்ற கதாபாத்திரம் வில்லன் இல்லை குணச்சித்திரம் என்பது தெளிவாகியது எனக்கு..! உங்களுக்கு நண்பர்களே…? என்று தன் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் ‘அங்காடித் தெரு’ படத்தில் நடித்த எனக்கு சிறந்த குணசித்திர விருதாவது கொடுத்திருக்கனும்.

அதே படத்தில் நடித்த மகேஷுக்கு சிறந்த அறிமுக நடிகர் விருதாவது கிடைத்திருக்கனும்” என இது தொடர்பான ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கமல்; அவனெல்லாம் ஒரு ஆளா…? அமைச்சர் அன்பழகன் ஆவேசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.

எனவே இது தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, ‘தமிழ்நாட்டில் எல்லா துறைகளிலும் ஊழலும் லஞ்சமும் அதிகளவில் உள்ளது எனக் குறிப்பிட்டார்.

கமலின் இந்தக் கருத்துக்கு, தமிழக அமைச்சர் ஜெயக்குமார்… ”பிக்பாஸை பிரபலப்படுத்த தமிழக அரசின்மீது சேற்றை வாரி வீசுகிறார் கமல்’ என தெரிவித்தார்.

இந்நிலையில், மற்றொரு அமைச்சரான அன்பழகன் இதுகுறித்து கூறியதாவது…

”கமலுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவன் ஓர் ஆளே கிடையாது” என்று கமலை ஒருமையில் விமர்சித்தார்.

இதற்கு, கமல் ரசிகர்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

TamilNadu Minister Anbazhagan angry speech about Kamalhassan

தைரியமாக நடித்தார்; சிறந்த நடிகையானார்… ஐஸ்வர்யா ராஜேஷ் ஹாப்பி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் தயாரித்து மணிகண்டன் இயக்கிய காக்கா முட்டை (2014) படத்தில் 2 குழந்தைகளுக்கு தாயாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

பொதுவாக இளவயது நடிகைகள் இதுபோல நடிக்க மாட்டார்கள். அப்போதே அவர் துணிச்சலான முன்வந்து அருமையாக அதில் நடித்திருந்தார்.

இந்நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள சினிமா விருதில் 2014-ஆம் ஆண்டிற்கான நடிகைக்கான விருதுக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து ஐஸ்வர்யா கூறியதாவது… ” காக்கா முட்டை என் வாழ்க்கையில் மறக்க முடியாத படம். அதில் நடிக்கும்போதே அந்த கேரக்டர் மேல் எனக்கு அதிக நம்பிக்கை இருந்தது.

மற்ற ஹீரோயின்கள் அதில் நடிக்க தயக்கம் காட்டவே, என்னால் முடியும் என தைரியமாக நடித்தேன்.

இப்போது தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருதை அறிவித்துள்ளது.

எனவே இயக்குனர், படக்குழுவினர் என் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி” என கூறினார்.

Aishwarya Rajesh won TN State award Best Actress award for Kaaka Muttai movie

நச்சுன்னு நாலு அவார்ட்டு… விமலை வியக்க வைத்த தமிழக அரசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விமல் நடித்த நான்கு படங்கள் தமிழக அரசால் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

அதில் 2011ஆம் வருடத்திற்கான சிறந்த நடிகர் விருது பெற்றுள்ள விமலும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுபற்றி அவர் கூறியுள்ளதாவது..

“2009ஆம் வருடத்தின் சிறந்த படமாக ‘பசங்க’ படமும், 2010ஆம் வருடத்தின் இரண்டாவது சிறந்த படமாக ‘களவாணி’ படமும் 2011ஆம் வருடத்தின் சிறந்த படமாக ‘வாகை சூடவா’ படமும் சிறந்த படங்களுக்கான விருது பெற்றிருக்கின்றன.

மேலும் 2014ஆம் வருடத்திற்கான சிறந்த இயக்குனருக்கான விருது ‘மஞ்சப்பை’ பட இயக்குனர் ராகவனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

எனது திரையுலக வாழ்க்கையில் மிக முக்கியமான இந்த நான்கு படங்களிலும் நானும் ஒரு அங்கமாக இருந்திருக்கிறேன் என்பதை நினைத்து மகிழ்ச்சியுடன் பெருமையும் அடைகிறேன்.

மேலும் ‘வாகை சூடவா’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருது எனக்கு வழங்கப்பட்டுள்ளது எனது மகிழ்ச்சியையும் எனது பொறுப்பையும் இன்னும் அதிகரித்துள்ளது.

இன்னும் நல்ல படைப்புகளில் கவனம் செலுத்தவேண்டும் என்கிற ஊக்கத்தை இந்த விருது எனக்கு ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முழு காரணமான எனது இயக்குனர்களான பாண்டிராஜ், சற்குணம் மற்றும் ராகவன் ஆகியோருக்கு எனது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். மற்றும் விருதுபெற்ற சக கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்

எனக்கு ஆரம்பகாலம் தொட்டு ஆதரவு அளித்துவரும் பத்திரிக்கை, ஊடகங்களுக்கும் எனது இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கும் இந்த நேரத்தில் என் நன்றியை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

என்று தன் நன்றி அறிக்கையில் தெரிவித்துள்ளார் விமல்.

Actor Vimals 4 movies won TN State Film awards

பிக்பாஸ் கமல் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிகழ்ச்சி தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது.

மேலும் போலீசில் புகாரும் அளிக்கப்பட்டு இருந்தது.

இதனிடையில் கமல், எதிர்க்கும் யாருக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மேலும் எதிர்ப்புகள் வலுத்து வருவதால் தற்போது ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல் ஆபிஸுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சிறந்த வில்லன்-சிறந்த நடிகர்… இரண்டு விருதுகளை வென்றார் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2009 முதல் 2014 வரை ஆண்டுகளுக்கான தமிழக அரசு திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது.

இதில் சிறந்த வில்லன் மற்றும் சிறந்த நடிகர் (சிறப்பு விருது) என இரண்டையும் பெற்றுள்ளார் நடிகர் விஜய்சேதுபதி.

2012ஆம் ஆண்டிற்கான சிறந்த வில்லன் விருது சுந்தர பாண்டியன் படத்தில் நடித்தற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பண்ணையாரும் பத்மினியும் மற்றும் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ஆகிய இருபடங்களும் சிறந்த நடிகர் சிறப்பு விருதை பெறவுள்ளார்.

இவை இரண்டும் 2013ஆம் ஆண்டிற்கான விருது என்பது குறிப்பிடத்தக்கது.

VijaySethupathi won TN State award for Best Villain and Best Actor Special Award

More Articles
Follows