அனுஷ்கா-நயன்தாரா-தமன்னா; இவர்களில் யார் சீதை.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் ரூ. 500 கோடியில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகவுள்ள படம் ராமாயணம்.

இப்படத்தை அல்லு அரவிந்த், மது மந்தீனா மற்றும் நமீத் மல்கோத்ரா ஆகிய 3 தயாரிப்பாளர்கள் தயாரிக்க உள்ளனர்.

3டி தொழில்நுட்பத்தில் 3 பாகங்களாக தயாராகவுள்ள இதில் அல்லு அர்ஜீன் நாயகனாக நடிப்பார் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சீதை கேரக்டருக்கு அனுஷ்கா, தமன்னா, நயன்தாரா ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாம்.

இவர்களில் ஒருவர் ஒப்பந்தம் ஆனவுடன் இதுகுறித்து அறிவிப்புகள் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

வருகிற அக்டோபர் மாதம் முதல் இதன் சூட்டிங் துவங்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Among Anushka Nayanthara Tamannah who will act as Sita in Ramayana 3d movie

ரஜினி-விஜய்யின் சென்னை ரெக்கார்டுகளை முறியடித்த பாகுபலி2

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் முக்கிய பகுதியாக சென்னை விளங்கி வருகிறது.

சென்னையில் இதுவரை எந்த படம் அதிக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது என்ற தகவல்கள் கிடைத்துள்ளன.

சென்னையில் முதன்முறையாக ரூ 10 கோடியை தாண்டிய படமாக ரஜினியின் எந்திரன் படம் அமைந்தது.

பின்னர் மீண்டும் ரஜினியின் கபாலி படமே ரூ 12 கோடி வசூலை அள்ளி முதல் இடத்தில் இருந்தது.

இந்நிலையில் தற்போது அனைத்து சாதனைகளையும் முறியடித்து பாகுபலி 2 ரூ. 15 கோடியை வசூலித்து முதல் இடத்தை பிடித்துள்ளது.

இதனிடையில் விஜய் நடித்த தெறி ரூ. 11 கோடியை வசூலித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

பாகுபலி2 படம் உலகளவில் இதுவரை ரூ. 1600 கோடிக்கும் மேல் வசூலித்து, 2000 கோடியை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Baahubali 2 broke records of Kabali and Theri movie in Chennai Box Office

விஜய்-சாய் பல்லவி இணையும் படத்தின் ஹீரோ இவர்தான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜெயம் ரவி நடித்துள்ள வனமகன் படத்தை இயக்கியுள்ளார் விஜய்.

இதனையடுத்து ‘கரு’ என்ற படத்தை இயக்கவிருக்கிறார்.

லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

இதில் ‘பிரேமம்’ பட புகழ் மலர் டீச்சரான சாய்பல்லவி நாயகியாக நடிக்கிறார் என்பதை பார்த்தோம்.

இந்நிலையில் இப்படத்தின் நாயகனாக நடிக்க நாகசெளரியா ஒப்பந்தமாகி இருக்கிறாராம்.

தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகவுள்ள இப்படத்தின் மற்ற கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

Naga Shourya romance with Sai Pallavi for Karu movie directed by Vijay

தன் பிறந்த நாளில் அரசியல் கட்சியை அறிவிக்கும் ரஜினி..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தன் அரசியல் பிரவேசத்தை உறுதி செய்யும் வகையில் ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பரபரப்பாக பேசியிருந்தார் ரஜினிகாந்த்,

அவரது இந்த பேச்சுக்கு இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து, ஆதரவும் எதிர்ப்பும் உருவாகியுள்ளது.

ரஜினியின் நெருங்கிய நண்பரான ராஜ்பகதூர் அவர்கள், ரஜினி அரசியலுக்கு நிச்சயம் வருவார். அவரை வாழ வைத்த தமிழ்நாட்டுக்கு நன்மை செய்வார். என்ற தனியார் டிவி நிகழ்ச்சியில் கூயிருந்தார்.

இந்நிலையில் ரஜினி தன் கட்சியை விரைவில் அறிவிக்க்க்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அவரது பிறந்த நாளான டிசம்பர் 12ஆம் தேதி (2017) அன்று தன் கட்சி பெயர் மற்றும் கொடி அனைத்தையும் அறிவிப்பார் என சொல்லப்படுகிறது.

Rajinikanth may announce his New Political Party Name and Flag on his Birthday

‘கோச்சடையான் ஒரு பாகுபலியாக இருந்திருக்கும்..’ – ஏஆர் ரஹ்மான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இசைப்புயல் ஏஆர். ரஹ்மான் தற்போது தனது சங்கமித்ரா படத்திற்க்காக கேன்ஸ் உலகத் திரைப்படவிழாவில் கலந்து கொண்டு வருகிறார்.

இந்நிலையில் இவர் பாகுபலி படம் பற்றி தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

பாகுபலி படம் பார்த்தேன். இந்த படம் நிச்சயம் ரூ 2000 கோடி வசூலை அள்ளும்.

பாகுபலிக்கு முன்பே பல இயக்குனர்கள் இப்படியான முயற்சிகளை செய்துள்ளனர்.

கோச்சடையான் படத்தில் அனிமேஷன் பணிகள் சரியாக இல்லை. இருந்திருந்தால் நிச்சயம் அது ஒரு பாகுபலியாக இருந்திருக்கும்.

ஆனால் பாகுபலி கொஞ்சம் லக்கி என்றுதான் சொல்லவேண்டும்.

படத்தின் கலைஞர்கள் முதல் அனைத்தும் சரியாக அமைந்ததால் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது” என ஏஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

Kochadaiyaan will be better than Baahubali 2 if CG works is best says AR Rahman

ஆர்கே. சுரேஷின் ‘தல கீதம்’ பாடலை வெளியிடும் பிரபலம் யார்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக ரசிகர்களை தாண்டியும், அஜித்துக்கு திரையுலகிலேயே பல நட்சத்திர ரசிகர்கள் உள்ளனர்.

இது தொடர்பாக பல பேட்டிகளை பார்த்திருக்கிறோம்.

இந்நிலையில் பிரபல தயாரிப்பாளரும் வில்லனுமான ஆர். கே. சுரேஷ் பில்லா பாண்டி படத்தில் அஜித் ரசிகர் மன்றத் தலைவராக நடித்து வருகிறார்.

இவருடன் வித்யா பிரதீப், இந்துஜா, யோகிபாபு உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.

இதன் போஸ்டர் டிசைன் தற்போது வெளியாகி இருந்தாலும் அதில் டைரக்டர் பெயர் இடம் பெறவில்லை.

அடுத்த வாரம் இப்படத்தில் உள்ள தல கீதம் மற்றும் பர்ஸ்ட் லுக்கை பிரபலம் ஒருவர் வெளியிட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Who is going to launch Thala Geetham from Billa Pandi movie

More Articles
Follows