‘மாவீரன் கிட்டு’ உடன் மற்றொரு விருந்து தரும் பார்த்திபன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழர்கள் பெருமைப் படும் வகையில் சுசீந்திரன் இயக்கியுள்ள ‘மாவீரன் கிட்டு’ படம் இன்று ரிலீஸ் ஆகிறது.

இதில் விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா, ஹரீஷ் உத்தமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இமான் இசையமைப்பில் உருவான இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்துள்ளது.

இப்படத்தில் முக்கிய கேரக்டரில் பார்த்திபன் நடித்துள்ளார்.

இந்நிலையில் அவர் இயக்கியுள்ள ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ பட திரை முன்னோட்டத்தை ‘மாவீரன் கிட்டு’ திரையிடப்படும் தியேட்டர்களில் காட்டப் போகிறாராம்.

தான் நடித்த படத்துடன் தான் இயக்கிய பட முன்னோட்டத்தையும் பார்த்திபன் தருவது அவருடைய ஒரு வித்தியாசமான முயற்சிதானே.

Along with maaveeran kittu parthibans extra treat

ரஜினி-தனுஷ்-ரஞ்சித் கூட்டணியின் படத்தகவல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கபாலி படத்தை தொடர்ந்து மீண்டும் ரஜினி நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார் ரஞ்சித்.

தற்போது சங்கரின் 2.ஓ படத்தை முடித்துவிட்டு ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிப்பார் ரஜினி.

இந்நிலையில் இப்படத்தின் ஸ்கிரிப்ட் முழுமையாக ரெடியாகிவிட்டதால் விரைவில் ப்ரீ புரொடக்ஷன் பணிகளை தொடங்கவிருக்கிறராம் ரஞ்சித்.

இதனிடையில் மும்பை சென்று லொக்கேஷன் பகுதிகளை பார்வையிட்டு வந்தார்.

இதன் சூட்டிங் பிப்ரவரி இறுதி அல்லது மார்ச்சில் தொடங்கப்படும் என சொல்லப்படுகிறது.

விஜய்-அட்லி படத்திற்கு இத்தனை கோடி பட்ஜெட்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெறி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் அட்லி இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய்.

இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம்.

இன்னும் இரண்டு மாதங்களில் இதன் சூட்டிங் தொடங்கவுள்ளது.

தற்போது இப்படத்தில் பணிபுரிய உள்ள கலைஞர்களை தேர்நதெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இதன் மொத்த பட்ஜெட் ரூ. 100 கோடி என்று தகவல்கள் வந்துள்ளன.

ஒரே நேரத்தில் ‘கும்கி-கும்கி-2’ஐ உருவாக்கும் பிரபு சாலமன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் தமிழில் அறிமுகமான படம் கும்கி.

கும்கி யானையை கதைக்களமாக கொண்ட இப்படம் மாபெரும் வெற்றிப் பெற்றது.

இந்நிலையில் இப்படத்தினை இந்தியில் ரீமேக் செய்யவிருக்கிறார் பிரபு சாலமன்.

இத்துடன் இப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் தமிழில் இயக்கவிருக்கிறார்.

இவை இரண்டையும் ஒரே நேரத்தில் படமாக்கவிருக்கிறாராம்.

இதற்காக விரைவில் வெளிநாடு செல்லவிருக்கிறது படக்குழு.

Paarka Thonuthe Audio Launch Photos

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘நடிக்க பிடிக்காத தனுஷ்; ஹீரோ ஆசையில் செல்வராகவன்’ – கஸ்தூரிராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வாசவி பிலிம்ஸ் சார்பில் வி.கே.மாதவன் தயாரித்துள்ள படம் ‘பார்க்க தோணுதே’.

புதுமுகங்கள் நடிப்பில், மணிஸ் இசையில், ஜி.ரமேஷ் ஒளிப்பதிவில் இப்படத்தை ஜெய். செந்தில்குமார் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா ஆர்.கே.வி ஸ்டுடியோவில் நடைபெற்றது.

விழாவில் கலந்து கொண்டு இயக்குநர் கஸ்துரிராஜா பேசினார். அவர் பேசும் போது பல அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

“இந்த மாதிரி சிறியபடங்கள் ஒடினால்தான் சினிமா நன்றாக இருக்கும்.மேலும் 10 படங்கள் வரும். இதுதான் சினிமா.

எல்லாருமே ஒரு காலத்தில் புதுமுகங்கள்தான் . ஸ்ரீகாந்த்தேவா இங்கே இருக்கிறார்.ஒருகாலத்தில் தேவாவின் இசையில் 5 படங்கள் இயக்கினேன்.ஐந்தும் வெற்றி.

அவர் மகன் இந்த ஸ்ரீகாந்த்தேவா அப்போது கீபோர்டு பிளேயர். சாப்பாடு கூட அவரது ஒலிப்பதிவுக் கூடத்தில்தான். அவர்கள் வீட்டுச் சாப்பாடுதான் சாப்பிடுவேன்.

அவ்வளவு சுதந்திரம் இருக்கும். இளையராஜாவிடம் சுதந்திரமாக இருக்க முடிமா? பேச முடியுமா? மூச்சுக் கூட சத்தமாக விடமுடியாது. அவரை வைத்து பெரிய ஆளானவர்கள் பல பேர்.

நானும் அவரால் வளர்ந்தவன். அவர் என்னிடம் நீ ஆசீர்வதிக்கப் பட்டவன் என்பார். இப்போது காலம் மாறிவிட்டது.

என் மூத்தமகன் செல்வராகவன் என்னை ஏன் ஹீரோவாக்கவில்லை என்கிறான். தனுஷ் என்னை ஏன் நடிக்க விட்டே என்கிறான்.

இங்கு வந்துள்ள நட்டியிடம் நான் ஒரு கதை சொன்னேன். நடிக்க மறுத்துவிட்டார். இது பெரிய கதாநாயகர்கள் செய்யவேண்டிய கதை எனக்குச் சரிப்பட்டு வராது என்றார். அவர் எடுத்த முடிவு சரியானது.

சிலவற்றைச் சொல்ல சில முகம் தேவை. அதுதான் முகப் பொருத்தம் என்பது .அவர் ‘சதுரங்க வேட்டை’யில் நன்றாக நடித்திருப்பார்.அதுதான் அவரது முகப் பொருத்தம்.

நான் முதல்படம் இயக்கியபோது ராஜ்கிரண் பெரிய கதாநாயகர்களிடம் அழைத்துச் சென்றார் . விஜயகாந்திடம் கதை சொன்னேன். மறுத்துவிட்டார்.

அது ‘இரவுப்பூக்கள்’ சமயம் சத்யராஜிடம் கதை சொன்னேன்.மறுத்துவிட்டார். அவர்களுக்கு என்மேல் நம்பிக்கை வரவில்லை.

சத்யராஜ் இதெல்லாம் ஒரு கதையா என்றார். சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா நான் இப்போதுதான் முழுக்கை சட்டையிலிருந்து அரைக்கைச் சட்டைக்கு வந்திருக்கிறேன் என்றார்.

பாரதிராஜா எடுக்கிறாரே என்றேன் அவர் சொன்னால் ஏற்றுக் கொள்வார்கள். நீங்கள் சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா? என்றார்.நான் புதுமுகம் என்பதால் யாரும் நம்பவில்லை.

இப்படிப் பலவற்றை கடந்துதான் முதல் படம் எடுத்தேன். எல்லா அறிமுகங்களும் இப்படிப்படட அவமானங்களும் வலிகளும் போராட்டங்களும் கடந்துதான் வந்திருக்கிறார்கள்.

சூப்பர்ஸ்டார் ரஜினியும் கூட இப்படிப்பட்ட அவமானங்களைக் கடந்துதான் உயர்ந்து வந்திருக்கிறார்.

அப்போது எனக்குள் ஈகோ எப்படி அவர்கள் அப்படிச் சொல்லலாம் என்று. ஆனால் அவர்கள் நடிக்காததால் முடிவு நல்லதாகவே முடிந்தது.

இயக்குநர் ஒருவர் கற்பனையில் ஏதேதோ நினைக்கலாம். மற்றவர் வேறு மாதிரி உணரலாம். அதுவே திசையை மாற்றி விடும்.

‘என் ராசாவின் மனசிலே’ வுக்கு நான் நினைத்த கதையில் ‘பெண் மனசு ஆழமுன்னு ‘ என்கிற அந்தப் பாட்டெல்லாம் கிடையாது. காட்சியிலும் இல்லை.

ஆனால் இளையராஜா அந்தப் பாடலைப் போட்டார். காட்சிகள் இல்லை. எடுக்கவில்லை என்றேன். போய் எடு என்றார்.

அப்போது என்னவோ நம் கனவு சிதைக்கப் பட்டதைப் போலத் தெரியும் நம் கனவு மற்றவர்களுக்குத் தெரியவில்லை என்று நினைப்போம்.

அப்படித்தான் அன்றும் நினைத்தேன். ஆனால் அவர் பாடல் பெரிய பலமானது.

தயாரிப்பாளர் அமைவது சிரமம்.இயக்குநர் கப்பல் வருவது போலக் கற்பனை செய்யலாம். கப்பல் கொண்டுவர ஒரு கிறுக்கன் தயாரிப்பாளர் பணத்துடன் வரவேண்டும்.

பெரியபடம் எடுப்பது சுலபம் . இன்று ஒழுங்காக வருகிறவர்களைக்கூட திசைதிருப்பி விடுகிறார்கள். இப்படிக் குழப்பிப் பூஜையோடு நின்று போன படங்கள் எத்தனை ?பாதிப் படத்தோடு நின்று போன படங்கள் எத்தனை ?

‘பார்க்க தோணுதே’ என்கிற இந்தப் படத்தின் தலைப்பைப் பார்க்கும் போது எனக்கு நான் காதலித்த காலம் நினைவுக்கு வருகிறது.

காதலில்லாதவன் கலைஞனே கிடையாது.

சிறுவயதில் தாலாட்டிய அம்மாவைப் பார்க்கத் தோணுது, தோளில் சுமந்த அப்பாவைப் பார்க்கத் தோணுது, பள்ளி நண்பனைப் பார்க்கத் தோணுது, காதலியைப் பார்க்கத் தோணுது.

ஆமாம், காதலியைப் பார்க்கத் தோணுது. சத்தியமாக நான் ஒரே ஒரு பெண்ணைத்தான் காதலித்தேன்.ஆனால் திருமணம் செய்யவில்லை. இது என் மனைவிக்கும் தெரியும்.

மதுரையில் 1974–ல் மெஜுரா கோட்ஸ் நிறுவனத்தில் நாலாயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்த போது இருந்த சுதந்திரமும் மகிழ்ச்சியும் நிம்மதியும் இப்போது இல்லை.

அப்போது முதல்மகன் செல்வா பிறந்தது தனுஷ் பிறந்தது எல்லாமே சுதந்திரமும் மகிழ்ச்சியும் தந்தவை. இப்போது தனுஷை எவனோ ஒருவன் என் மகன் என்கிறான். எனக்கு எவ்வளவு பிரச்சினை பாருங்கள். இன்று வசதிகள் இருந்தும் சுதந்திரமும் இல்லை; மகிழ்ச்சியும் இல்லை.

இன்று சினிமா எங்கேயோ போய்க் கொண்டு இருக்கிறது. இன்று சினிமா சூதாட்டத்தில் சிக்கிக்கொண்டு இருக்கிறது.

‘துள்ளுவதோ இளமை’யில் நடித்தபோது அப்போது . ப்ளஸ் ஒன் படித்த தனுஷுக்கு சினிமாவில் நடிக்க விருப்பமில்லை, ஈடுபாடில்லை.

பைனான்சியர் பணம் கொடுத்துவிட்டு ‘அப்பனும் புள்ளையும் கேமரா வச்சிட்டு விளையாடறாங்க’ என்றார் கிண்டலாக. ‘என் ராசாவின் மனசிலே’ சமயத்தில் கூட என்னையும் ராஜ்கிரணையும் ‘கோடம்பாக்கத்தில் ரெண்டு லூசுங்க சுத்துது’ என்றார்கள்.

இப்படி எல்லாரும் அவமானங்களைத் தாண்டித்தான் வர வேண்டும்.இந்த சிறிய தயாரிப்பாளர் வெற்றிபெற வேண்டும் ” என்று வாழ்த்தினார்.

நிகழ்ச்சியில் ‘ நட்டி’ நட்ராஜ். தயாரிப்பாளர் சங்க (கில்டு) செயலாளர் ஜாக்குவார் தங்கம், இயக்குநர்கள் ஏ வெங்கடேஷ், அப்துல் மஜீத்,பத்திரிகையாளர் சங்கத்தலைவர் டி.எஸ் .ஆர் சுபாஷ், காதல் சுகுமார், பாடகர் வீரமணிதாசன், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, ஆகியோருடன் நாயகன் அர்ஷா, நாயகி தாரா, இயக்குநர் ஜெய் செந்தில் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

More Articles
Follows