மீண்டும் வீட்டு வேலையாட்களை வியக்க வைத்த அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் தன்னுடைய வீட்டில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு சொந்தமாக வீடு கட்டிக் கொடுத்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இவர்கள் அனைவரும் அஜித்தின் வீட்டில் இருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் வசித்து வருகின்றனர்.

இவர்களை வேலைக்கு அழைத்து வர வேன் ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறார்.

இந்நிலையில், அவர்களின் வீட்டில் அடிக்கடி மின்சார தடை பிரச்சினை ஏற்பட்டுள்ளதாம்.

இதனையறிந்த அஜித் அவர்களின் வீட்டில் இன்வெர்ட்டர் பொருத்த உத்தரவிட்டுள்ளாராம்.

அதிலும் தன் வீட்டில் உபயோகப்படுத்தும் தரமான இன்வெர்ட்டரை பொருத்த சொல்லியிருப்பதால் அவரது பணியாளர்கள் ஆச்சரியத்தில் இருக்கிறார்களாம்.

ஜிவி. பிரகாஷ்-சதீஷ் இணையும் படத்திற்கு ‘நவீன’ பெயர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தன் கை விரல்களே கொள்ளாத அளவிற்கு புதுப்படங்களை ஒப்புக் கொண்டு வருகிறார் ஜி.வி.பிரகாஷ்.

இதில் பல படங்களில் நாயகனாகவும் இசையமைப்பாளராகவும் பணி புரிகிறார்.

இந்நிலையில் இன்று இவர் நடிக்கவுள்ள ஒரு புதுப்படத்திற்கு பூஜை இடப்பட்டுள்ளது.

திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட் சார்பாக சி.வி.குமார் இப்படத்தை தயாரிக்கிறார்.

இப்படத்திற்கு நவீன தொழில்நுட்பமான ‘4ஜி’ (4G) எனப் பெயரிட்டுள்ளனர்.

இதில் சதீஷ் முக்கிய வேடம் ஏற்று நடிக்க, இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் வெங்கட் பக்கர் (வருண் பிரசாத்) இயக்குகிறார்.

விஜய்சேதுபதி படத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல நடிகரான விஜய்சேதுபதி, தன் ‘விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ்’ சார்பாக ‘ஆரஞ்சு மிட்டாய்’ என்ற படத்தை தயாரித்தார்.

பிஜு விஸ்வநாத் இப்படத்தை இயக்கியிருந்தார்.

இதனையடுத்து, ‘மேற்கு தொடர்ச்சி மலை’ என்ற படத்தை தயாரித்தார்.

இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தை சுசீந்திரனின் உதவியாளர் லெனின் பாரதி இயக்கியிருக்கிறார்.

இந்நிலையில், சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட இப்படம் தேர்வாகியுள்ளது.

இவ்விழா கேரளாவில் நடைபெறவுள்ளது.

இவ்விழாவில் பங்கேற்க போட்டியிட்ட 18 படங்களில் இந்த படம் மட்டுமே தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரஜினி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய எமி ஜாக்சன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் 2.ஓ படத்தின் படப்பிடிப்பில் மூன்றில் இரண்டு பங்கு முடிந்து விட்டதாக ஷங்கர் அண்மையில் அறிவித்தார்.

சில நாட்களுக்கு முன்பு, இதன் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னைக்கு அருகேயுள்ள திருக்கழுக்குன்றத்தில் நடந்து வருவதாக வந்த செய்திகளை பார்த்தோம்.

இந்நிலையில் ரஜினிகாந்த், ஷங்கர், எமிஜாக்சன், ராஜீ மகாலிங்கம் உள்ளிட்ட இப்படக்குழுவினர் ஆயுதபூஜையை 2.ஓ சூட்டிங் ஸ்பாட்டில் கொண்டாடினர்.

இப்படங்களை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட எமி ஜாக்சன், இத்துடன் 2.ஓ படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக தெரிவித்துள்ளார்.

இதனையறிந்த ரஜினி ரசிகர்கள், இவ்வளவு சீக்கிரமாக படப்பிடிப்பு முடிந்துவிட்டதா? என அதிர்ச்சியில் உள்ளனர்.

With himself, it’s a wrap for our Robot 2.0 schedule!

சூர்யாவுக்கு ரஜினி டைட்டில்; ஜோதிகாவுக்கு கமல் டைட்டில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

36 வயதினிலே படத்தை தொடர்ந்து, பிரம்மா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் ஜோதிகா.

இந்நிலையில் 2டி எண்டர்டெயின்ட்மெண்ட் தயாரிக்கும் மகளிர் மட்டும் என்ற பெயரிடப்பட்ட படத்தின் பர்ஸ்ட் லுக்கை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடவிருக்கிறாராம் சூர்யா.

மகளிர் மட்டும் என்ற இதே தலைப்பில் உருவான படத்தை சிங்கிதம் சீனிவாச ராவ் இயக்கியிருந்தார்.

கடந்த 1994ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் கமல் கௌரவ தோற்றத்தில் நடித்து தயாரித்து இருந்தார்.

சூர்யா நடிக்கும் படத்திற்கு ரஜினி பன்ச் டயலாக்கான தானா சேர்ந்த கூட்டம் தலைப்பிடப்பட்டதும், தற்போது ஜோதிகாவின் படத்திற்கு கமல் படத்தலைப்பு இடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

வேதாளம் படத்துடன் கனெக்ஷன் ஆகும் ஜில்லா டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மோகன்லால், விஜய் நடித்த ஜில்லா படத்தை நேசன் இயக்கியிருந்தார்.

இப்படம் தமிழகம் மற்றும் கேரளாவில் நல்ல வசூலை பெற்றுத் தந்தது.

இந்நிலையில் புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார்.

தெலுங்கு பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிக்கவுள்ள புதிய படத்தை இயக்குகிறார்.

இப்படத்தின் பூஜை இன்று போடப்பட்டது.

ஏ.எம். ரத்னம் தயாரிக்கும் இப்படம் வேதாளம் படத்தின் ரீமேக் என தெரிய வந்துள்ளது.

இதன் ரீமேக்கை தெலுங்கு திரையுலகுக்கு ஏற்ற வகையில், மாற்றம் செய்யவிருக்கிறாராம் நேசன்.

More Articles
Follows