‘நாசர் மகனுடன் நட்பாய் பழகினேன்..’ ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சைவம் படத்தில் சிறிய கேரக்டரில் நடித்தவர் லூத்புதின் பாஷா.

இவர் நடிகர் நாசரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் முதன்முறையாக ஹீரோவாக நடித்துள்ள “பறந்து செல்ல வா“ என்ற படம் இன்று வெளியாகிறது.

இதுகுறித்து அவர் கூறியதாவது…

இப்படம் எனக்கு ஒரு நல்ல அனுபவத்தை கொடுத்துள்ளது.

இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், நரேல்கேங் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

இப்படத்தின் அனைத்தும் சிங்கப்பூரில் படமாக்கப்பட்டுள்ளது. 120 ரூபாயில் சிங்கப்பூரை சுற்றி பார்த்தது போல் ஒரு நல்ல அனுபவத்தை தரும்.

இயக்குநர் தனபால் பறந்து செல்ல வா கதையை கொடுத்து இந்த கதையில் நீங்க நடிக்க வேண்டும் என்றார். கதை மிகவும் சுவாரசியமாக இருந்தது , எனக்கு ரொம்ப பிடித்து விட்டது.

இப்படத்தில் நடிக்கும் போது எனக்கு பதட்டமாக இருந்தது. அதற்கு அப்பா என்னிடம் “நீ ஒரு நடிகன், கதாநாயகன் என்பதனை மறந்து மிக சாதாரணமான நடிகன் என்று நினைத்து நடித்தால் போதும் என்றார்.

ரஜினி சார் படத்துல வருகின்ற பாடலான “ நம்ம ஊர் சிங்காரி “ பாடல் அப்படியே படமாக்கபட்டுள்ளது.

இப்படம் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது…

இப்பட ஹீரோ லூத்புதின் பாட்ஷா ரொம்ப பதட்டமாக இருந்தார்.

நான் அவரோடு நட்புடன் பழகிய பின்புதான் காட்சிகளில் சிறப்பாக நடித்தார். நாங்கள் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருந்தோம்.

இதில் நான் ஒரு மார்டன் கேர்ள் ஆக நடித்துள்ளேன்.

என்னுடைய படத்திற்காக சிங்கப்பூருக்கு சூட்டிங் சென்றது இதுவே முதல்முறையாகும்” என்றார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

விஜய்யின் ‘தெறி’க்கும் அஷ்வினின் ‘திரி’க்கும் உள்ள ஒற்றுமை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட்லி இயக்கத்தில் விஜய், நைனிகா நடித்து சூப்பர் ஹிட் அடித்த படம் தெறி.

இப்படத்தில் அப்பா-மகள் பாசத்தை மிக அருமையாக காட்டியிருந்தார் அட்லி.

இந்நிலையில் அசோக் அமிர்தராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் திரி.

இப்படத்தில் அப்பா-மகன் பாசத்தை காட்டியிருக்கிறார்களாம்.

இதில் அஷ்வின் கக்கமனு மற்றும் ஸ்வாதி ரெட்டி இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர்.

சீஷோர் கோல்ட் புரொடக்ஷன்ஸ்’ சார்பில் ஏ.கே. பாலமுருகன் – ஆர். பி. பாலகோபி தயாரித்து இருக்கும் இப்படத்தை ஆண்டோன் ரஞ்சித் மற்றும் எஸ். ஜான் பீட்டர் ஆகியோரும் இணை தயாரிப்பு செய்துள்ளனர்.

இதற்கு சென்சாரில் யு சான்றிதழ் கிடைத்துள்ளதால், படத்திற்கு வரி விலக்கு கிடைக்கும் என்ற உற்சாகத்தில் இருக்கிறார் அறிமுக இயக்குனர் அசோக் அமிர்தராஜ்

‘பைரவா’ தவிர விஜய் ரசிகர்களுக்கு மற்றொரு விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பைரவா படம் 2017ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகிறது.

தமிழில் ரிலீஸ் ஆகும் அதே நாளில்தான் தெலுங்கானா, ஆந்திராவிலும் தெலுங்கு பதிப்பில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நாளில் விஜய் நடித்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய கத்தி படத்தின் ரீமேக்கான கைதி எண் 150 படமும் ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விவி. விநாயக் இயக்கியுள்ள இப்படத்தில் தெலுங்கு மெகாஸ்டார் சிரஞ்சீவி, காஜல் அகர்வால் ஆகியோர் நடித்துள்ளனர்.

தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். நேற்று மாலை இப்படத்தினி டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழில் மாபெரும் வெற்றிப் பெற்ற கத்தி படம் தெலுங்கில் எப்படி உருவாக்கப்பட்டுள்ளது? என்பதை காண விஜய் ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்களாம்.

Vijay fans will have double treat on pongal 2017

‘மிக மிக அவசரம்’ ஆக பாக்யராஜ் இடத்தை பிடித்த சுரேஷ் காமாட்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அமைதிப்படை 2, கங்காரு ஆகிய படங்களை தனது வி ஹவுஸ் புரடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ’மிக மிக அவசரம்’ என்ற படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இதன் படப்பிடிப்பு சேலம் மாவட்டம் பவானி அருகேயுள்ள கோனேரிப்பட்டி பாலத்தில் நடைபெற்றுவருகிறது.

சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்பு “பவுனு பவுனுதான்” படத்தின் படப்பிடிப்பு இங்கு நடந்தது.

பாக்யராஜும், ரோகிணியும் தண்ணீருக்குள் குதிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது.

மிக மிக அவசரம் படத்தில் இந்த கோனேரிப்பட்டி பாலம் முக்கிய இடம்பிடித்துள்ளதால் 23 ஆண்டுகளுக்கு பிறகு படப்பிடிப்பு நடத்த அனுமதி வாங்கியிருக்கிறார்கள்.

நீண்ட காலத்திற்கு பின் படப்பிடிப்பு நடைபெறுவதால் சுற்று வட்டாரத்தில் வசிக்கும் மக்கள் வந்து பார்வையிட்டு செல்கிறார்கள்.

இங்கு படப்பிடிப்பு நடத்தப்பட்ட பவுனு பவுனுதான் படம் போலவே இந்த படமும் பெரிய அளவில் வெற்றி பெறும் என்று வாழ்த்தி செல்கின்றனர்.

இதில் முக்கிய கேரக்டரில் சீமான் நடிக்கிறார்.

கதாநாயகனாக கோரிப்பாளையம் ஹரிஷ், கதாநாயகியாக கங்காரு, வந்தாமல ஸ்ரீஜா மற்றும் வழக்குஎண் முத்துராமன், சேதுபதி படத்தில் விஜய்சேதுபதியின் நண்பனாக நடித்த லிங்கா, ஆண்டவன் கட்டளை அரவிந்த், இயக்குநர் சரவண சக்தி, வீ.கே.சுந்தர்,வெற்றி குமரன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

மேலும் முக்கிய அம்சமாக இந்த படத்தின் படப்பிடிப்புக்கு எபிக் வெப்பன் ஹீலியம் 8கே சென்சார் என்ற அதிநவீன கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளதாம்.

இது 8கே ரெசொல்யூஷன் அடங்கிய கேமரா ஆகும். இதன் மூலம் காட்சிகளை மிக துல்லியமாக படம் பிடிக்கலாம்.

இந்த கேமரா இந்தியாவிலேயே முதன்முறையாக ’மிக மிக அவசரம்’ படத்தில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Producer Suresh kamatchi became director for miga miga avasaram

ஜெயலலிதாவுக்காக கமல் செய்ததை ரஜினி செய்வாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த செப். 22ஆம் தேதி முதல் டிசம்பர் 5ஆம் தேதி (2016) வரை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் முதல்வர் ஜெயலலிதா.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருப்பதால், தன் நவம்பர் 7ஆம் தேதி தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என கமல் கூறியிருந்தார்.

இந்நிலையில் டிசம்பர் 5ஆம் தேதி நள்ளிரவு ஜெயலலிதா காலமானார்.

தற்போதுவரை அந்த துயரத்தில் இருந்து மீளாத சோகத்தில் தமிழகம் உள்ளது.

இன்னும் ஓரிரு தினங்களில் அதாவது டிசம்பர் 12ஆம் தேதி ரஜினியின் பிறந்தநாள் வருகிறது.

எனவே ரஜினியும் கமலை பின்பற்றி தன் பிறந்தநாளை கொண்டாட்டங்களை தவிர்க்க ரசிகர்களிடம் சொல்லுவாரா? என்று பார்க்கலாம்.

சிங்கம் சூர்யாவுடன் மோதும் ‘தேசிய விருது’ நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா நடித்துள்ள சி3 படம் டிசம்பர் 23ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இத்துடன் சசிகுமார் நடித்துள்ள பலே வெள்ளையத் தேவா உள்ளிட்ட சில படங்களும் ரேஸில் இணைந்துள்ளன.

இவற்றைத் தொடர்ந்து, பாபி சிம்ஹாவின் பாம்பு சட்டை படமும் வெளியாக உள்ளதாம்.

ஜிகர்தண்டா படத்திற்காக பாபி சிம்ஹா தேசிய விருது பெற்றது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

ஆதம்தாசன் இயக்கியுள்ள பாம்பு சட்டை படத்தை மனோபாலா தயாரித்துள்ளார்.

நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, முக்கிய வேடத்தில் தாமிரபரணி பானுவும் நடித்துள்ளார்.

தற்போது இப்படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows