நடிகை சாய் பல்லவியின் சம்பளம் ஒரு கோடியை தாண்டியதா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாளத்தில் பிரேமம் என்ற ஒரு படத்தில் நடித்து தென்னிந்திய சினிமாவின் கவனத்தை ஈர்த்தவர் சாய்பல்லவி.

இதனையடுத்து தெலுங்கில் பிடா, எம்சிஏ படங்களில் நடித்து இன்று அங்கு பிஸியாகிவிட்டார்.

இவர் தமிழில் நடித்துள்ள கரு படம் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது சர்வானந்துடன் ஒரு பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்.

இதில் அவருக்கு 1.25 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்த ஒரு நடிகைக்கு இவ்வளவு சம்பளமா? என டோலிவுட் நடிகைகள் அதிர்ச்சியில் இருக்கிறார்களாம்.

சாய்பல்லவி இது நிஜம்தானா?

Actress Sai Pallavi salary updates

2.0 ரிலீஸ் தாமதத்தால் முந்தி வரும் காலா; வெளியிடும் லைகா!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘2.0’ படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

இதுவரை தமிழ்ப் படங்களே வெளியாகாத நாடுகளிலும் இப்படத்தை வெளியிட முடிவு எடுத்துள்ளனர்

இதனால் டப்பிங் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் மிக தாமதமாகி வருகிறது.

இப்படம் முழுக்க முழுக்க 3டி கேமிரா தொழில்நுட்பத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதால் கிராபிக்ஸ் காட்சிகளை வடிவமைப்பதில் கடினமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால்தான் படத்தின் வெளியீடு ஆகஸ்ட் மாதம் வரை தள்ளிப்போகலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் ரஜினி நடிப்பில் தான் தயாரித்துள்ள காலா படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறாராம் தனுஷ்.

ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

வருகிற ஏப்ரல் 14-ம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியிடலாமா? என என்று படக்குழு ஆலோசித்து வருகிறதாம்.

‘காலா’ படத்தை லைகா நிறுவனம் வாங்கி தமிழகத்தில் ரிலீஸ் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Rajini Kaala movie may release on 14th April before 2point0 Release

ரஜினியின் முத்து பட வசூலை முறியடிக்காத பாகுபலி2

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 1995ஆம் ஆண்டு கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, மீனா நடித்த முத்து படம் வெளியானது.

அதுநாள் வரை இந்தியாவில் மட்டுமே இருந்த ரஜினியின் மார்கெட் ஜப்பான் வரை தொட்டது.

இதனால் இன்று வரை அங்கு ரஜினிக்கு மாபெரும் ரசிகர்கள் வட்டம் உள்ளது.

அங்கு ரஜினியை டான்சிங் மகாராஜா என்றே ஜப்பானியர்கள் அழைக்கின்றனர்.

அதுபோல் நடிகை மீனாவுக்கும் அங்கு பல்லாயிரக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர்.

இப்படம் சுமார் 15,00,000 யுஎஸ்டாலர் வரை அப்போதே வசூலித்துள்ளதாம்.

மேலும் ‘முத்து’ படம் ஜப்பான் நாட்டில் ஒரு தியேட்டரில் மட்டும் 22 வாரங்கள் ஓடியுள்ளதாகவும் அங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் கிட்டதட்ட ஒன்றரை மாதங்களுக்கு முன் ராஜமௌலி இயக்கிய பாகுபலி 2 படம் ஜப்பானில் வெளியாகியுள்ளது.

இப்படம் உலகம் முழுவதும் சுமார் 1800 கோடி வரை வசூலித்துள்ளது.

ஜப்பான் நாட்டில் மட்டும் இதுவரை 5,50,000 யுஎஸ் டாலர் வரை வசூலித்துள்ளதாம்.
உலகம் முழுவதும் இப்படம் கோடிகளை குவித்தாலும் ரஜினியின் முத்து படத்தின் வசூலை இப்படம் முறியடிக்காமல் அங்கு திணறி வருகிறதாம்.

இதனால் உலகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Baahubali 2 movie cant beat Rajinis Muthu box office collection

களவாணி மாப்பிள்ளை-க்காக தினேஷ் உடன் இணையும் அதிதிமேனன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நம்ம ஊரு பூவாத்தா, ராக்காயி கோயில், பெரிய கவுண்டர் பொண்ணு, கட்டபொம்மன், நாடோடி மன்னன், மாப்பிள்ளை கவுண்டர் உட்பட 16 சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த ராஜபுஷ்பா பிக்சர்ஸ் பட நிறுவனம் பதினேழு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பட தயாரிப்பில் ஈடுபட உள்ளனர்.

இந்த நிறுவனத்தின் தயாரிப்பாளரான மணிவாசகம் தான் இந்த அனைத்து படங்களையும் இயக்கியவர். அந்த கால கட்டத்தில் வணிக ரீதியான சக்சஸ் புல் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் கவனிக்கப்பட்டவர் மணி வாசகம் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் மறைந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் படத்தயாரிப்பில் ராஜபுஷ்பா பிக்சர்ஸ் களமிறங்குகிறது.
மணிவாசகத்தின் மகனான காந்திமணிவாசகம் தயாரித்து, இயக்கும் “களவாணி மாப்பிள்ளை“ படத்தில் தினேஷ் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அதிதி மேனன் நடிக்கிறார்.

ஆனந்த்ராஜ், தேவயாணி, ரேணுகா, மனோபாலா, மகாநதி சங்கர், மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த்
ஒளிப்பதிவு – சரவண்ணன் அபிமன்யு
இசை – என்.ஆர்.ரகுநந்தன்
கலை – மாயா பாண்டி
எடிட்டிங் – பி.கே
நடனம் – தினேஷ்
ஸ்டன்ட் – திலீப்சுப்பராயன்
தயாரிப்பு மேற்பார்வை – சிவசந்திரன்
இணை தயாரிப்பு – திருமூர்த்தி
தயாரிப்பு – ராஜேஸ்வரி மணிவாசகம்.
கதை, திரைக்கதை, இயக்கம் – காந்தி மணிவாசகம்.

இந்த படத்தின் துவக்க விழா இன்று நடைபெற்றது.

படப்பிடிப்பு 15 ம் தேதி பொள்ளாச்சியில் துவங்க உள்ளது. ஜனரஞ்சகமான காமெடி, காதல் கதையாக உருவாக உள்ளது.

Dinesh and Adithi Menon starring in Kalavani Mapillai

அஜித் பெயரை தன் படத்திற்கு தலைப்பாக்கிய தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நதிர்ஷா இயக்கத்தில் வெளியான மலையாளப் படம் ‘கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன்’.

விஷ்ணு உன்னிகிருஷ்ணன் எழுதி, நடித்துள்ள இந்தப் படம், கடந்த வருடம் நவம்பர் மாதம் ரிலீஸானது.
காமெடிப் படமாக உருவாக்கப்பட்ட இப்படம் 40 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது.

இந்தப் படத்தைத்தான் தமிழில் ‘அஜித் ஃப்ரம் அருப்புக்கோட்டை’ என்ற பெயரில் தன்னுடைய வுண்டர்பார் ஃபிலிம்ஸ் சார்பில் தயாரிக்கிறார் தனுஷ்.

விஜய் டிவி தீனா இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்க, மலையாளத்தில் இயக்கிய நதிர்ஷாவே தமிழிலும் இயக்குகிறார்.

இதற்கு முன்பே தனுஷ் இயக்கிய ‘பவர் பாண்டி’ படத்தில் தீனா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dhanush producing movie in the name of Ajith from Aruppukottai

செஞ்சுரி அடித்த இமான் பர்ஸ்ட் டைம் அஜித்துடன் இணைகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விவேகம்’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கிறார்.

‘விசுவாசம்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தையும் சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கிறது.

‘பில்லா’, ‘ஏகன்’, ‘ஆரம்பம்’ ஆகிய படங்களுக்குப் பிறகு ‘விசுவாசம்’ படத்தின் மூலம் 4வது முறையாக அஜித்துக்கு ஜோடியாகிறார் நயன்தாரா.

இப்படத்திற்கு யுவன் இசையமைக்கலாம் என்று கூறப்பட்டது.

ஆனால் அவர் விலக மற்ற பிரபல இசையமைப்பாளர்களுடன் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் இமான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

100 படங்களுக்கு மேல் இசையமைத்திருந்தாலும் அஜித் படத்திற்கு இமான் இசையமைப்பது இதுவே முதல் முறை.

இதன் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் தொடங்கி 2018 தீபாவளிக்கு ‘விசுவாசம்’ வெளியாகும் என கூறப்படுகிறது.

More Articles
Follows