தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள விருமன்’ படத்தில் கார்த்தி நடித்துள்ளார்.
நடிகர் சூர்யா இந்த படத்தை தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இதில் நாயகியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடித்துள்ளார்.
முதலில் நாயகியாக இவரை ஒப்பந்தம் செய்யவில்லை என இயக்குனர் முத்தையா சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
‘விருமன்’ பட தேன்மொழி கேரக்டரில் நடிக்க கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மற்றும் சாய்பல்லவி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்களாம்.
ஆனால் அவர்களின கால்ஷீட் தேதிகள் கிடைக்கவில்லை என்பதால்தான் ஷங்கரின் மகள் அதிதியிடம் பேசினார்களாம்.
சுல்தான் படத்தில் ஏற்கெனவே கார்த்தியுடன் ராஷ்மிகா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்தியுடன் கீர்த்தி சுரேஷ் மற்றும் சாய்பல்லவி இதுவரை இணைந்து நடிக்கவில்லை என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.
Director Muthaiah talks about heroine selection in Viruman
