மாரி-2 சூட்டிங்கில் வில்லனுடன் மோதிய போது தனுஷுக்கு காயம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடித்து வரும் படம் ‘மாரி 2’.

இப்படத்தில் தனுஷுடன் சாய் பல்லவி, வரலட்சுமி, வித்யா, கிருஷ்ணா, டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

இதில் டோவினோ தாமஸ் வில்லனாக நடிக்கிறார். இவருக்கும் தனுஷுக்கு இடையேயான சண்டைக்காட்சிகள் நேற்று படமாக்கப்பட்டது.

அப்போது, எதிர்பாராத விதமாக வலது காலிலும், இடது கையிலும் தனுஷுக்கு அடிபட்டு விட்டது.

உடனே படக்குழுவினர் அவருக்கு முதலுதவி செய்தார்கள்.

இதனையடுத்து இந்த செய்தி பரவ, யாரும் கவலை கொள்ள வேண்டாம். நான் நலமாக இருக்கிறேன் என தனுஷ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Dhanush got injured in Maari 2 shooting

கமல்-விக்ரம்- அக்‌ஷராஹாசன் கூட்டணியில் பிரபல இசையமைப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

`சாமி ஸ்கொயர்’ மற்றும் `துருவ நட்சத்திரம்’ ஆகிய இரண்டு படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார் விக்ரம்.

இந்த இரு படங்களை முடித்த பிறகு கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

`தூங்காவனம்’ படத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா இயக்கும் இதில் கமலின் 2வது மகள் அக்‌ஷராஹாசன் நடிக்கிறார்.

இந்நிலையில் இப்படத்திற்கு இசையைமைக்க ஜிப்ரான் ஒப்புக் கொண்டுள்ளாராம்.

அண்மைக்காலமாக கமலின் படங்களுக்கு ஜிப்ரான்தான் இசையமைத்து வருகிறார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்த படத்தை முடித்துவிட்டுதான் `மஹாவீர் கர்ணா’ என்ற வரலாற்று படத்தில் நடிக்கவுள்ளார் விக்ரம் என்பது குறிப்பிடத்தக்கது.

Ghibram will be composing music for Kamal Vikram combo movie

ரஜினி-அஜித்தை அசிங்கப்படுத்தி விஜய் பிறந்தநாளை கொண்டாடிய ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று ஜீன் 22ஆம் தேதி நடிகர் விஜய் தன் பிறந்தநாளை கொண்டாடினார்.

இதனையொட்டி கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு தியேட்டர்களில் அவரது ஹிட்டான படங்களை திரையிட்டனர்.

இதனை அவரது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடினர்.

இந்நிலையில் சென்னையில் உள்ள பிரபல தியேட்டரில் விஜய் படம் திரையிடப்பட்டது. அங்கு ஏற்கெனவே காலா படமும் ஓடிக் கொண்டிருப்பதால் ரஜினி பேனரும் வைக்கப்பட்டது.

விஜய் ரசிகர்கள் சர்கார் பர்ஸ்ட் லுக்கை கொண்டாடும் போது. காலா பேனரை கிழித்துள்ளனர்.

மேலும் சில சேனல்கள் அவர்களை பேட்டி எடுத்தபோது ரஜினி மற்றும் அஜித்தை கேவலமாக திட்டியுள்ளனர்.

இதில் ஒரு விஜய் ரசிகர் மற்ற ரசிகர்களுக்கு பதிலடி என தெரிவித்த போதிலும் உணர்ச்சிவசப்பட்டு கொஞ்சம் ஓவராகப் பேசிவிட்டார்.

இதனையடுத்து விஜய் ரசிகர்களுக்கு எதிராக ரஜினி, விஜய் ரசிகர்கள் ஒன்று திரண்டு அவரை திட்ட, இணையமே கலவரமானது.

சம்பந்தப்பட்ட நடிகர்கள் நண்பர்களாக இருந்தாலும் இந்த ரசிகர்கள் இப்படி அவர்களுக்காக மோதுவதை பார்த்தால் என்னதான் சொல்வது..?

Vijay fans troll Rajini and Ajith became issue in Social medias

தன் மனைவியை விட விஜய்யை ரசிப்பதாக கூறி அசிங்கப்பட்ட சாந்தனு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய்யின் தீவிர ரசிகர் நடிகர் சாந்தனு என்பது அனைவருக்கும் தெரியும்தானே.

இவர் சர்கார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு, அதில் தன் மனைவியை விட அதிகமாக விஜய்யை ரசிப்பதாக கருத்தை பதிவிட்டார்.

நாமும் அந்த செய்தியை நம் தளத்தில் பதிவிட்டு இருந்தோம்.

சில மணி நேரங்களில் சாந்தனு அந்த பதிவை நீக்கிவிட்டார்.

ஆனாலும் அந்த பதிவை கண்ட சிலர் ஸ்கிரீன் ஷாட் எடுத்து வைத்துக் கொண்டு சாந்தனுவை கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர்.

மனைவியை விட விஜய்யை ரசிக்கிறாரா சாந்தனு? ஓ அவரா இவர்? என ஒருமையில் கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர்.

விஜய், சாந்தனு மற்றும் பல அசிங்கமான படங்களை பதிவிட்டு #என்WifeAhகூடஇவ்ளோ_ரசிச்சு_பாக்கல என ட்ரெண்ட் செய்துவிட்டனர்.

இதிலிருந்து ஒன்றை மட்டும் நடிகர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பொது வெளியில் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும் என்பதுதான். இல்லையென்றால் இதுபோல்தான் அவமானப்பட வேண்டும்.

I admire Vijay more than my wife Fans troll Shanthanus tweet

சர்கார் படத்திற்காக லாஸ் வேகாஸில் விஜய்யின் இன்ட்ரோ சாங்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் ‘சர்கார்’ படத்தில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், ராதாரவி, பழ.கருப்பையா, வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

சென்னையில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு, கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் நடைபெற்றது.

இந்நிலையில், இந்தப் படத்தில் இடம்பெறும் ஓப்பனிங் பாடலை, அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸ் மாகாணத்தில் படமாக்கவுள்ளனர்.

அடுத்த ஜூலை மாத இறுதியில் அங்கு படப்பிடிப்பு நடைபெற இருக்கிறதாம்.

Vijays Sarkar Intro song will be shoot in Las Vegas City

சொன்னதை செய்யாத விஜய்; சர்கார் மீது சரமாரி தாக்கு..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

*சர்கார்* படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில், விஜய் சிகரெட் பிடிக்கும் படம் உள்ளது.

ஆனால், இனிமேல் புகை பிடிப்பது போன்ற காட்சியில் நடிக்க மாட்டேன் என தான் கொடுத்த வாக்குறுதியை விஜய் மீறியுள்ளார் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த 2007-ம் ஆண்டு தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாட்டுக்கான கூட்டமைப்பும், பசுமைத் தாயகம் அமைப்பும் இணைந்து ‘தமிழ்நாட்டில் புகையிலை கட்டுப்பாடு’ என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியை சென்னையில் நடத்தின.

இந்த நிகழ்ச்சியில், அப்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டார்.

“சினிமாவில் குடிப்பதற்கும், புகை பிடிப்பதற்கும் எதிராக நாங்கள் போராடி வருகிறோம்.

எங்கள் போராட்டத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் புகை பிடிக்கும் காட்சியில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.

அதேபோல் விஜய்யும் புகை பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்றார் அன்புமணி ராமதாஸ்.

அவருடைய வேண்டுகோளை, விஜய்யும் ஏற்றுக் கொண்டார்.

“மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸின் கருத்தை நான் வரவேற்கிறேன்.

புகைப்பழக்கத்துக்கு எதிரான அவருடைய போராட்டம், ஆரோக்கியமான விஷயம்தான்.

அவருடைய வேண்டுகோளை ஏற்று, இனிமேல் புகை பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன்.

என்னுடைய நடிப்பில் சமீபத்தில் திரைக்குவந்த ‘அழகிய தமிழ் மகன்’ படத்தில், இரண்டு வேடங்களில் நடித்தேன்.

அதில், கெட்டவன் கதாபாத்திரமும் ஒன்று.

அந்தக் கதாபாத்திரம் கெட்டவன் என்பதைக் காட்டுவதற்காகவே, சிகரெட் பிடிப்பது போன்ற காட்சியை இயக்குநர் வைத்தார்.

இறுதியில் அவன் திருந்துவதைக் காட்டுவதற்காகத்தான் சிகரெட்டைத் தூக்கி எறிவது போன்ற காட்சி அமைக்கப்பட்டு இருந்தது.

இனிமேல், அதுபோன்ற காட்சிகளைக் கூடத் தவிர்க்க முயற்சி செய்கிறேன்” என்று கூறினார் விஜய்.

ஆனால் இப்போது சர்கார் பட போஸ்டரில் அவர் புகைப்பிடிப்பது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

More Articles
Follows