இனியா நடித்திருக்கும் மியா மியூசிக் வீடியோ டீசர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மகேஷ் என்பவரது இயக்கத்தில், அஸ்வின் ஜான்ஸன் இசையமைத்துள்ள ‘மியா’ என்ற மியூசிக் வீடியோவில் நடிகை இனியா நடித்திருப்பதோடு, உதவி இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார்.

இந்த மியூசிக் வீடியோவுக்கு கோவர்தன் பழனிச்சாமி பாடல் எழுதியிருக்கிறார்.

அபி ரெஜி – லாவெல் – ஜெயன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்.

Actress Ineya starring music video Mia Teaser

 

Director – S.MAGESH
Concept & choreography – ARUN NANDAKUMAR
Music – Ashwin Johnson
Lyrics – Govarthan Palaniswamy
DOP – Abhi REJI ,Lawell, Jayan
MIA Official Teaser | New Tamil Dance Music Video | Actress Ineya

https://www.youtube.com/watch?v=9IdtgMM72rM

கமல்-ரஜினியெல்லாம் எம்ஜிஆர் ஆக முடியாது… – முதல்வர் எடப்பாடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த சில மாதங்களாக கமல் மற்றும் ரஜினியின் அரசியல் பேச்சு தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவர்களின் அரசியல் பேச்சை பலர் ஆதரித்தும் சிலர் எதிர்த்தும் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரஜினி மற்றும் கமலை மறைமுகமாக தாக்கி பேசினார்.

“அரசியலுக்கு வர நினைப்பவர்கள் தொண்டு உள்ளத்தோடு வர வேண்டும். கலைத்துறையில் இருந்து வரும் எல்லாரும் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது” என்றார்.

இது ரஜினி, கமலை முதல்வர் மறைமுகமாக தாக்கி பேசியதாக விழாவில் கிசுகிசுக்கப்பட்டது.

Rajini Kamal can not became like MGR says TN Chief Minister Edappadi Palanisamy

விவேகம் ட்ராக் லிஸ்ட் & பாடல்கள் வெளியாகும் நேர தகவல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடித்துள்ள விவேகம் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் இடம் பெற்றுள்ள சர்வைவா, காதலாடா, தல விடுதலை ஆகிய 3 பாடல்களை இதுவரை வெளியிட்டுள்ளனர்.

மீதமுள்ள பாடல்களை நாளை ஆகஸ்ட் 7ஆம் தேதி மாலை 5 மணிக்கு இணையத்தளங்களில் வெளியிடுகின்றனர்.

இதன் ட்ராக் லிஸ்ட் தற்போது இணையங்களில் வெளியாகியுள்ளது.

இதுவும் தற்போது ட்ரெண்டாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.

Vivegam track list and songs release time updates

 

 

வைரலாகும் சிவகார்த்திகேயனின் பெஸ்ட் ப்ரெண்ட் போட்டோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வாழ்க்கையில் எல்லா நேரத்திலும் நம்முடன் இருக்கும் ஒரே உறவு என்றால் அது நண்பர்கள் மட்டும்தான் என்று சொன்னால் அது மிகையல்ல

இந்த உன்னதமான உறவை போற்றும் வகையில் இன்று உலகம் முழுவதும் நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. (ஆகஸ்ட்டின் முதல் ஞாயிற்றுக்கிழமை இது கொண்டாடப்படுவது வழக்கம்)

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனும் நண்பர்கள் தின வாழ்த்துக்களை தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அத்துடன் தனது பெஸ்ட் ஃபிரெண்டின் படத்தைப் பகிர்ந்து, “முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு” என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர் பதிவிட்ட பெஸ்ட் ப்ரெண்ட் யார் தெரியுமா? அவரது மகள் ஆராதனாதான்.

பொதுவாக சிவகார்த்திகேயன் தனது குடும்ப புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிர மாட்டார்.

இன்று தனது மகளுடன் இருக்கும் படத்தை அவர் பகிர்ந்துள்ளது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

Sivakarthikeyan best friend photo goes viral

சினிமாவில் போட்டி அவசியமில்லை; தேவையும் இல்லை… தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சௌந்தர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடித்துள்ள வேலையில்லா பட்டதாரி 2 படம் வருகிற ஆகஸ்ட் 11ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இப்படத்தின் புரொமோசன் பணிகளில் இப்படக்குழுவினர் ஈடுப்பட்டு வருகின்றனர்.

அதில் ஒரு பேட்டியில் தனுஷ் பேசியதாவது…

‘சினிமாவில் போட்டி அவசியமில்லை. தேவையும் இல்லை.

ஒரு படம் வெற்றிபெற்றால் நாம் அனைவருமே வெற்றி பெற்றவர்கள்தான்.

நான் என்னைத்தான் போட்டியாளராக நினைக்கிறேன்.

நாம் நடிக்கும் படங்கள் வெற்றி பெற வேண்டும் என்றுதான் அனைவரும் நினைக்கிறோம்.

ஆனால் ஒரு படத்தின் வெற்றி தோல்வி என்னைப் பாதிக்காது என்று சொன்னால், நான் பொய் சொல்கிறேன் என்று அர்த்தம்.

நாளை என்ன நடக்கும் என்பது பற்றி நினைக்க மாட்டேன். கடவுள் எனக்கு குறைவாகவோ கூடுதலாகவோ எதையும் கொடுத்துவிடவில்லை.

இப்போது நான் இருக்கும் இந்த நிலையே நிம்மதியாக இருக்கிறது.

இறந்த பின் நான் என்னுடன் எதையும் கொண்டு செல்ல போவது இல்லை’ என்றார்.

 

அரசியலில் வெற்றி பெற ரஜினி ஜாதகத்திற்கு ரசிகர்கள் யாகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சில மாதங்களுக்கு தன் ரசிகர்களை சந்தித்த போது தன் அரசியல் பிரவேசம் பற்றி ரஜினிகாந்த் பேசினார்.

அதன்பின்னர் அவர் காலா சூட்டிங்கில் பிசியாகிவிட்டாலும், அவர் பத்த வைத்த அரசியல் பட்டாசு இன்னும் வெடித்துக் கொண்டிருக்கிறது.

அவரின் அரசியல் கட்சி அறிவிப்பை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், மதுரை திருப்பரங்குன்றம் சரவணபொய்கையில், ரஜினி தலைமை ரசிகர் மன்றம் சார்பில், ரஜினி நீண்ட ஆயுள் பெற வேண்டி வழிபாடு நடத்தினர்.

மேலும் அரசியல் களத்தில் எதிரிகளை வென்று ரஜினிகாந்த் ஆட்சி நடத்த வேண்டும் என சிறப்பு யாகம் நடத்தினர்.

அப்போது ரஜினியின் ஜாதகத்தை ரசிகர்கள் பூஜையில் வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SuperStar fans made special pooja with Rajinis horoscope

More Articles
Follows